குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

பான் கீ மூனுக்கு ஆதரவளித்து குளிரவைத்துள்ளது இந்தியா குழப்பப்போகிறதுயெயலலிதாவாலும் உ.தமிழர்களாலும்

08 .06. 2011  ஐக்கிய நாடுகளின் ஆசிய குழுப் பிரதிநிதிகள் நேற்றைய தினம் நியூயோர்க்கில்..ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பதவிக்காக இரண்டாவது தடவை போட்டியிடும் பான் கீ மூனுக்கு ஆதரவளிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் ஆசிய குழுப் பிரதிநிதிகள் நேற்றைய தினம் நியூயோர்க்கில் கூடிக் கலந்தாலோசித்த போது இந்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
பான் கீ மூனுக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் பதில் வதிவிடப் பிரதிநிதி மஞ்சீவ் சிங் பூரில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையிடம் ஆசிய பிராந்திய நாடுகளின் நிலைப்பாடு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பான் கீ மூன் கடந்த 2007ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழக சட்டமன்ற தீர்மானம் வரவேற்கத்தக்கது- வைகோ.
08 ஜூன் 2011 
தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது
இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு மீது, ஐ.நா. சபை போர்க் குற்றவாளி என்று அறிவித்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு ஐ.நா. சபையை வற்புறுத்த வேண்டும் என்றும், மேலும் தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய அரசும் பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.
 
சட்டமன்றத்தில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது என வைக்கோ தெரிவித்துள்ளார்.
அனுப்புக முகப்பு, இந்தியச்
வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம் - ஜெயலலிதாவிற்கு பழ. நெடுமாறன் பாராட்டு
08 ஜூன் 2011 
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கி ணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

இராசபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
 
ஆறரைக்கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். இராசபக்சேயைப் போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம் ஆகும். இத்துடன் நின்று விடாமல் முதல்வர் ஜெயலலிதா இந்தியா முழுமையிலும் உள்ள அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அழைத்து டில்லியில் கூட்டம் ஒன்று நடத்தி இத்தீர்மானத்திற்கு அவர்களின் ஆதரவையும் பெறுவதின் மூலம் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவும், இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினைக்கு ஆதரவு திரட்டவும் வழிவகுக்கும் எனவே இந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு அவரை வேண்டிக்கொள்கிறேன்.
 
( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.