குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் இலங்கை, இந்திய ஆதரவைப் பெறபசில் எடுத்த இறுதி முயற்சியும் படுதோல்வி :

03 .06. 2011த.ஆ.2042--  மனித உரிமைகள் மீறல் தொடர்பில் உலக அரங்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசு இந்த விடயத்தில் இந்திய ஆதரவைப் பெற எடுத்த இறுதி முயற்சியும் படுதோல்வி அடைந்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் கடந்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்காத நிலையில், இந்தியாவைச் சாமாளித்துத் தனக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை அதனிடமிருந்து பெறுவதற்காகப் பொருளாதார அமைச்சர் பசில் ராயபசவை அனுப்பிவைத்தார் சனாதிபதி. ஆனால், அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. 
 
 ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் நிபுணர்குழு அறிக்கைக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டும் நோக்குடன் கடந்த மாதம் 16ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் பீரிசு இந்திய சென்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எசு.எம்.கிருச்ணா மற்றும் உயரதிகாரிகளைச் சந்தித்து அவர் விரிவான பேச்சுக்களை நடத்தினார்.
 
அவரது பயணத்தின் இறுதியில் இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. அதேவேளை, இந்தியாவுக்கு இலங்கை வழங்குவதாக உறுதியளித்திருந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் இலங்கை திடசங்கற்பத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
 
இந்தக் கூட்டறிக்கை இலங்கையில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்தியாவின் அழுத்தங்களுக்கு அரசு பணிந்து விட்டது என்று கட்சிகளும் ஊடகங்களும் கடும் கண்டனம் வெளியிட்டன.அதேவேளை, இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் இந்த விடயத்தில் விரைந்து செயற்படுமாறும் இந்த விடயத்தில் காணப்படும் முன்னேற்றத்தைப் பொறுத்தே எதிர்காலத்தில் சர்வதேச அரங்கில் இலங்கைக்கான எந்த வொரு இராஜதந்திர உதவியும் அமையும் எனவும் இந்தியா இறுக்கமாகத் தெரிவித்திருந்தது.
 
 
இந்த நெருக்கடியான நிலையைத் தணித்து இலங்கை விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்பதற்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, ஜனாதிபதி  இரகசியமாக புதுடில்லிக்கு அனுப்பிவைத்தார்.புதுடில்லி சென்ற பசிலுக்கு அங்கு பெரிதாக வரவேற்பு அளிக்கப்படவில்லை. இந்திய உயர் தலைவர்கள் எவரையும் சந்திப்பதற்கான வாய்ப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை.
 
இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மட்டுமே அமைச்சர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்தார். ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட விடயங்களில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தொடர்ந்து எதிர்கால நடவடிக்கைகள் இருக்கும் என்ற இந்திய அரசின் திட்டவட்டமான நிலைப் பாட்டை மேனன் அமைச்சருக்கு எடுத்துவிளக்கினார்.
 
 
'கூறவேண்டியவைகள் எல்லாம் அமைச்சர் பீரிஸிடம் சொல்லப்பட்டுவிட்டன. இப்போது பந்து இலங்கையின் பக்கமே உள்ளது. அதனைக் கவனமாக விளையாட வேண்டியது அதன் பொறுப்பு'' என இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்திய உயர்மட்டத் தலைவர்களைச் சந்திக்க அமைச்சர் பசில் கடுமையாக முயன்றபோதும் அவை எவையும் வெற்றியளிக்கவில்லை. அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் அன்று மாலையே (26ஆம் திகதி) பசில் நாடு திரும்பினார்.
 
 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் 26ஆம் திகதி காலையில் இந்தியா சென்று தேசிய பாதுகாப்புச் செயலர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்துவிட்டு அன்று மாலையே நாடு திரும்பினார் என  கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர உறுதிப்படுத்தியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.