குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, தை(சுறவம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

கையில் குழந்தையுடன் துப்பாக்கி: இந்திய வம்சாவளி ஐ.எஸ். இளைஞரின் ட்விட்டர் படத்தால் பரபரப்பு

ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவராக சந்தேகிக்கப்படும் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தனது குழந்தையையும் துப்பாக்கியையும் கையில் ஏந்தியபடியான படத்தை ட்விட்டரில் பகிரங்கமாக வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் இராக் மற்றும் சிரியாவில் போரிட்டு வருகின்றனர். இந்த கிளர்ச்சி இயக்கத்துடன் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுக்கு நெருங்கிய தொடர்புள்ளதும், மேலும் அந்த இயக்கத்தில் பல நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருவதும் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த இயக்கத்தில் இந்தியா, பாகிஸ்தா, வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இந்திய வம்சாவளி பிரட்டன் நாட்டைச் சேர்ந்த இளைஞரான சித்தார்த் தர் (31).

பிரிட்டனில் வாழ்ந்த போது பயங்கரவாத செயல்களுக்கு துணை போனதாக சித்தார்த் தர் அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளியான அவர் தனது பெயரை அபு ரமேஸா என்று மாற்றிக் கொண்டு சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார்.

சித்தார்த் தர் என்கிற அபு ரமேஸாவை பிரிட்டன் போலீஸார் கடந்த ஒரு வருடமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் சித்தார்த் தர், அவரது குழந்தையையும் ஏ.கே.47 ரக துப்பாக்கியையும் கையில் ஏந்தியபடியான தனது புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அத்துடன் தனது குழந்தை ஐ.எஸ் படைக்கு மேலும் ஒரு கூடுதல் பலம் என்றும், இந்த குழந்தைக்கும் பிரிட்டனுக்கு இப்போது தொடர்பு இல்லை என்று பகிரங்கமாக அவரது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பிரட்டனில் ஜாமீனில் வெளிவந்த சித்தார்த் தர் தனது கர்ப்பிணி மனைவியுடன் அங்கிருந்து தப்பி சிரியா வந்தடைந்த ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தார். சுமார் ஒரு வருடமாக தேடப்படும் சித்தார்த் தர், தற்போது பகிரங்கமான ட்வீட்டை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது பிரிட்டன் போலீஸாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

முன்னதாக பிரிட்டனில் சித்தார்த் தர் இருந்தபோது, தான் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து பயங்கரவாத செயலில் ஈடுபடவேன் என்றும், வருங்காலத்தில் பிரிட்டன் நாடு இஸ்லாமிய சட்டத்தின்கீழ் ஆட்சி செய்யப்படும் காலமும் வரும் என்று அந்நாட்டு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.