குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சினிமா செய்திகள்

ரயினியின் அடுத்த படம்... சங்கர் இயக்குகிறார்?

ரயினியின் லிங்கா படம் முடிந்து, அதன் ரிலீஸ் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ரசிகர்கள் படத்தை வரவேற்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளனர். இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் மீடியாவில் உலா வர ஆரம்பித்துவிட்டனர். ரஜினி லிங்காவை முடித்ததும், தன் அடுத்த படத்தை மீண்டும் ரவிக்குமாருக்கே தரப் போகிறார் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் ஷங்கர் பெயர் அடிபடுகிறது. இது ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் கதை என்பது மட்டுமே இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சமீபத்தில் நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, தன் படங்கள் தயாராக அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதை விரும்பவில்லை என்றார்.

அதிக இடைவெளி இல்லாமல், படங்களை சீக்கிரம் எடுத்து வெளியிட வேண்டும் என்ற கருத்தைக் கூறினார். இந்த மேடையில் ஷங்கரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியை வைத்து அவர் எடுத்த சிவாஜி வெளியாக இரண்டு ஆண்டுகள் விடித்தது. எந்திரனுக்கு இரண்டரை ஆண்டுகளானது. இப்படி காத்திருப்பது பிடிக்கவில்லை என்று ரஜினி கூறினார். எனவே ரஜினி - ஷங்கர் இணையும் படம் ஒரு ஆண்டுக்குள் முடிகிற மாதிரி எடுக்கப்படும் என்று தெரிகிறது.

 

 

 

 

 

 

தொடங்கியது பாலாவின் தாரை தப்பட்டை!

இளையராஜா இசையில் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு தஞ்சையில் தொடங்கியது. இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக வரலட்சுமியும் நடிக்கின்றனர். இந்தப் படம் இளையராஜாவின் 1000வது படமாகும். இந்தப் படத்துக்காக 13 பாடல்களை ஏற்கெனவே போட்டுக் கொடுத்துவிட்டார் இளையராஜா. கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தின் திரைக்கதையை நேர்த்தியாக்க கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்ட பாலா, படப்பிடிப்பை விறுவிறுவென நடத்தி வருகிறார். இதுகுறித்து நடிகை வரலட்சுமி, "தாரை தப்பட்டை பயணம் தொடங்கிவிட்டது. பாலா மாதிரி ஒரு மேதையுடன் பணியாற்றுவது மிகுந்த ஆர்வத்தைத் தருகிறது.. இந்தப் படம் பெரிய அளவில் வரும்," என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

 

 

 

 

 

விஜய்யின் 60வது படத்தை இயக்கும் கே.வி.ஆனந்த்?

இளையதளபதி விஜய் நடிக்கும் 60 வது படத்தினை கே.வி.ஆனந்த் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது. அப்படத்தின் வெளியிட்டு வேலைகளில் பிசியாக இருக்கிறார் கே.வி. ஆனந்த். இதற்கிடையில் விஜய்யின் 60வது படத்தை இயக்கப்போவதாக கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். ஆக்சன், ரொமான்ஸ் கலந்த கதையாக விஜய் 60 படம் இருக்கும் என்றும் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அநேகன் படம் விஜய்க்காக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்தான் அதில் நடிக்க முடியாமல் போனதால் தனுஷ் நடித்தார். இந்த நிலையில் விஜய்க்காக அடுத்த கதையை தயார் செய்துள்ளார் கே.வி. ஆனந்த். அவரது கனவு இதன் மூலம் நனவாகப்போகிறதாம். தனது அடுத்த பட ஹீரோ விஜய் என்று அறிவித்துள்ள கே.வி. ஆனந்த், விஜய்க்கு ஜோடி யார் என்பதை கூறவில்லை. விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இதனையடுத்து 59வது படமாக "ராஜா ராணி " புகழ் அட்லி உடன் இணைகிறார் விஜய். தொடர்ந்து 60வது படத்திற்கும் தயாராகிவிட்டார் விஜய். 2015 ஆம் ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

