குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழ் இணையத்திலிருந்து யாழ் சங்கதிகள்

'அவருக்கும், அவற்ற கட்சிக்கும் 200 இடம்.. அவரின்ற தாய்கட்சி மாவட்ட அமைப்பாளருக்கு 100. எஞ்சியது 100 இடம் தான். அதுக்கு விண்ணப்பிச்சவை கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் கிட்ட அதுக்குள்ள இருந்து தான் உந்த நூறைத் தெரிய வேணும். உந்த நூறுக்கும் யாரும் உலைவைக்கினமோ தெரியாது' என்கிறார் விவசாயதுறை சார்ந்த அந்த அதிகாரி. யுத்தத்தின் பின்னரான வடக்கினில் இப்போது எல்லாம் அரசியலாகிப்போய்விட்டது. மலிவான செலவில் விளம்பரமும் அங்கேயே கிடைத்து விடுகின்றது. கோழிக்குஞ்சு கொடுத்தது முதல் மலசல கூடத்திறப்பு விழா வரை இப்போது எல்லாம் அரசியல்தான். நாடாவெட்டுவதும், உதவி கையளிப்பதுமென சம்பிரதாய புகைப்படங்களால் நாளிதழ்கள் நிரம்பியே வழிகின்றன. ஊடக அறிக்கைகளால் மின்னஞ்சல் பக்கங்கள் கூட நிரம்பி விடுகின்றன.
 
யாழ் குடாநாட்டினில் வருடந்தோறும் வேலையற்ற பட்டதாரிகளது எண்ணிக்கை, ஆயிரக்கணக்கினில் கூடிக்கொண்டே செல்கின்றது. அவர்களுள் கணிசமானோர் தமக்கான பொருத்தமான அரச வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்றுமே தெரிந்திருக்கப் போவதில்லை அரச வெற்றிடங்களெல்லாம் பின்கதவுகளால் இப்போது நிரப்பப்பட்டு விடுகின்றதென்பது.
 
வடக்கு மாகாண சபையிலுள்ள அமைச்சொன்று தமது அலுவலகங்களுக்கான சிற்றூழியர்களை நியமிக்க நேர்முகத் தேர்வொன்றை நடத்தியிருந்தது. வழமை போன்று அங்கும், இங்கும் தங்கள் ஆதரவாளர்களை மட்டும் நியமிக்கச சொல்லும் பல பட்டியல்கள் வந்து கொண்டேயிருந்தன. சாதாரண சிற்றூழியர்களை கூட தெரிவு செய்வதற்கான அதிகாரம் கூடவா? தனக்கில்லையென அந்த அமைச்சின் செயலாளர் புலம்பித்திரிந்தது வேறு கதை.
 
வடக்கிலும் மன்னராட்சிதான் நடக்கின்றதென்பதில் எவருக்கும் மாற்று நிலைப்பாடு இல்லை. நாடாளும் மன்னன், ஆட்சிக்கேற்ற வகையினில் குறுநில மன்னர்களை நியமித்தே
உள்ளார். ஆனால் பெரும்பாலான குறுநிலமன்னர்கள் இப்போதெல்லாம் மன்னரை விஞ்சிவிட்டனர்.
வடக்கிலும் அதே நிலை தான்.
 
வடக்கினில் எந்தப் பதவிக்கு யாரை நியமிப்பது, யாரை வீட்டுக்கு அனுப்புவதென எல்லாமுமே இப்போது ஆளுநரின் கைகளிலேயே இருக்கின்றது. கடந்த ஒரு மாததத்தினுள் மட்டும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முக்கிய திணைக்கள தலைவர்கள் பலர் அதிகாரமற்ற சும்மா இருக்கும் இடங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்கள். உள்ளூராட்சி உதவியாளர் மதுமதி வசந்தகுமார், பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் திருவாகரன் ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.
 
