குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழருக்கான இந்திய உதவியும் அபிவிருத்தியும்.

10.06. 2011  த.ஆ.2042--எந்த அபி விருத்திக்கும் அப்பிரதேச மக்களின் பங்களிப்பு இன்றி அமை யாததாகும்.சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் 'மாஞ்சோலை' மாதாந்த ஒன்றுகூடல்  சென்ற வாரம் இடம்பெற்றது. இதில் இந்திய உதவியும் அபிவிருத்தியும் பற்றி கலந்துரையாடியோர் வெளிப்படுத்திய கருத்துகள் பேராசிரியர் இரா.சிவசந்திரனால் தொகுத்து வழங்கப்படுகின்றது.
 
                 
                  இந்தியா இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் பிரதேச அபிவிருத்திக்கு உதவுவதையிட்டு மகிழ்ச்சி கொள்ளும் அதே வேளையில் தமிழர்களுக்கான அபிவிருத்தி; எவ்வகையானது என்பதையும், எவ் விளைவுகளை அவை தரும் என்பதையும், இப்பிரதேச மக்களிற்கு பயன்அளிக்குமா என்பதில் முதற்கண் அக்கறை செலுத்த வேண்டும்.  முன்வைக்கப்பட்ட சில திட்டங்களை மறுபரிசீலனை செய்வதோடு அது பிரதேச வளத்தின் சுரண்டலுக்கு வழி வகை செய்யாத முறையில்; அமைய வேண்டும். ஒரு பிரதேச அபிவிருத்தியில் அப்பிரதேசத்தை சேர்ந்த கல்வியாளர்கள், நிபுணர்கள், நிர்வாகிகள், மக்கள் இணைந்து சாதக, பாதக தன்மையை கலந்துரையாடி செயற்படுவதே பொருத்தமானதாகும். முக்கியமாக எந்த அபிவிருத்திக்கும் அப்பிரதேச மக்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். ஏனெனில் அபிவிருத்தி மக்களுக்கானதே.
 
               இந்தியா வடக்கின் அபிவிருத்தியை ஒட்டி சில விடயங்களை துரிதப்படுத்த உள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இதில் முக்கியமாக புகையிரதபாதை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமானதள அபிவிருத்தி, காங்கேசன்துறை சீமேந்து கைத்தொழில் அபிவிருத்தி என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
 
                காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி எமது பிரதேச மக்களிற்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்ற அடிப்படையில் வரவேற்கத்தக்கது என்றாலும் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையை புனரமைப்பு செய்தல் தொடர்பாக இப்பிரதேச கல்வியாளர்கள், சூழலியலாளர்களிடையே சாதகமான கருத்துக்கள் இல்லை. இத் தொழிற்சாலை பிரதேச மக்களிற்கு  வேலைவாய்ப்பை வழங்கும் என்றாலும் இதனால் விளைந்த, விளையப்போகும் சூழல் தொடர்பான ஆபத்துக்கள் பெரிதாகும். 1950 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு 1980 களில் யுத்த சூழ்நிலையால் மூடப்பட்ட இத் தொழிற்சாலை இப்பிரதேச மக்களிற்கு நன்மையை விட தீமையையே விளைவித்துள்ளது. முன்னர் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டிருந்த வைத்தியசாலை தெல்லிப்பளைக்கு மாற்றப்பட்டது.  இதற்கு காரணம் இங்கு காற்றில் பரவிய சீமேந்து தூசி சுகாதார கேட்டினை விளைவித்ததாகும். மேலும் அங்கு காணப்பட்ட பனை மரங்களின் ஓலைகள் வெண்மையாக காணப்பட்டமையும், விளைவிக்கப்பட்ட வெற்றிலையில் சீமேந்து படிவுகள் காணப்பட்டமையும் காய்கறி, பழ மரங்களில் இவை படிந்திருந்தமையும் அக்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்களால் நன்கு உணரப்பட்ட சூழல் மாசாக்கல் பிரச்சினையாகும்.  இவற்றை நுகர்ந்த மக்களிற்கு விளைந்த தீமைபற்றி அப்போது யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மேலும் இங்கு நெருக்கமாக வாழ்ந்த மக்கள் சுவாசிக்கும் காற்றில் இவை பரந்து எவ்வளவு மக்களிற்கு சுகாதார பிரச்சினையை ஏற்படுத்தியது என்பதும் ஆராயப்படாது கவனிப்பாரற்று விடப்பட்ட விடயங்களேயாகும்.
 
