குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இஸ்ரேல் - இலங்கை - ஈழம் - யமுனா ராயேந்திரன்

05 .6. 2011--  உலக அரசியல் சார்ந்த அனைத்துப்  பிரச்சினைகளையும் கறுப்பு வெள்ளையாகவும், இருதுருவப் பிரச்சினையாகவும், ஏகாதிபத்தியம்-சோசலிசம் என்பதாகவும் பார்ப்பது எவ்வளவு பிழையானது என்பதற்கான நம் காலத்தின் செவ்வியல் சான்றாக இருப்பது இஸ்ரேலிய இலங்கை உறவு. இவர்களுக்கிடையிலான மனோரதியமான உறவை உண்மையில் நாம் மிக மிக அந்தரங்கமான அரசியல் தேன் நிலவு என்றுதான் சொல்ல வேண்டும்.

 முன்னாள் இலங்கை-பாலஸ்தீன நட்புறவு சங்கத்தின்  தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இஸ்ரேலின் புதிய காதலர். என்ன ஆனது மகிந்த பேசிவந்த பாலஸ்தீன விடுதலையும் அந்த மக்களின் சுயநிர்ணய உரிமையும்? ஈஸி. ஈஸி. அதனையும் ஒரு புறம் இலங்கை அரசு பேசவே செய்கிறது.

 பாவம், பாலஸ்தீனத்தின் முகமது ஹபாஸ் என்ன செய்கிறார்? இஸ்ரேலின் புதிய காதலரான மகிந்தாலை இழப்பது என்பது அவரளவில் ராஜதந்திரத் தோல்வி என்பதால், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான’ இலங்கையின் இனக்கொலையை அவர் போற்றி வரவேற்றிருக்கிறார். இதன் மூலம் இஸ்ரேலினால் பயங்கரவாதிகள் என நாமகரணம் சூட்டப்படும் பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கள் ‘ஜனநாயகவாதிகளாக’ ஆகிவிடுகிறார்கள் என முகமது ஹபாஸ் கருதுவதால் இந்த நிலைபாட்டை அவர் எடுக்கிறார் என நாம் கருதிக் கொள்ள வேண்டும்.

 ஓரே சமயத்தில் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு நண்பனாகவும் எப்படி இலங்கை அரசினால் இருக்க முடிகிறது? ஈஸி. ஈஸி. அதுதான் இலங்கையின் அதி அற்புதமான ராஜதந்திரம்.

 இலங்கை அரசு அமெரிக்காவுடனும் பேசலாம், ரஸ்யாவுடனும் பேசலாம், இந்தியாவுடனும் பேசலாம், இஸ்ரேலுடனும் பேசலாம், எகிப்துடனும் பேசலாம், பாலஸ்தீனத்தினுடனும் பேசலாம். இது அவர்களது ராஜதந்திர நடவடிக்கைக்கான சான்று.

 இதே விடயத்தை, ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற ஒரு அமைப்பு செய்தால் அதற்கு என்னவிதமான முத்திரை குத்தப்படும்? குர்திஸ் விடுதலை அமைப்பு அமெரிக்காவுடன் பேசியபோது அதனை அமெரிக்க ஏவலாள் என்றார்கள். விடுதலைப் புலிகள் அமெரிக்கா, இந்தியா எனப் பிற நாடுகளோடு பேசியபோது அதனை அமெரிக்க இந்திய விசவாசம் எனக் கேவலப்படுத்துகிறார்கள்.

 இன்றைய சர்வதேசிய அரசியலில் ஒரு ஒடுக்கும் அரசு எவரோடும் பேசலாம் எனில், உலக அரசியலில் தமக்கு ஆதரவான நிலைப்பாட்டை வென்றெடுக்கலாம் எனில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் ஒரு இயக்கம் ஏன் தனது மக்களின் நலன்களுக்காக எதிரும் புதிருமான அரசியல் கொண்டவர்களுடன், அந்த நாடுகளுடன் பேசமுடியாது?

 முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய இஸ்ரேலுக்கு விஜயம் செய்து திரும்பியது குறித்த செய்தி இது :

இலங்கை விமானப் படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்தில் அதி நவீன தொழிற்நுட்ப ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளரான உதி சஹானி மற்றும் இஸ்ரேல் விமான உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் ஈசாக் நிஷான் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.    

