குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அபுதாபியில் உலகின் மிகபெரிய ரோலர் கோஸ்டர் உணவகம்!

பணியாளர் இல்லாமல் தானியங்கி தொழில் நுட்பத்தில் உணவு டேபிளுக்கு வரும். துபாய் : அபுதாபி யாஸ் மாலில் 14000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டு ராட்டிணமான ரோலர் கோஸ்டர் வடிவமைப்பில் உலகின் மிகப்பெரிய உணவகம் ஏற்படுத்தபட்டுள்ளது.378 இருக்கைகளுடன்  தானியங்கி தொழில்நுட்பத்தில் உணவு டேபிளுக்கு வருவதற்கு 30 ரோலர் கோஸ்டர் வடிவிலான‌ பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

உணவு ஆர்டர் செய்தால் நேரடியாக‌ டேபிளுக்கு வரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு டேபிளுக்கும் தனி குறியீடு  கொடுக்கப்பட்டு தனி தனியாக கம்ப்யூட்டர் தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய உணவையும், இருக்கை எண் குறித்த தகவலையும்  டேபிளிலுள்ள கணினியின் தொடுதிரையில் டைப் செய்து கார்டு மூலம் அதற்கான தொகையையும் செலுத்தி விட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரோலர் கோஸ்டர் வடிவிலான பாதை வழியாக சுற்றி ,சுற்றி தானியங்கி தொழில்நுட்பத்தில் ஆர்டர் செய்த‌ உணவு முற்றிலும் பாதுகாப்பான‌ பாத்திரத்தில் வாடிக்கையாளரின் டேபிளுக்கு வந்து விடும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம்  ஹோட்டல் பணியாளர் உதவியின்றி வாடிக்கையாளர்கள் உணவை பெற முடியும்.

 

உலகின் வேகமான ரோலர் கோஸ்டர் ராட்டினம் அமீரகத்தில்தான் உள்ளது.எனவே பொருத்தமான வகையில் இந்த உணவகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.நிச்சயம் இது குழைந்தைகள் ,பெரியவர்கள் வாடிக்கையாளர்கள் கவரும் என உணவகத்தின் நிறுவனர்கள் தெரிவித்தனர். ஜெர்மனியில் இது போன்ற உணவகம் உள்ளது  குறிப்பிடதக்கது

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.