          இவை தவிர கடல் மட்டத்திலிருந்து சராசரி 50 அடி உயரமான இப்பிரதேசத்தில் மிகவும் ஆழமாக தோண்டி எடுக்கப்பட்ட சுண்ணக்கல்லால் விளைந்த தீமைகள் முறையாக கணக்கெடுக்கப்படவில்லை.  உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காலத்தில் கூட சுண்ணக்கல் அகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சில சுரங்கங்கள் 100 அடிக்கு   மேற்பட்ட ஆழத்திலும் காணப்படுவதை நாம் அவதானித்திருக்கின்றோம். கடல் பெருக்கம் ஏற்படும் போது இவற்றுள் கடல்நீர் உட்புகுந்து விடும் என்பதில் ஜயமில்லை. இதனால் தரைக்கீழ் நீரை நம்பியிருக்கின்ற யாழ் குடாநாட்டு நீர் நிலைகள் உவர்த்தன்மையடையக் கூடிய சாத்தியக் கூறுகள் பெருமளவில் உள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக்கல் நிலத்தோற்றத்தில் முக்கியமானது கீழே காணப்படும் நீர்க்குகைகளாகும். இதனுள் கடல்நீர் புகுமேயானால் குடாநாடு முழுவதுமே உப்புநீரானது தரைகீழ் ஊடாக நன்நீர் வில்லைக்குள்; கலப்பதற்கான சாத்தியம் உண்டு. குடாநாட்டில்  நன்நீராக  இருந்த கிணறுகளில் 30 வீதமான கிணறுகள் உவர் நீராக  இன்று மாறியுள்ளன.  இந்நிலை அதிகரிக்குமானால் யாழ் குடாநாட்டின் மக்கள் வாழ்வே அற்றுப் போகவேண்டிய நிலை தோன்றும். ஏனெனில் குடாநாட்டில் உள்ள குடியிருப்புகளின் அடிப்படையே தரைக்கீழ் நீரில் தான் வரலாற்றுக் காலம் முதல் இன்றுவரை தங்கி உள்ளது. எனவே இந்தியா இத்திட்டத்திற்கு உதவும் முன்னர் இவ் ஆலையை இயக்குவது பயன் தருமா? என்பது பற்றி இப்பிரதேச கல்வியாளர்கள், நிபுணர்கள், சூழலியலாளர்கள், மக்கள் ஆகியோரிடம் கலந்துரையாட வேண்டுமென கோருகின்றோம்.
 
            செம்மண்ணைக் கொண்ட வளமான இப்பிரதேசம், குடிச்செறிவு மிக்கதாக உள்ளது. இங்கு விமானத்தளத்தை விஸ்தரிக்கலாமா என்பது பற்றியும் மீள் சிந்தனை தேவை. குடாநாட்டில் புகையிரப்பாதை, வீதிகளை அமைக்கும் போது கரையோர பிரதேசங்களை இதற்குப் பயன்படுத்துதல்  அதிக பொருத்தமாக அமையுமா என்பது பற்றியும் சிந்திக்க முடியும்.
 
         இந்தியா வடக்கிற்கு வழங்குவதாக உறுதியளித்த வீட்டுத் திட்டங்கள் கடந்த இரண்டு வருடங்களாக நடைமுறைப்படுத்தவில்லை. இதற்கு அடிப்படை காரணம் இப்பிரதேச மக்களின் கருத்துக்களை கேட்டறியாது இலங்கை அரசை நம்புவதாகும். சுதந்திரத்திற்கு பின்னரான தமிழர் வரலாற்றில் 62 வருடங்கள் எந்த ஒப்பந்தத்தையும், எந்த உறுதி மொழியையும் தமிழர்களுக்காக சிங்கள அரசு செய்ததற்கான சான்றுகள் இல்லை.  இதனை உதவிக்கரம் நீட்டும் இந்திய அரசு முறையாக உணர்ந்து அபிவிருத்தியின் பலன்கள் உண்மையில் இம்மக்களிற்கு கிடைக்க கூடியதாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.