 அதேவேளை இலங்கைக் கடற்படையினருக்காக கொள்வனவு செய்யப்பட்ட உள்ள 6 ஆவது சுப்பர் டோரா தாக்குதல் படகின் பரீட்சார்த்த பயணத்தையும் கோத்தபாய பார்வையிட்டுள்ளார். இஸ்ரேலிய அரசாங்கத்தின் அழைப்பில் போரில் அங்கு சென்றுள்ள கோத்தபாய கிபீர் விமானங்கள் மற்றும் விமானியற்ற ட்ரோஸ் விமான தயாரிப்பு பிரிவுகளுக்கும் விஜயம் செய்துள்ளார்.

 இந்த நிலையில் வன்னி இராணுவ நடவடிக்கைகளின்போது இஸ்ரேல் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்காக கோத்தபாய நன்றி தெரிவித்துள்ளார்.

 இராஜதந்திர ரீதியில் தனக்கு இணங்கி வருகிற, ராணுவரீதியில் தனது மிகப்பெரும் ஆயுத வாடிக்கையாளராக இருக்கிற தனது சர்வதேசீயக் காதலனான மகிந்தாவுக்கு இஸ்ரேல் எவ்வாறு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வது? இதற்கு என்ன கைமாறு செய்தல் முடியும்?

 இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் மார்க் சோபர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் - அல்லது இஸ்ரேல்-இலங்கைப் புவிச்சூழலுக்கு ஏற்ப ஏதேனும் இரண்டு பழங்களையும் நீங்கள் நிரப்பிக் கொள்ளலாம், என்ன, அந்தப் பழங்கள் இரு நாடுகளதும் கொல்லப்பட்ட வெகுமக்களின் இரத்தத்தில் கொழுத்த பழங்களாக இருக்கும் - அடித்திருக்கிறார் : 

      அரசியல் ரீதியான காரணிகளை முன்னிலைப்படுத்தி ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மூவர் அடங்கிய நிபுணர் குழு அறிக்கை மனித உரிமை ஏதுக்களை முன்னிலைப்படுத்தியதல்ல.

 இந்த நிபுணர் குழு அறிக்கையானது 2009ம் ஆண்டு காஸா தொடர்பான கோல்ட்ஸ்டோன் அறிக்கைக்கு நிகரானது. இஸ்ரேலியர்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு அறிக்கை தயாரித்த நிபுணர் குழுவின் தலைவர் நான்கு மாதங்களின் பின்னர்    தரவுகளில் உண்மையில்லை என ஒப்புக் கொண்டிருந்தார். இஸ்ரேலுக்கு எதிராக சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டன.

 உள்விவகாரப் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

 சில நாடுகளில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்ற போதிலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு அதனை கண்டுகொள்வதில்லை. குறிப்பாக சிரியாவில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை   எடுக்கப்படவில்லை.

 இஸ்ரேல் அமெரிக்காவின் அத்யந்த நண்பன். நட்பில் எப்போதும் அமெரிக்காவைக் கட்டிப் புரளும் நண்பன். மார்க் சோபருக்கு என்ன நடந்தது? தனது உலக நண்பனான அமெரிக்கா இலங்கை அரசின் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி வரும் சூழலில் அதற்கு எதிரான அபிப்பிராயத்தை எதற்காக இப்படிப் பேசியிருக்கிறார்?

 காரணம் தெளிவாக இருக்கிறது. மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகளை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார்.

 காலம் மாறிக் கொண்டிருக்கிறது. காற்று வேறு திசை நோக்கி அடிக்கிறது என அந்த அறிக்கைகளில் அவர் சொன்னார். குறிப்பாக இரண்டாவது அறிக்கையில் இஸ்ரேல் குறித்து, இஸ்ரேலுக்குப் பிடிக்காத ஒரு விடயத்தையும் அவர் சொல்லிவிட்டார். இலங்கையின் இன்றைய ஜனாதிபதியான யூத இனவெறியன் நதானியேவு அதனை உடனடியாக வன்மமாக மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதனைப் பிற்பாடு ஐநா சபையிலும் வலியுறுத்திப் பேசினார்.

 அப்படி என்னதான் பராக் ஒபாமா சொல்லிவிட்டார்? பாலஸ்தீன இஸ்ரேலியப் பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படைகளில் ஒன்றாக இஸ்ரேலியப் படைகள் 1967 ஆம் ஆண்டு இருந்த நிலைக்குத் திரும்ப வேண்டும் என அவர் அறிவித்திருந்தார். இதன்படி 1967 ஆம் ஆண்டின் பிற்பாடு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலங்களில் இருந்து இஸ்ரேல் விலகிவிட வேண்டும். ‘அது முடியாது, சாத்தியமில்லை, எமது குடியேற்றஙகளை அகற்ற முடியாது’  என நதானியேவு தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

 இந்தப் பின்னணியில், பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றிகரமான யுத்தங்களை நடத்தி வரும் இஸ்ரேலிய இலங்கை ஆக்கிரமிப்பாளர்களின் தோழமையையும், இரண்டு இனவெறியர்களின் தேனிலவையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

 இருவரும் பேரினவாதிகள். இருவரும் ஆக்கிரமிப்பாளர்கள். இருவரும் தேசபக்தர்கள். இருவரும் இனக்கொலை செய்பவர்கள்.

