குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஆசிய நாடுகளும் கைவிட்டதால் கவலையில் சிறிலங்கா கோத்தாபயவும் ஏமாற்றத்துடனே திரும்பினார் - கொழும்பு

05.06.2011--ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அயலில் உள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவும் தமக்கு ஆதரவாக கருத்து வெளியிடாதது சிறிலங்கா அரசைப் பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்கா பெரும் நெருக்கடி ஒன்றை சந்திக்கவுள்ளது.

இதன்போது இந்தியாவின் ஆதரவு சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது.

ஆனால், இப்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் இந்தியா, பங்களாதேஸ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் தமக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனமாக இருந்து வருவது சிறிலங்காவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது அடுத்த கூட்டத்தொடர் பற்றிய அச்சத்தை சிறிலங்காவுக்கு ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தொடரில் பங்கேற்கும் சிறிலங்கா அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, மகிந்த சமரசிங்க, சட்டமாஅதிபர் மொகான் பீரிஸ், பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவர் தயான் ஜெயதிலக ஆகியோர் கடந்தவாரம் முழுவதும் தமக்கு ஆதரவு தேடி இரவுபகலாக பரப்புரைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்தவாரம் முழுவதும் இந்த நால்வரும், அதிகாலை தொடங்கி பின்னிரவு வரை மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளினதும் பிரதிநிதிகளைச் சந்தித்து, கைகுலுக்கி நண்பர்களைத் தேடுவதிலேயே ஈடுபட்டிருந்ததாகவும் கொழும்பு வார இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொலிப் பதிவு தொடர்பான, அனைத்துலக விசாரணைகளைக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே, இவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் கொழும்பு வாரஇதழ் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது

இரகசியமாக புதுடெல்லி சென்ற கோத்தாபயவும் ஏமாற்றத்துடனே திரும்பினார்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாவதற்கு முன்னர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் புதுடெல்லிக்குச் சென்று இந்திய அதிகாரிகளைச் சந்தித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் இந்தியப் பயணம் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், கடந்தமாதம் 26ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடெல்லி சென்றிருந்தார்.

இந்தியாவின் இறுக்கமான நிலைப்பாட்டைத் தளர்த்தி சுமுகமாக்கும் முயற்சியில் ஈடுபட இவர் எத்தனித்த போதும், இந்தியத் தரப்பு தமது கடும் போக்கில் இருந்து இறங்கி வரவில்லை.

இதனால் பசில் ராஜபக்ச புதுடெல்லியில் இருந்து உடனடியாகவே கொழும்பு திரும்பினார்.

இந்தநிலையிலேயே கோத்தாபய ராஜபக்சவும் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் இந்திய அரசின் நிலைப்பாட்டை தளர்த்தும் முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.

கடந்தமாத இறுதி வாரத்தில் இவர் புதுடெல்லி சென்றிருந்தார்.

இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவின் மகளின் திருமணத்துக்காகவே கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லி சென்றதாக கூறப்படுகின்ற போதும், அவரது பயணத்தின் பிரதான நோக்கம் இந்திய இராஜதந்திரிகளைச் சந்திப்பதேயாகும்.

இந்தியாவின் நிலைப்பாட்டை நெகிழ்வுபடுத்தும் வகையில், கோத்தாபய ராஜபக்ச இந்திய இராஜதந்திரிகள் பலரையும் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால் இவரால் இந்திய உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க முடியவில்லை.

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு கூறப்பட்ட அதே விடயங்களையே கோத்தாபயவுக்கும் இந்திய இராஜதந்திரிகள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.