அக்காவை தேர்வு செய்துவிட்டு, தங்கையை ஜோடியாக்கிய பாக்யராஜ்! - ஒரு ப்ளாஷ்பேக்

ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.பாக்யராஜ் எழுதி இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தை யாராலும் மறக்க முடியாது. அன்றைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ''என்னுடைய கலையுலக வாரிசு பாக்யராஜ்'' என்று பொதுமேடையில் பெருமையாக அறிவிக்க வைத்த மாபெரும் வெற்றிப் படம் அது. அந்தக் காலத்தில் இப்படம் ஒரு 'டிரென்ட் செட்டர்' என்றே சொல்லப்பட்டது. இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் மெகா ஹிட்டானது. பின்னணி இசை, படத்தை முன்னணிக்குக் கொண்டு வந்தது. அப்படத்தின் சாதனையை, பாக்யராஜின் வேறெந்தப் படமும் இதுவரை முறியடிக்கவில்லை. 'முந்தானை முடிச்சு' உருவானபோது, யாரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் மூழ்கிய பாக்யராஜ், கலாரஞ்சனி என்ற இளம் பெண்ணை வரவழைத்து 'டெஸ்ட் ஷ¨ட்' நடத்தினார். அப்போது அவருடன் வந்த பள்ளி மாணவி, துறுதுறுவென்று இருந்தார். பாக்யராஜ் கேட்ட கேள்விகளுக்கு கலாரஞ்சனி பதில் சொல்வதற்கு முன் முந்திக்கொண்டு பதிலளித்தார். ஒருகட்டத்தில் எரிச்சலடைந்த பாக்யராஜ், ''யார் இது முந்திரிக்கொட்டை மாதிரி தொணதொணன்னு பேசிகிட்டு...'' என்று கத்தினார். அவ்வளவுதான், அந்த மாணவி பம்மிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். பிறகு வீட்டுக்கு வந்த மாணவி, ''சரியான சிடுமூஞ்சி டைரக்டரா இருக்காரு. இவரோட டைரக்ஷன்ல எல்லாம் அக்காவை நடிக்க வைக்க வேணாம்'' என்றார். மனதில் உள்ளதை பட்டென்று போட்டுடைத்த தங்கையின் பேச்சைக் கேட்டு மிரண்ட கலாரஞ்சனி, ''ஏய்... அவரு பெரிய டைரக்டரு. இப்படி எல்லாம் பேசக்கூடாது'' என்று கண்டித்தார். ஆனால், 'முந்தானை முடிச்சு' படப்பிடிப்பு தொடங்கும் வேளையில், திடீரென்று கலாரஞ்சனியை நிராகரித்து விட்டார் பாக்யராஜ். வேறொரு ஹீரோயினுக்கு வலைவீசி தேடிக் கொண்டிருந்தபோது, டெஸ்ட் ஷூட் நேரத்தில் முந்திரிக்கொட்டை மாதிரி தொணதொணவென்று பேசிக் கொண்டிருந்த மாணவி ஞாபகத்துக்கு வரவே, ''அந்த பொண்ணை கூட்டிகிட்டு வாங்கய்யா'' என்று பாக்யராஜ் ஆர்டர் போடவே, உதவி இயக்குனர்கள் ஆளுக்கொரு பக்கம் பறந்து, அந்த மாணவியை அழைத்து வந்தார்கள். தன்னைத் திட்டிய இயக்குனருக்கு எதிரில் வந்து நின்ற மாணவி, ''இப்ப எதுக்கு என்னை வரச் சொன்னீங்க?'' என்று துடுக்குத்தனமாகக் கேட்டார். அதைப் பெரிதும் ரசித்த பாக்யராஜ், ''நீதான் என் படத்துக்கு கதாநாயகி. ரெடியா இரு'' என்றார். இப்படித்தான் 'முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் ஊர்வசி ஹீரோயினாக அறிமுகமானார். ''அப்ப எனக்கு எந்த விவரமும் தெரியாது. டி.வியில் 'ஒளியும் ஒலியும்' பார்த்து முடிச்சதும் தூங்கிடுவேன். அப்படிப்பட்ட நான், ஷூட்டிங் ஸ்பாட்டுல பாக்யராஜ் சாருக்கு கொடுத்த தொல்லை ஏராளம்... ஏராளம். அதையெல்லாம் பொறுத்துகிட்டு, எப்படியோ என்னை ஒரு முன்னணி கதாநாயகியா மாத்திக் காட்டினாரு பாருங்க... அதான் எங்க டைரக்டரோட பெருந்தன்மை. ஒருநாள் நைட் ஷூட்டிங். பாக்யராஜ் சார், நான், அந்த கைக்குழந்தை நடிக்கும் ''சின்னஞ்சிறு கிளியே... சித்திரப் பூவிழியே'' பாட்டை படமாக்கிட்டு இருந்தாங்க. எனக்குதான் ராத்திரி ஏழு மணி ஆனவுடனே தூக்கம் வந்துடுமே. அப்படியே தூங்கித் தூங்கி வழிஞ்சேன். அதனாலயே அந்த பாட்டை ஷூட் பண்ண அதிக நாளாச்சி. என்னால நடிக்க முடியலன்னு, 'ஓ'ன்னு அழுவேன். இதையெல்லாம் பல்லை கடிச்சிகிட்டு, எங்க வாத்தியார் ஷூட் பண்ணி முடிச்சார். அவர் இல்லன்னா, இந்த ஊர்வசி இல்ல. இன்னைக்கி நடிப்புல கமல் சார் கூட என்னை கம்பேர் பண்ணி ஆடியன்ஸ் பேசறாங்கன்னா, அதுக்கு பாக்யராஜ் சார் போட்ட பிச்சைதான் காரணம். அவரை என்னைக்குமே நான் மறக்க மாட்டேன்'' என்று, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் ஊர்வசி. கல்பனா, கலாரஞ்சனி, ஊர்வசி சகோதரிகள் பல மொழிப் படங்களில் நடித்துள்ளனர். கே.பாக்யராஜின் 'சின்ன வீடு' படத்தில், கல்பனா ஹீரோயினாக நடித்திருந்தார். பொதுவாக இந்த சகோதரிகள், மலையாளத்தில் மட்டுமே அதிக படங்களில் நடித்துள்ளனர் அதுபோல், மூவருமே தாங்கள் காதலித்து மணந்தவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர்வசி, தனது நீண்ட நாள் நண்பர் சிவபிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