 மார்க் சோபர், இலங்கைக்கு ஆதரவான தமது அறிக்கையில் மூன்று விடயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். ஓன்று காஸா தொடர்பான இஸ்ரேலிய மனித உரிமைகள் மீறல் தொடர்பான 2009 ஆம் ஆண்டு ஐநா அறிக்கையின் தரவுகளில் உண்மையில்லை எனச் சொல்லியிருக்கிறார். இரண்டாவதாக சிரியாவில் நடைபெறும் மனி உரிமை மீறல்களை சர்வதேச நாடுகள் கண்டுகொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறார். மூன்றாவதாக இலங்கையின் உள்விவகாரத்தை அந்த நாடே தீர்த்துக் கொள்ளும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

 பாலஸ்தீனப் பிரச்சினையை பயங்கரவாதப் பிரச்சினை எனவும், இஸ்ரேலுக்கு எதிரான உள்நாட்டுப் பிரச்சினை எனவும், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதனை நடைமுறையில் எல்லா விதங்களிலும் தடுத்துவரும் இஸ்ரேல் எனும் நாடு இலங்கைத் தமிழர் பிரச்சினையை இதனைவிட வேறுவிதமாகப் பார்த்திருக்க முடியாது.

 மத்தியக் கிழக்கு நிலைமையைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும், அமெரிக்காவும்-மேற்கத்திய நாடுகளும் அந்தப் பிரதேசத்தில் ‘தேர்ந்தெடுத்த’ மனிதாபிமானத் தலையீட்டைத்தான் நிகழ்த்தி வருகிறது. இந்தத் தேர்ந்தெடுப்பு என்பது அவர்களது அரசியல் மற்றும் பொருளியல் நலன்களின் அடிப்படையிலானது என்பதும் வெளிப்படையானது.

 சவூதி அரேபிய ஆதரவு நாடுகளான பஹ்ரைன் மற்றும் யேமன் போன்ற சன்னி இன மன்னராட்சிகள் உள்ள நாடுகளிலும், சிரியாவிலும் இந்த நாடுகளின் ராணுவங்கள் அந்த மக்களின் எழுச்சிகளை ராணுவங்களின் மூலம் ஒடுக்கி வருகிறது. நூற்றுக் கணக்கலான மக்கள் இதுவரையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த நாடுகளில் பஹ்ரைனின் அமெரிக்காவின் கடற்படைத்தளம் இருக்கிறது. யேமான் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் போரின் கூட்டாளி நாடு. மட்டுமல்ல, மத்தியக் கிழக்கில் இஸ்ரேலின்பால் நல்லுறவு கொண்ட நாடுகளின் பட்டியிலிலுள்ள நாடுகள்தான் பஹ்ரைனும் யேமானும்.

 பஹ்ரைன், யேமான், சிரியா என மூன்று நாடுகளிலும் வெகுமக்களின் மீதான ராணுவத் தாக்குதல்களும் மனித உரிமை மீறல்களும் நடந்து வருகிறபோது இஸ்ரேல் ஏன் சிரியாவை மட்டும் குறிப்பிட்டுக் குற்றம் சுமத்துகிறது? அந்தப் பிராந்தியத்தில் கடுமையான இஸ்ரேலிய எதிர்ப்பாளராக சிரியா இருக்கிறது என்பதுதான் காரணம்.

 மட்டுமல்ல, சிரியாவின் மீது மட்டும்தான் அமெரிக்காவும்-மேற்கத்திய நாடுகளும் ராஜதந்திரத் தடைகளையும் நெருக்கடிகளையும் விதித்திருக்கிறது. தமது நண்பர்களான பஹ்ரைன், யேமான் மனித உரிமை மீறல்களை அமெரிக்காவும் பேசவில்லை. இஸ்ரேலும் பேசவில்லை. இதுதான் சிரியா பற்றிய இஸ்ரேலது மனித உரிமை அக்கறையின் பின்னுள்ள இலட்சணம். அதாவது ‘தேர்ந்தெடுத்த’ மனிதாபிமானம்!

