குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

ஏழைதாசனின் ஏட்டிலிருந்து ஈழத்தமிழர் எழுச்சிப் பாக்கள்

ஏழைதாசனின் ஏட்டிலிருந்து ஈழத்தமிழர் எழுச்சிப் பாக்கள்
1.அய்.நா.வில் வினா எழுப்புவான்
  எதிர்காலத்தில்
  ஈழத் தமிழன்!

  வைகை ஆறுமுகம் - திருப்பூர் 2. முற்றும் அழிவதில்லை
    மறுநாள் உதிக்கும்
    எழுச்சிச் கதிரவன்.
  
    குமாரி.தே.இரம்யா


3.காற்றின் திசை மாறினாலும்
  மேல் நோக்கியே எரியும்
  விடுதலைத் - தீ

 

4.உலகெங்கும்
  விதைக்கப்பட்டிருக்கின்ற
  தமிழ் விதைகள்

  யாதுமானவன் - கீழருங்குணம்

5.சாம்பல் அல்ல
  நீறுபூத்த நெருப்பு
  காலக்காற்றே வீசு!

  வே.ம.தமிழரசு.

6.ஈழத்தமிழரின் தோல்வி
  உலகத் தமிழர் கற்ற பாடம்
  உதயமாகும் ஈழத்தமிழர் உரிமை

  போழூர் - தயாநிதி

7.அப்பாவித் தமிழர் பெயரில்
  அரசியல் விபச்சாரம்
  கொழுக்கும் கருணாக்கள்!
 
  ஏழைதாசன்-அடப்பன்வயல்.புதுக்கோட்டை

8.வதை முகாம்
  வரிசையில் வாடுகிறது
  விருந்தோம்பிய தமிழினம்!

  வே.ம.தமிழரசு

9.பாதுகாப்பு முகாமில்
 இருக்கிறார்கள் தமிழர்கள்
 எந்தப் பாதுகாப்புமின்றி

 வழக்கறிஞர்.இ.தி.நந்தகுமாரன்
 வளசரவாக்கம்.சென்னை-87

10.தாய்ப் பாலுக்கு
   கதறி அழும் குழந்தை
   சடலமாய் ஈழத்தாய்!

 வெ.இராம்குமார் .வேலுார்
 தொடரும்.................
   தொகுப்பு- முல்லைமைந்தன்

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.