குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அமெரிக்காவில் பழுதின் காரணமாக அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்!

கனெக்டிகட்: அமெரிக்காவின் மேற்கு ஃபோர்ட் ஹார்டில் உள்ள கனெக்டிகட் நகரத்தில், விமானம் ஒன்று பழுதானதால் சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.  கடந்த சனிக்கிழமை மதியம் விபத்துக்குள்ளான இந்த விமானத்தை கனெக்டிகட் அருகிலுள்ள கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த டேனி ஹால் ஓட்டினார்.

விமானத்தை திடீரென சாலையில் தரையிறக்கிய போதும், அவர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

தன்னுடைய ஸ்கைலைன் விமானத்தில் செல்லும்போது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்த அவர், விமான நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார். ஒருவேளை விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியவில்லை என்றால், என் குழந்தைகளிடம் நான் அவர்களை உயிராக நேசிப்பதைச் சொல்லி விடுங்கள் என்று விமான கட்டுப்பாட்டு துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு நிலைய அதிகாரி நீங்கள் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்க வாழ்த்துக்கள் என்றார்.

இந்த விபத்தில் விமானத்தின் இறக்கைகள் முறிந்தது, மேலும் இஞ்ஜினிலிருந்து புகை வர ஆரம்பித்தது. விபத்து நடந்த பகுதியை விட்டு தூரமாக வந்த பின்னரே பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்ததாக, இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படாதது மனதுக்கு ஆறுதலாக உள்ளது என்று ஹால் கூறியுள்ளார்.


 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.