 காஸா குறித்த இஸ்ரேலிய மனித உரிமை மீறல் குறித்த ஐநாவின் 2009 ஆம் ஆண்டு அறிக்கைக்கு வருவோம்.

 தென் ஆப்ரிக்க நீதியதியான ரிச்சர்ட் கோல்ட்ஸ்டன் என்பவரால் எழுதப்பட்ட அந்த அறிக்கை 2008-2009 காலகட்டங்களில் காஸா பகுதியின் மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட 1,400 பாலஸ்தீன வெகுமக்களைப் பற்றிப் பேசுகிறது. இந்த அறிக்கை ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேலியப் படைகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டது. மக்கள் செரிந்து வாழ்ந்த பகுதிகளில் இருந்து ஹமாஸ் ஏவுகனைத் தாக்குதல்களைத் தொடுத்தது எனவும், இஸ்ரேல் வேண்டுமென்றே வெகுமக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி அவர்களைப் படுகொலை செய்தது எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

 இந்த அறிக்கையை முழுமையாக மறுத்த இஸ்ரேலிய அரசு, 400 குற்றச்சாட்டுக்கள் குறித்து தானே ஒரு விசாரணையை நடத்தி அதனை ஐநாவுக்குச் சமர்ப்பித்தது. அதனை உண்மை என ஐநா ஏற்றிருக்கிறது. இதனையடுத்து ரிச்சர்ட் ஸ்டோன் ‘இன்றைக்குத் தெரிந்த  விடயங்கள் முன்பே தெரிந்திருந்தால் எனது அறிக்கை வேறு மாதிரி இருந்திருக்கும்’ என நியூயார்க் டைம்ஸில் (1 யிசடை 2011) எழுதிய பின், ஐநா இந்த அறிக்கையைக் கைவிடவேண்டும் என இஸ்ரேலியப் பிரதமர் நத்தானியேவு ஐநாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 ஹமாஸ் நடவடிக்கையின் எதிர்விளைவாகவே இவை நடைபெற்றன என்பதனை ரிச்சர்ட் ஸ்டோன் குறிப்பிட்டிருக்கிறார். ஹமாஸ் இது குறித்த எந்தவிதமான எதிர்வினையும் செய்திருக்கவில்லை. எனினும் இந்த ஒரு குறிப்பிட்ட ஒரு அறிக்கையின் நுட்பதிட்பங்களை முன்வைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பற்றி நாம் அரசியல் முடிவுக்கு வரமுடியாது. இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு நாடு என்பதனை இது எந்தவிதத்திலும் மாற்றிவிட முடியாது.

 இந்த நிகழ்வைத்தான் மார்க் சோபர் முள்ளிவாய்க்கால் நிகழுவுடன் ஒப்பிடுகிறார். ஸ்டோனது அறிக்கையை இந்த விதத்தில்தான் அவர் ஐநா நிபுணர் குழு அறிக்கையுடன் ஒப்பிடுகிறார். இந்த ஒப்பீட்டை நாம் முழுவதும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை. அதே வேளை முழுமையாக நிராகரிக்கவும் முடியாது. இரண்டு அறிக்கைகளும் விசாரணையைக் கோரி இருக்கிறது என்பது உண்மைதான். இஸ்ரேலிய விசாரணையை ஐநா ஏற்றிருக்கிறது. இலங்கையின் விசாரணையை தமது ஐநா அமைப்பின் சுயாதீனமான குழவின் மேலதிக விசாரணை இன்றி ஒபபுக் கொள்வது சாத்தியமில்லை என ஐநா நிபுணர் குழு சொல்லியிருக்கிறது. அதற்கான காரணமாக இலங்கை அரசின் நீதியமைப்பும் அதனது கடந்த காலச் செயல்பாடுகளும், தற்போது அமைக்கப்பட்டிருக்கும் நல்லிணக்கக்குழவும் சர்வதேச நீதியமைப்பின் தரத்திலானது இல்லை எனவும் அது தெரிவித்திருக்கிறது.

 ஓப்பீடுகளின் அடிப்படையில் இதனைத் தீர்மானிக்க முடியாது. குறிப்பிட்ட சமூகத்தின் நீதியமைப்பு அதனது கடந்தகாலச் செயல்பாடுகள் என்பதனை வைத்தே இதனைத் தீர்மானிக்க முடியும்.

 இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் தண்டனை பெறுமுடிகிறது. இலங்கையில் ஒரு பத்திரிக்கையாளரின் படுகொலைக்கான நீதி என்பது கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருக்கிறது. இவ்வகையில் இரண்டு அறிக்கைகளில் சொல்லப்பட்ட விடயங்களையும், விசாரணை முறைகளையும் ஒப்பிட முடியாது. இலங்கை விடயத்தில் சர்வதேச நிபுணர்களால் நிலைநாட்டப்பட்ட குறிப்பான காணொளி ஆவணங்கள், செய்மதி ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன. இதனை முற்றிலும் மறுக்கிற இலங்கை அரசின் விசாரணைமுறைகளை எந்தவித்திலும் பொருட்படுத்துவது என்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

 ஓரு விடயத்தில் மார்க் சோபரின் அவதானத்தில் எவரும் உடன்பட முடியும்.

 ரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்தித்தான் மனித உரிமை அறிக்கைகள் என்பது தயாரிக்கப்படுகிறது. மனித உரிமை அறிக்கைகள் மட்முல்ல பயங்கரவாதம் எனும் பிரச்சினைகூட அரசியல் காரணிகளை முன்னிறுத்தித்தான் தயாரிக்கப்படுகிறது. இதில் அமெரிக்கா, இஸ்ரேல்,இந்தியா,ரஸ்யா,கியூபா,சீனா என வித்தியாசமில்லை. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் சிரியாவில் மட்டும்தான் மனித உரிமை மீறல் நடக்கிறது. பஹ்ரைனிலும் யேமானிலும் நடக்கவில்லை.

 லிபியாவில் அமெரிக்கா செய்வதுதான் ரஸ்யாவுக்குத் தவறு. தான் செச்சினியாவில் செய்வது தவறு இல்லை. அது பயங்கரவாத எதிர்ப்பு. சீனாவுக்கு திபெத்தில் ராணுவத்தை வைத்திருப்பதோ, தமது நாட்டு மாணவர்களைக் கொல்வதோ, தமது உள்நாட்டில் சிறுபான்மை இஸ்லாமியர்களைக் கொல்வதோ மனித உரிமை மீறல்கள் இல்லை. அது தேசியப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு.

 மலைவாழ் பழங்குடி மக்களின் எழுச்சி இந்தியாவுக்குப் பயங்கரவாதப் பிரச்சினை. இந்தியா அவர்களைக் கொல்வது  மனித உரிமை மீறல் பிரச்சினை இல்லை. கியூபாவுக்கு அமெரிக்கா செய்வது அனைத்தும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு. அமெரிக்காவை எதிர்க்கிற மகிந்த, கடாபி என அனைத்துக் கொடுங்கோலர்களும் தோழர்கள்.

 இதில் அரசியலும், அவரவர் நலனும் இருக்கிறதா? அல்லது அறம்தான் இருக்கிறதா? இந்த நிலைமையில் மனித உரிமை அறிக்கைகள் அரசியல் காரணிகளைக் கொண்டிருக்கிறது என இஸ்ரேல் அங்கலாய்த்திருப்பது முற்றிலும் போலித்தனம்.

 எந்தப் பிரச்சினையும் இன்று அவரவர் அரசியல் நலன் எனும் அடிப்படையில்தான் நோக்கப்படுகிறது. இதில் நிரந்தரக் கூட்டும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தரத் தோழனும் இல்லை.

 இந்த நிலையில் இனக்கொலைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகி நிற்கும் தமிழ் மக்கள் என்னவிதமான நகர்வுகளை மேற்கொள்ள முடியும்? தமது நலன் சார்ந்து அவர்கள் எந்த நாட்டுடனும் பேசலாம், எந்த அமைப்புக்களுடனும் அவர்கள் உரையாடலாம். இனக்கொலைக்கு எதிராகவே தாம் செயல்படுகிறோம், ஓடுக்குமுறைக்கு எதிராகவே நாம் செயல்படுகிறோம் எனும் பிரக்ஞையை மட்டும் அவர்கள் கொண்டிருந்தால் போதும்.

 இவ்வகையில் அவர்களது தேர்வுகள் இரண்டு தளத்தில் முன்னெடுக்கப்படும். தம்மீது நம்பிக்கை வைத்து தமது இலக்கு நோக்கிச் செலுத்தப்படும் மக்கள் திரள் அரசியல் முதலானது. இது தமது எதிர்கால தேசத்துக்கான தார்மீகங்களை நிச்சயம் கொண்டிருக்க வேண்டும். இரண்டாவது சர்வதேச ராஜதந்திர தந்திரோபாய அரசியல். இது தமது நலனும் இருத்தலும் சார்ந்து மேற்கொள்ள வேண்டியது. இதில் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் தமது இறையாண்மைக்காகச் செயல்படும் தமிழர்களுக்கும் என வித்தியாசமான பாதைகள் இல்லை…

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.