குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 24 ம் திகதி புதன் கிழமை .

முன்பு இந்தியா சிரித்தது நேற்று அய்.நா.அழுதது .இலங்கை தற்போது விழிக்கிறது.

 04.06.2011--யெனீவாவில் ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில் சனல்4  அறிவித்த 'இலங்கையின் கொலைக்களம்' என்னும்  போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கிய சனல்4 வெளியிட்டுள்ள இத்திரைப்படம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மிக முக்கியமான பேசு பொருளாக இருந்தது.

பார்வையாளர்களின் கண்களில் இருந்து பெருகிய கண்ணீரும், சில காட்சிகளை பார்க்கமுடியாது கண்களை மூடிக்கொண்டோரையும், தொடர் குண்டுச் சத்தங்களை கேட்கமுடியாமல் தவித்தோரையும் சனல்4 ஊடகம் வெளியிட்டுள்ளது.

இக்கூட்டத்தொடரில் வெளியான இப்போர்க்குற்ற திரைப்படத்தினை பார்வையிட்ட இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் பார்வையிட்ட போதிலும், தாம் ஏற்கனவே இக்காணொளிகள் தொடர்பாக விசாரணைக்கு உட்பட்டுவிட்டதாக தட்டுத்தடுமாறி கருத்து தெரிவித்திருப்பினும், சனல்4 செய்தியாளர் ஜொனத்தன் மில்ரர் சந்தித்து உரையாட முற்பட்டவேளை 'தனக்கு ஒரு மீட்டீங்' இருப்பதாக கூறி அங்கிருந்து விரைந்து சென்றது காணக்கூடியதாக இருந்தது.

செல்பேசியில் பதியப்பட்ட, தமிழ் பொது மக்கள் படையினரால் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படும் காட்சியும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் இலாவகமாக சனல் 04  தொலைக்காட்சியின் செய்தியாளரான ஜோன் ஸ்னோவால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சரணடைந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகவும் காடைத்தனமான தாக்குதல் காட்சிகள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள், பெண் புலி உறுப்பினர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளும் அதன் பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகளும் சனல் 04 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதால் பார்ப்போரை அழவைத்துள்ளது.

இதேவேளை யுத்தத்தின் இறுதி நேரத்தில் விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய காட்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனல் 04 தொலைக்காட்சியானது இதுவரை வெளியிடாத மிகவும் பயங்கரமான தமிழ் மக்கள் மீதான கண்மூடித்தனமான போர் அவலக் காட்சிகளையும் இந்த ஆவணத் திரைப்படம் தாங்கியுள்ளது.

SriLanka’s Killing Fields இலங்கையின் படுகொலைக் களம் என வெளியான இத்திரைப்படம் எதிர்வரும் 14ம் திகதி மக்கள் பார்வைக்காக விடப்படும் என சனல்4 செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


சனல் 4ன் கொலைக்களம் திரைப்படத்தின் காட்சிகள் தமிழகத்தில் உருவாக்கப் பட்டவை - திவயினவின் கண்டுபிடிப்பு

இலங்கை இராணுவத்தினரின் போர் குற்றம் தொடர்பாக செனல் 4 தொலைக்காட்சி நேற்று ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் திரையிட்ட கொலைக்களம் திரைப்படத்தின் காட்சிகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.

 இலங்கையின் போர்க்குற்ற ஐ.நா. அறிக்கையில் எந்த மாற்றமும் இல்லை!
சனி, 04.6. 2011 17:28    .
இலங்கையில் நிகழ்ந்த போர் குற்றங்கள் குறித்த ஐ.நா. அறிக்கை குறித்து அமெரிக்கா மேற்கொண்டுள்ள கொள்கை நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியதாகவும், அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. குழுவினரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதற்கு ஆதாரங்களையும் அந்த அறிக்கை கொண்டிருக்கிறது.

போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஐ.நா. அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து ராஜபக்ச அரசு இந்த விஷயத்தில் நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தெளிவாக தெரிந்த நிலையில், அது குறித்து வெளிப்படையான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.Share 0

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.