குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

ஆசியப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க அஞ்சிய கோத்தபாய

08.06.2011.த.ஆ-2042--வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்படும் என்ற அச்சத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் படைத்துறை அமைச்சின் சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை. மூலோபாயக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் ஏற்பாட்டில் பத்தாவது ஆசிய பாதுகாப்பு மாநாடு சிங்கப்பூரின் சங்கரிலா நட்சத்திர விடுதியில் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகி 5ஆம் திகதி முடிபடைந்திருந்தது.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி 27 நாடுகளின் படைத்துறை அமைச்சர்களுக்கு அழைப்புக்கள் அனுப்பப்பட்டிருந்தன. அவ்வகையில் இலங்கையின் படைத்துறை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், இம்மாநாட்டில் படைத்துறை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ அல்லது படைத்துறைச் செயலாளர் என்ற வகையில் கோத்தபாய ராஜபக்ஷவோ கலந்துகொள்ளவில்லை. படைத்துறை அமைச்சர்களுக்கான இம்மாநாட்டில் இலங்கைப் படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டால் அதற்குப் பதிலளிப்பதைத் தவிர்க்கும் முகமாகவே இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவருடன் இலங்கையின் கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திஸநாயக்கவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். இலங்கையின் படைத்துறை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ அல்லது படைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவோ இம்மாநாட்டில் பங்கேற்றிருக்கவில்லை.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக கொழும்பு கடும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றது. இதன் தாக்கங்கள் இம்மாநாட்டிலும் பிரதிபலிக்கப்பட்டு கொழும்பின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டால், அதற்குப் பதிலளிப்பதில் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே, இம்மாநாட்டில் இத்தகைய கேள்விகள் எழுப்பப்படுவதைத் தவிர்க்கும் நோக்குடனேயே இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திஸநாயக்கவும் அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்மாநாட்டில் அமெரிக்க படைத்துறை அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ், இந்திய படைத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு, பிரித்தானிய படைத்துறை அமைச்சர் லியாம் பொக்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, கொரியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, சிலி, ஜேர்மனி, மியான்மர், மலேசியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் படைத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்
 
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகளுக்கு இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதால், பேச்சின் முடிவுகள் எவ்வாறு அமையும் என இப்போது கூற முடியாது எனவும், பேச்சு முறையாக இடம்பெறுகிறது எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றில் கூறியுள்ளார்.

 தேசிய பிரச்சினைகளை பேச்சுகளின் மூலம் தீர்க்கவே அரசு முயற்சி செய்கின்றது. அந்த அடிப்படையில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி.  ஆகிய கட்சிகளுடன் பேச்சுகளை நடத்தி வருகின்றோம்.

 இந்த மாதம் 23ஆம் திகதி அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சு இடம் பெறும்.  அவ்வாறு பேசாவிட்டால் அரசமைப்பில் திருத்தங் களை ஏற்படுத்த முடியாது.பேச்சுகள் தொடர்ந்து இடம்பெறுவதால் பேச்சுகளின் முடிவுகள் எவ்வாறு அமையும் என இப்போது எதுவும் கூறமுடியாது. பேச்சுகள் திட்டமிட்டபடி முறையாக இடம்பெறுகின்றன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதக்கொள்வனவு ஊழல் விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படமாட்டாது!
 
ஆயுதக்கொள்வனவுகளில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படமாட்டது என்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தரைப்படை, கடற்படை மற்றும் வான்படைக்கான ஆயுதக் கொள்வனவுகளில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டதையடுத்து அதனை விசாரணை செய்யவதற்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்களைக் கொண்ட மேற்படி ஆணைக்குழு ஆயுதக்கொள்வனவுகளில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் விடயங்கள் குறித்த அறிக்கையொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது.

எனினும் இந்த அறிக்கை ஒரு இரகசிய அறிக்கை என்பதனால் அதனைப்பகிரங்கப்படுத்த முடியாது என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் இதுகுறித்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்வார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.Share 0

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.