 

 

எங்கப்பாவுக்கு ஒரு கின்னஸ் தாங்கப்பா.. ப்ளீச்.. ப்ளீச்!.... கோரிக்கை வைக்கும் ஷ்ரத்தா கபூர்

மும்பை: எனது தந்தை சக்தி கபூர் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இது ஒரு சாதனை, அசாத்தியமானது. எனவே அவருக்கு கின்னஸ் சாதனை அமைப்பு கின்னஸ் சாதனை படைத்தவர் என்ற அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று நடிகை ஷ்ரத்தா கபூர் கோரிக்கை விடுத்துள்ளார். பழம்பெரும் இந்தி நடிகரான சக்தி கபூரின் மகள்தான் ஷ்ரத்தா கபூர். பல படங்களில் வில்லனாக, காமெடியனாக நடித்தவர் சக்தி கபூர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அவர் நடித்து வருகிறார். தற்போது 56 வயதாகும் சக்தியின் மகளான ஷ்ரத்தாவும் பாலிவுட்டில் நடிகையாக வலம் வருகிறார். தனது தந்தைக்கு கின்னஸ் சாதனை விருது வழங்க வேண்டும் என்று ஷ்ரத்தா கோரிக்க வைத்துள்ளார். என் அப்பா 700 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். நிச்சயம் இது கின்னஸ் சாதனையாகும். எனவே அவருக்கு கின்னஸ் அமைப்பு விருது வழங்கிக் கெளரவிக்க வேண்டும். யாருமே இவ்வளவு படங்களில் நடித்ததில்லை. எனவே கட்டாயம் இது கின்னஸ் சாதனைதான் என்று அடித்துக் கேட்கிறார் ஷ்ரத்தா. வில்லத்தனத்துடன் காமெடியைக் கலந்து கொடுத்து கலக்கிய நடிகர் சக்தி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கைதராபாத்: விஜய் கேமராவுக்கு முன்னால் ஒரு மாதிரியும், பின்னால் வேறு மாதிரியும் இருப்பார் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சமந்தா, தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யுடன் நடித்தது பற்றி கூறுமாறு மகேஷ் சமந்தாவிடம் கேட்டார்.