வடக்கு மாகாணத்திலுள்ள கல்வித்திணைக்களங்களுக்கான, கல்விப்பணிப்பாளர்களை தெரிவு செய்ய, ஆளுனர் நேரடியாக நேர்முகத்தேர்வொன்றை நடாத்தி முடித்துள்ளார். நான் ஆளுநராக இருக்கும் வரை, உம்மை கல்விப்பணிப்பாளராக இருக்க அனுமதிக்க மாட்டேனென அவர் சவாலும் விடுத்துள்ளார். இவ்வளவிற்கும் குறிப்பிட்ட அதிகாரி நேர்மையானவரும், ஒழுங்கானவரும் கூட என்கின்றன தொடர்புடைய வட்டாரங்கள்.
 
கிளிநொச்சி வலயப் கல்விப்பணிப்பாளரை வேண்டாம் வீட்டுக்கு அனுப்புங்கள் என்கின்றனர் அமைச்சரும், அவரது நாடாளுமன்ற உறுப்பினரும். எல்லாப்பக்கமும் அடிவாங்கும், அந்த பதவிக்கு வர எல்லா அதிகாரிகளுமே இப்போது யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் மீண்டும் மீண்டும் பந்தாடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.
 
பெரும்பாலான வடக்கு மாகாண சபையினதும் ஏனைய நிர்வாக கட்டமைப்பை சேர்ந்தவர்களதும் நோக்கம் கதிரைகளை காப்பாத்திக் கொள்வதாகவே இப்போது இருக்கின்றது. தங்கள் கதிரைகளை காப்பாற்றிக ;கொள்வதற்காக அவர்கள் போராட வேண்டியிருக்கின்றது. ஆதனால் மக்கள் பற்றி அவர்கள் சிந்திப்பதற்க இப்போது நேரமே இருப்பதில்லை. இப்போதெல்லாம் ஆளுநரிடம் நல்ல பிள்ளை பெயர் வாங்கும்போட்டி அதிகாரிகளிடம் என்றுமில்லாத அளவினில் அதிகரித்துள்ளது.
 
யாழ்ப்பாணத்திலாயினும் சரி, வடக்கிலாயினும் சரி கணிசமான அரச  அதிகாரிகள் கரைசேர்ந்தே விட்டதாக சக பாடிகள் கூறுகின்றனர். கொழும்பிலோ அல்லது ஆகக்குறைந்தது வவுனியாவிலோ, பங்களா வொன்றையேனும் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்கின்றனர். வடக்கு இப்போது அனைத்து மட்டங்களிலும் அம்மாக்களின் கைகளிலேயே உள்ளது. ஆனாலும் நம்மூர் அம்மாக்கள், அயல் நாட்டு ஜெயலலிதா அம்மாவிற்கு சற்றும் இளைத்தவர்களல்ல என ஊடககாரர்கள் சரசரக்கின்றனர்.
 
நாங்கள் சொல்வதை கேட்க, சிரமேல் கொண்டு அமுல்படுத்த, பெண் அதிகாரிகளையே ஏனோ அரச தரப்பு விரும்புகின்றது. ஆனால் அவர்களோ தமக்கு கிட்டிவிடும் அற்ப சலுகைகளுக்காக எல்லாவற்றிற்கும் ஆமாம் போடுபவர்களாகிவிடுகின்றனர். ஐ. நா.வின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக அரசுக்கு ஆதரவாக, பதவியேற்ற சில நாட்களிலேயே கொழும்பு சென்று ஒப்பமிட்டு திரும்பியுள்ளார் அம்மணியொருவர். மற்றொருவரோ, முள்ளிவாய்க்காலில் எவருமே உயிரிளக்கவில்லையென கூறி அஞ்சலி செலுத்த மறுத்து எழுந்தோடுகின்றார். மற்றொரு அம்மாவோ இன்னுமொரு படி மேலே போய் முள்ளிவாய்க்கால் படையினருக்கு நற்சான்றிதழ் வழங்குகின்றார்.
 
தெற்கு அரசு எதிர்பார்த்ததைப்போன்று வடக்கில் பொம்மை அரசு ஒன்று உருவாகியே விட்டது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.