01.12.2014-வழமையாக இம் மாநகரசபைக்கான தேர்தலில் சோசலீச சனநாயகக் கட்சியின் (SP) எட்டு ஆசனங்களைப் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது, இம்முறை வழமைக்கு மாறாக ஒன்பது ஆசனங்களைப் பெற்று ஒரு ஆசனம் அதிகமாகப் பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற ஒன்பது வேட்பாளர்களில் இருவர் ஒருவருட காலத்தில் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளனர். அவர்கள் இராஜினாமா செய்யும் ஒரு இடத்திற்கு திருமதி. தர்சிகா கிருஷ்ணானந்தனின் முன்மொழிந்துள்ளார் சோசலீச சனநாயகக் கட்சியின் தூண் மாநிலத் தலைவர் SCHORI FRANZ.
இத் தேர்தலில் மொத்தமாக 2003 வாக்குகள் திருமதி. தர்சிகா கிருஷ்ணானந்தனுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. (முப்பது ஆசனங்களுக்கு பலர் போட்டியிட்டதில், திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் வடிவேல் பதின்னெராவது இடம்)
தர்ஷிக்கா ஜெயா வடிவேலுக்கு, 2003 வாக்குகள் கிடைத்தன, தமிழர் வாக்கு, தூண் மாநிலத்தில் 150 வாக்கு மாத்திரமே இருந்தது, அதில் 139 வாக்குகள், போட்டிருந்தார்கள், இரட்டிப்பாக, தமிழர் வாக்கு 278 வாக்குகள் கிடைத்தது, சுவிஸ் மக்கள் வாக்கு, 1725 வாக்குகள் தர்ஷிக்காவுக்கு கிடைத்தது, இதுதான் மிக பெரிய வெற்றி. தர்ஷிகவுக்கும் முன்போனவருக்கும் (கவுன்ச்சளராக) 39 வாக்குகள் வித்தியாசம்.. தர்ஷிக்க ஒரு வருடத்தில், கவுன்ச்சிளராக வாய்ப்புள்ளது.