அதற்கு சமந்தா கூறுகையில், விஜய் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருப்பார். இயக்குனர் மட்டும் அவரிடம் எதுவும் செய்யாமல் இருக்குமாறு கூறினால் 2 மணிநேரம் ஆனாலும் கூட அவர் யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பார். ஆனால் கேமராவுக்கு முன்பு வந்துவிட்டால் நடிப்பில் அசத்துவார்.

அமைதியாக இருக்கும் இவரா கேமராவுக்கு முன்னால் இப்படி நடிக்கிறார் என்று வியப்பாக இருந்தது. ஒரு வேளை அவருக்கு ஸ்பிளிட் பர்சனாலிட்டியோ என்று கூற நினைத்துள்ளேன். நகைச்சுவை, நடனம், சண்டை காட்சிகள் என்று எந்த காட்சியாக இருந்தாலும் அசத்துவார். அவர் கேமராவுக்கு முன்னால் ஒரு மாதரியும், பின்னால் வேறு மாதிரியும் இருப்பார் என்றார்.

 

 

 

 

 

 

அப்பாவாக என்னைத் தத்தெடுத்தார் ரஜினி! - பாலம் கல்யாணசுந்தரம்

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க.. அப்பாதான் இல்லை. எனவே உங்களை அப்பாவாக தத்தெடுக்கிறேன் என்று கூறி பாலம் கல்யாணசுந்தரத்தை அப்பாவாக்கிக் கொண்டாராம் ரஜினி. இந்த சம்பவத்தை இன்று நடந்த பெருமாள் கோயில் உண்டசோறு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கல்யாணசுந்தரமே சொன்னார். இந்த விழாவில் பேசிய அவர், ‘‘நான் பொதுவாக இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இப்படத்தின் இயக்குனர் ராஜா விழாவில் கலந்த கொள்ள வந்து கூப்பிட்டார். ஒரு முறைக்கு 10-முறை அழைத்தார். ஒருமுறை வந்து கூப்பிட்டாலே வந்து விடுவேன் என்று அவரிடம் கூறிவிட்டு விழாவிற்கு வந்தேன். ரூ 30 கோடி என்னைப் பற்றி இங்கு பலர் புகழந்து பேசினார்கள். எனது சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் எனக்கு விருதுடன் 30 கோடி ரூபாய் பணமும் கிடைத்தது. அந்த பணத்தை அங்குள்ள தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை செய்தேன். அது நான் சம்பாதித்த பணம் அல்ல. மேலும் எனக்கு குழந்தைகள் இல்லை. ஆகவே, நான் அதை நன்கொடை செய்தேன். அம்மா அறிவுரை இந்த நேரத்தில் எனது அம்மா சொன்ன அறிவுரைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. அவர், ‘வாழ்க்கையில் பேராசை கூடாது. ஒரு நாளைக்கு ஒரு உயிருக்காவது உதவி செய்ய வேண்டும். சம்பாதிக்கிற பணத்தில் 10-ல் ஒரு பங்கை நல்ல காரியங்களுக்கு செலவழிக்க வேண்டும்' என்றார். எனது அம்மா சொன்னதை நான் கடைபிடித்து வருகிறேன். பென்சன் பணம் நான் ஓய்வு பெறும்போது எனக்கு 10 லட்சம் ரூபாய் கிடைத்தது. எனக்கு குழந்தை இல்லாததால் அந்த பணத்தை நன்கொடை செய்தேன். தத்தெடுத்த ரஜினி இது தொடர்பாக எனக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினி, 'எனக்கு இரு மகள்கள் உள்ளனர். அப்பா தான் இல்லை. ஆகவே, பாலம் கல்யாணசுந்தரத்தை தந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறேன்' என்று கூறினார். பெரிய விஷயம் குழந்தைகள் இல்லாத நான் நன்கொடை செய்தது பெரிய விஷயம் இல்லை. ஆனால், குழந்தைகள் உள்ள ஒருவர் இது போல் நன்கொடை செய்துள்ளார். ஆனால், அவர் பெயர் வெளியே தெரியவில்லை,'' என்றார். பில் கிளின்டன் இந்தியா வந்தபோது அப்துல் கலாம் மற்றும் பாலம் கல்யாண சுந்தரம் ஆகிய இருவரையும் மட்டும்தான் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சன் குடும்ப விழாவிற்கு வந்த குஷ்பு… ரெட் கார்பெட் வரவேற்பு

