குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

யாழின் சாதிவேறுபாடுகளும், வெளிநாட்டுப்பணமும் வேலைக்குத் தடைதமிழினஎழுச்சிக்கும் இதுவே வீழ்ச்சிதந்தது

 03.06. 2011 த.ஆ.2042-- போரினால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தின் தொழில் சந்தை ஒரு புரியாத புதிராக இருப்பதாக அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் தலைவரான கலாநிதி முத்துக் கிருச்ண சர்வானந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் வேலையில்லாதவர்களின் வீதம் கிட்டத்தட்ட 5 வீதமாக மாத்திரம் இருக்கும் நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தில் அந்த வீதம் இருமடங்காக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொழில் வாய்ப்புகளுக்கான போதுமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், அழிவுகள் போன்றவை தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

முன்னாள் போராளிகளைப் பொறுத்தவரை அவர்கள் மீதான தேவையற்ற சந்தேகங்கள் காரணமாக தொழில் முனைவோர் அவர்களுக்கு வேலைகளை வழங்க தயக்கம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற சாதி வேறுபாடுகளும், உரிய தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு இளைஞர்களுக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், வெளிநாட்டில் இருந்து பல குடும்பங்களுக்கு வருகின்ற பணமும் இளைஞர்கள் தொழில் நாட்டம் இன்றி காணப்படுவதற்கு ஒரு காரணமாக சர்வானந்தன் குறிப்பிட்டார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.