நியூயார்க்: குடித்துவிட்டு தனது காதலிக்கு போன் செய்து பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் நபரா நீங்கள்? இதோ அதற்கான ஒரு தீர்வு. டிரன்க் மோடு(Drunk Mode) எனப்படும் அப், நாம் குடித்திருந்தால் இரவு நேரத்தில் தனது காதலியிடம் போன் செய்வதை தடுக்கும். இதனை போனின் காண்டம் என கூறப்படுகிறது.
இந்த அப்பின் மூலம் முட்டாள்தனமான காரியங்களை செய்வதை தவிர்த்துக்கொள்ளலாம். ஜோஸ்வா அன்டன் என்ற 23 வயது நபர் இந்த அப்-பை உருவாக்கியுள்ளார். போன் கால் மற்றுமின்றி 12 மணி நேரத்திற்கு சமூக வலைத்தளங்களிலும் எந்த தகவலையும் பதிவு செய்வதை தடுக்கும். மேலும் பிரட்க்ரம்ஸ்(breadcrumbs) அம்சம் கொண்ட இதன்மூலம், இரவு நேரத்தில் தொலைந்து போன குழு உறுப்பினர்களை கண்காணிக்க உதவும்.தகுந்த நிதிஉதவி கிடைத்தபின்பு இந்த அப் வெளியீடப்படும் என தெரிகிறது.