சென்னை: காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த குஷ்பு மீண்டும் சன் குடும்பத்திற்குள் எப்படி வந்தார் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? சன் டிவி வழங்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில்தான் குஷ்பு பங்கேற்றார். சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் சிறப்பாக நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சன் டிவி., ‘சன் குடும்பம் விருதுகள்' என்ற பெயரில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. சின்னத்திரை கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 18 சீரியல்கள் சன் டி.வி.யில் தினமும் காலை முதல் மாலை வரை, ‘சொந்த பந்தம்', ‘பொம்மலாட்டம்', ‘தேவதை', ‘மரகத வீணை', ‘பொன்னூஞ்சல்', ‘இளவரசி', ‘வள்ளி', ‘கல்யாணப்பரிசு', ‘பிள்ளை நிலா', ‘முந்தானை முடிச்சு', ‘பாசமலர்', ‘நாதஸ்வரம்', ‘தெய்வ மகள்', ‘வம்சம்', ‘தென்றல்', ‘வாணி ராணி', ‘சக்தி', ‘அழகி' ஆகிய பதினெட்டு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்தத் தொடர்களில் இருந்தே விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 26 பிரிவுகளில் விருதுகள் சிறந்த கதாநாயகன், கதாநாயகி, அப்பா, அம்மா, மாமியார், மருமகள், அண்ணன், தங்கை, வில்லன், வில்லி, நகைச்சுவை நடிகர், நடிகை, இயக்குனர், ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா, திரைக்கதை, இசை உட்பட மொத்தம் 26 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. பிரம்மாண்டவிழா ஒவ்வொரு பிரிவில் இருந்தும் நான்கு பேர் பரிந்துரைக்கப்பட்டு அதில் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விழா, மாமல்லபுரத்தில் உள்ள கான்புளூயன்ஸ் கன்வென்சன் சென்டரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. சிறந்த கதாநாயகன் இந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருதுக்கு ‘பொம்மலாட்டம்‘ தொடரில் நடிக்கும் ஸ்ரீகுமார், ‘நாதஸ்வரம்' தொடரில் நடிக்கும் திருமுருகன், ‘தெய்வமகள்' தொடரில் நடிக்கும் கிருஷ்ணா, ‘தென்றல்' தொடரில் நடிக்கும் தீபக் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். சிறந்த நாயகி சிறந்த கதாநாயகி விருதுக்கு ‘வாணி ராணி' ராதிகா, ‘நாதஸ்வரம்' ஸ்ருத்திகா, ‘தெய்வமகள்' வாணி போஜன், ‘தென்றல்' ஸ்ருதி ஆகிய 4 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். சிறந்த ஜோடி சிறந்த ஜோடிக்கான விருதுக்கு ‘பொம்மலாட்டம்‘ ஸ்ரீகுமார்-ஸ்ரீஷா, ‘தென்றல்' தீபக்-ஸ்ருதி, ‘நாதஸ்வரம்' திருமுருகன் - ஸ்ருத்திகா, ‘பொன்னூஞ்சல்' விஸ்வா- அபிதா பரிந்துரைக்கப்பட்டனர். வாழ்நாள் சாதனையாளர் கடந்த 16 ஆண்டுகளாக சன் டிவி சீரியலில் ராதிகாவிற்கு அப்பாவாக நடிக்கும் ரவிகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த அக்கா, அண்ணன் சிறந்த அக்காவாக சீமா, சிறந்த சகோதரனாக - ஸ்டாலின் சிறந்த துணை நடிகராக பப்லு, சிறந்த துணை நடிகையாக பப்லு, சிறந்த துணை நடிகையாக அனுராதா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறந்த மருமகன் விஸ்வா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் என்னகாரணமே விருது வாங்க அவர் வரவில்லை. நெகிழ்ந்த பப்லு சிறந்த துணை நடிகர் விருது பெற்ற நடிகர் பப்லு என்ற பிரிதிவிராஜ், தனது மகன், மனைவி கையினால் விருது பெற்றார். அந்த தருணத்தை நெகிழ்ச்சியுடன் அனுபவித்தாக கூறினார். ராதிகாவின் நினைவுகள் நிகழ்ச்சியில் மனோபாலா, நளினி ஜோடியின் காமெடி நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அரண்மனை படத்தை உல்டா செய்திருந்தனர். ராதிகா, ரம்யா கிருஷ்ணனிடம் அவர்களின் பழைய நினைவுகளை பேட்டி எடுத்தார் மனோபாலா. சிறந்த வில்லிகள் விழாவில் சிறந்த வில்லிகளாக வள்ளியில் இந்திரசேனாவாக நடித்த ராணியும், தெய்வமகள் தொடரில் நடித்த காயத்ரியும் தேர்வு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். குடும்ப விழாவில் குடும்பமாக சின்னத்திரை கலைஞர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொண்டனர். சின்னத்திரை கலைஞர்களின் நடனம், நகைச்சுவை நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கூடுதல் கவர்ச்சியில் ஓவியா சின்னத்திரை நடிகர்களுக்கான விருதுவிழா என்றாலும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நடிகைகள் ஆண்ட்ரியா, பூஜா, ராய் லட்சுமி, பூர்ணா, விசாகா சிங், நந்திதா, ஓவியா ஆகியோர் கலைநிகழ்ச்சிகளில் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். நிகழ்ச்சியில் ஓவியாவின் கவர்ச்சி கூடுதலாகவே இருந்தது. ஒரே புகழ்மழைதான் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ், ஆதி, கிருஷ்ணா, ஷாம், வசந்த் விஜய், வைபவ், வெங்கட்பிரபு, சிவா, ஆரி, திலீபன் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பிரபு சாலமன், சரண், கண்ணன், துரை, பாடலாசிரியர் விவேகா உட்பட பலர் கலந்துகொண்டதோடு சன்டிவி நிறுவனத்திற்கு ஒரே புகழ்மழை பொழிந்தனர் என்பதுதான் சிறப்பம்சம். குஷ்பு மேட்டருக்கு வருவோம் இந்த விழா மாமல்லபுரத்தில் நடைபெற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. சன்டிவியில் நேற்று ஒருபகுதியைத்தான் ஒளிபரப்பினார்கள் அடுத்த பகுதி வரும் 7ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. எனவே எந்த கட்சியிலும் இல்லாத போதுதான் குஷ்பு சன்டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் எனவே அவர் சன் குடும்ப விழாவில் பங்கேற்றது காங்கிரஸ் கட்சியினருக்கு ஆச்சரியமாக இருக்காது என்றே நம்பலாம்.

