குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

போர்க்கருத்தரங்கில் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மேயர் யெனரல் சவீந்திர சில்வா திணறல்

  வியாழக்கிழமை, 02 .06. 2011, சிறிலங்காவின் போர்க்கருத்தரங்கின் இரண்டாவது நாளான நேற்று, வன்னிப் படைநடவடிக்கைகள் குறித்த அமர்வில் பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிக்க முடியாமல், மேயர் யெனரல் சவீந்திர சில்வா திணறிக் கொண்டிருந்தார். போரின் இறுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்படும் 58வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றிய இவரிடம் கேள்வி எழுப்புவதற்கு இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அதிகாரிகள் ஆர்வம் காட்டியிருந்தனர்.

அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா,

விடுதலைப் புலிகளின் தலைமை தனியே பொதுமக்களை மனிதக் கேடயங்களாக மட்டும் பயன்படுத்தவில்லை.

சிறிலங்கா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக பொதுமக்கள் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கான தற்கொலைப் போராளிகளையும் அனுப்பி வைத்தது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்ட போர்தவிர்ப்பு வலயங்களில் கூட, புலிகள் பீரங்கிகளை நிறுத்தி மக்களை மனிதக் கேடயங்களாக பாவித்தனர்.

புலிகளின் பாதுகாப்பு நிலைகளும் பதுங்குகுழிகளும், பொதுமக்களின் தற்காலிக குடியிருப்புப் பகுதிகளுக்குள் காணப்பட்டன“ என்று தெரிவித்தார்.

அப்போது, “பொதுமக்கள் மத்தியில் புலிகள் தமது ஆட்டிலறிகளை நிறுத்தி சண்டையிட்டதாக கூறிகின்றீர்கள். இந்தநிலையில் சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறி பீரங்கிச் சூட்டாளர்கள் எவ்வாறு பொதுமக்கள் கொல்லப்படாமல் அவற்றின் மீது தாக்குதல்களை நடத்தினர்?“ என்று மற்றொரு கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தக் கேள்விக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெளிவான பதில் அளிக்க முடியாமல் திணறினார்.

“நாங்கள் எமது தந்திரங்களை மாற்றிக் கொண்டோம். சிறிய குழுக்களாகவும் இரகசியமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்“ என்று அவர் தொடர்பில்லாத பதில் ஒன்றை கூறினார்.

இராணுவ வாகனம் ஒன்றில் தப்பிக்க முனைந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 2009 மே 18ம் நாள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

“முன்னதாக அவ்வாறு அறிவிக்கப்பட்டது உண்மையே. ஆனால் அவர் அடுத்த நாளே கொல்லப்பட்டார்.“ என்றும் மேயர் யெனரல் சவீந்திர சில்வா கூறினார்.

இந்திய அமைதிப்படையின் தளபதியாக சிறிலங்காவில் பணியாற்றிய முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி ஜெனரல் அசோக் மேத்தா வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து மேயர் யெனரல் சவீந்திர சில்வாவிடம் கேள்வி எழுப்பினார்.

ஆனால் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க அவர் மறுத்து விட்டார்.

“இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் அதிகாரம் எமக்கு கிடையாது.

தற்போதைய சூழ்நிலையில் இந்த கேள்விக்குப் பதிலளிப்பது என்பது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக நான் எதுவும் சொல்வதற்கில்லை.

வெகுவிரைவில் இந்தக் கேள்விக்கான விடை அனைவருக்கும் கிடைக்கும்" என்று அவர் சமாளித்துக் கொண்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.