 

மணிரத்னம் படம் மூலம் பெரிய திரைக்கு வரும் டிவி தொகுப்பாளினி ரம்யா!

பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் டிவி ரம்யா முதல் முதலாக சினிமாவில் நடிக்கிறார். மணி ரத்னம் இயக்கும் புதிய படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவராகவும் உள்ளார் ரம்யா. இதுவரை தொலைக்காட்சிகளில் மட்டுமே தோன்றி வந்த இவர் ஓகே கண்மணி என்ற தற்காலிகப் பெயர் கொண்ட படத்தில் நடிக்கிறார். இதனை மணிரத்னம் இயக்குகிறார். துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் இந்தப் படம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதில் கதாநாயகியுடன் வரும் வேடத்தில் ரம்யா நடிக்கிறார். இதற்காக டெல்லியில் முகாமிட்டு நடித்து வருகிறார் ரம்யா. இதற்கு முன் மொழி படத்தில் ஒரு காட்சியில் வந்து போனார் ரம்யா.

 

 

 

சின்ன படங்களின் விழாவுக்கு கூப்பிட்டால் கடன்காரனைப் போல பார்க்கிறார்கள் விஐபிகள் - பேரரசு

சென்னை: சின்ன பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட்டால் கடன்காரனைப் போலப் பார்க்கிறார்கள் விஐபிக்கள் என்றார் இயக்குநர் பேரரசு. புதுமுகங்கள் நடித்துள்ள பெருமாள் கோயில் உண்டசோறு படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், நடித்துள்ள சந்தோஷ் குமார், பாபுஜி, வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோ சிவா, டான்ஸ் ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா, இயக்குனர் வி.டி. ராஜா, இசையப்பாளர்கள் ஆர்.ஆர்.கார்த்திக்-பாலபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த பேரரசு, கண்ணெதிரே தோன்றினாள் படத்தை இயக்கிய ரவிச்சந்திரன், சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் இயக்குனர் பேரரசு பேசும்போது, ‘‘இந்த படத்தைப் போல் குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் படங்களின் விழாக்களுக்கு வி.ஐ.பி.க்கள் வர மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள். இதுபோன்ற படங்களை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்களை பட விழாவிற்கு அழைக்கச் சென்றால், கடன்காரர்களை பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள். உண்மையில் சினிமாவை நேசிப்பவர்கள் இம்மாதிரி சிறு முதலீட்டில் உருவான பட விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும்.

 

சிவாவுக்காக சைவத்துக்கு மாறிய அஜீத்

சென்னை: சிறுத்தை சிவாவின் படத்திற்காக உடல் எடையை குறைக்க அஜீத் சைவத்திற்கு மாறியுள்ளார். அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. படத்தின் டீஸர் வரும் 4ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க அஜீத் தனது உடல் எடையை குறைத்து கும்மென்று ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜீத் தன்னை வைத்து வீரம் படத்தை எடுத்த சிவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். அந்த படத்தில் அஜீத் ஸ்லிம்மாக இருக்க வேண்டுமாம். அதனால் அவர் மூன்று வேலையும் காய்கறிகள், பழங்களை தான் சாப்பிடுகிறாராம். சைவத்திற்கு மாறியுள்ள அஜீத் தற்போதே 3 கிலோ எடையை குறைத்துள்ளாராம். பூசினாற் போல் இருந்த அஜீத் கௌதமுக்காக கும்மென்று ஆனார். தற்போது சிவாவுக்காக ஒல்லியாகிறார். உடல் எடையை ஏற்றுவதும், குறைப்பதும் அஜீத்துக்கு ஒன்றும் புதிதன்று.

 

 

ஜிவி பிரகாஷ் மூன்று நாட்கள் தூங்காமல் நடித்துக் கொடுத்த பேய்ப் படம்!

இது நகைச்சுவை திகில் படங்களின் காலம். இந்த ரகப் படங்களுக்குதான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது. அதை உணர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டார்லிங்' சிரிக்க மட்டுமல்ல ரசிக்க, பயமுறுத்த வரும் படமாக உருவாகி வருகிறது. சுமார் 50 படங்களுக்கு இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் முதலில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய படம் ‘பென்சில்' என்றாலும் ‘டார்லிங்' முந்திக் கொண்டு வெளிவரவிருக்கிறது. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்ரம்' படத்தின் ரீமேக்தான் இந்த ‘டார்லிங்'. அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன. சாம் ஆண்டன் இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் ‘டார்லிங்' பற்றி கதாநாயகனும் பாடகி சைந்தவியின் டார்லிங்குமான ஜி.வி.பிரகாஷ் பேசும் போது , "நான் யதேச்சையாக ஸ்டுடியோ க்ரீன' ஞானவேல்ராஜா சாரைச் சந்தித்தேன். ‘பென்சில்' படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எடுத்த சில காட்சிகளை பார்த்தார். அவருக்குப் பிடித்திருந்தது. அன்றே இந்த படம் பற்றிக் கூறினார். ‘பிரேம கதா சித்ரம்' ஒரு ஹாரர் படம். தெலுங்கில் மட்டுமல்ல கன்னடத்திலும் பெரிய வெற்றி பெற்ற படம். இதை தமிழில் எடுப்பது பற்றிப் பேசினார். நடிப்பது என்று முடிவு செய்தேன். இதன் தயாரிப்பில் கீதா ஆர்ட்ஸ், ஸ்டுடியோ கீரீன் என்று இரண்டு பெரிய நிறுவனங்கள் இணைந்தது கூடுதல் மகிழ்ச்சி. அந்த ஒரிஜினல் படம் ‘பிரேம கதா சித்ரம்'தை விட காட்சி அமைப்பிலும் ஒலி அமைப்பிலும் சிறப்பாக பிரமாதமாக அமையும்படி நிறைய உழைத்திருக்கிறோம். ஒரு வெற்றிப் படத்தை மறுபடி எடுக்கும்போது அதைவிட மேம்பட்ட தரத்தில் எல்லா வகையிலும் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். நான் நடித்த முதல் படம் ‘பென்சில' என்றாலும் வெளிவரும் முதல் படமாக ‘டார்லிங்' படம் இருக்கும்," என்றார். சான் ஆன்டன் படத்தின் இயக்குநர் சாம் ஆண்டன் கூறுகையில், "இது எனக்கு முதல்படம். நண்பர் லெட்சுமணன் மூலம் இந்த வாய்ப்பு வந்தது. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்ரம்'த்தின் எடுத்துக் கொண்டு தமிழுக்காக நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம். வித்தியாசப்படுத்தி எடுத்திருக்கிறோம். ஹாரர், காமெடி, லவ், வித்தியாசம் என்று தரமான கமர்ஷிpயல் கதையாக படம் உருவாகியுள்ளது. ஹாரரும், ஹியூமரும் புதுவித சேர்க்கையாக படத்தில் பேசப்படும். படம் நன்றாக வர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர் கொடுத்த சுதந்திரம்தான் காரணம். கேட்டதெல்லாம் கொடுத்தார். அதனால்தான் நினைத்தபடி எடுக்க முடிந்தது. சுமார் ஐம்பது படங்களுக்கு இசையமைத்தவர் என்றாலும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் கொடுத்த ஒத்துழைப்பு பெரியது. மீண்டும் மீண்டும் நடிக்கச் சொன்னாலும் அலுத்துக் கொள்ளாமல் நடித்தவர். படக்குழுவையே கஷ்டப்பட வைத்தேன். கதாநாயகன் உள்பட பலரையும் பல நாட்கள் தூங்கவிடவில்லை. நாயகி நிக்கி கலராணி நடித்திருக்கிறார். கருணாஸ் தன்னை புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தி சிரிக்க வைத்துள்ளார். பால சரவணனும் அப்படித்தான். ‘நான் கடவுள்' ராஜேந்திரன் ஏற்றுள்ள வேடமும் பேசப்படும். கிருஷ்;ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். 35 நாட்களில் திட்டமிட்டு 33 நாட்களில் முடித்ததற்கு அவரது அசுர உழைப்புதான் காரணம். தயாரிப்பாளர்கள் கொடுத்த ஊக்கமும் ஆதரவும் பெரிய விஷயம். என்ன கேட்டாலும் செய்து கொடுத்தார்கள். ஜி.வி.பிரகாஷ் இரண்டு, மூன்று நாட்கள் தூங்காமல் நடித்துக் கொடுத்தார். அதுமட்டுமல்ல அருமையான பாடல்களையும் போட்டுக் கொடுத்துள்ளார். அதில் குறிப்பாக ‘அன்பே அன்பே', 'உன் விழிகள் பாடல்கள்..' என் பேவரைட் என்பேன். பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசையிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்," என்றார். ‘டார்லிங்' டிசம்பர் மாத்தில் வெளியாகிறது.

 

நான் மோடியின் மிகப் பெரிய ரசிகை, அவரைப் பற்றி பேசிக்கிட்டே இருப்பேன்: ஷில்பா ஷெட்டி

லக்னோ: தான் பிரதமர் நரேந்திர மோடியின் மிகப் பெரிய ரசிகை என்று பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் பி.சி. ஜுவல்லர் நகைக்கடையை திறந்து வைக்க பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை அழைத்திருந்தார்கள். ஷில்பா வரும் செய்தி அறிந்து ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு குவிந்துவிட்டனர். அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கி வந்து ஷில்பா நகைக்கடையை திறந்து வைத்தார். தன்னைப் பார்க்க இத்தனை ரசிகர்கள் கூடியதை பார்த்து ஷில்பா நெகிழ்ந்துவிட்டார். நகைக்கடையை திறந்து வைத்த ஷில்பாவிடம் செய்தியாளர்கள் பிரதமர் மோடி பற்றி கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், நான் பிரதமர் மோடிஜியின் மிகப் பெரிய ரசிகை. அவரைப் பற்றி பேசினால் அவர் அந்த நல்லதை செய்தார், இதை செய்தார் என்று பேசிக் கொண்டே இருப்பேன் என்றார். மோடியின் சுத்தமான இந்தியா சவாலை பாலிவுட்காரர்கள் பலரும் ஏற்றுள்ளனர். அவர்களை பாராட்டி மோடியும் ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.