27.11.2014- 09. நளி.2045-ஒருகாலத்தில்.சுவிட்சர்லாந்து கை கடிகார நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ள குறிப்பிட்ட கடிகாரங்களில், பேரரசர் நெப்போலியனின் தலைமுடியின் ஒரு துண்டை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் மாவீரர்கள் மதிக்கப்படுவதைப்பாரங்கள்...சுவிசில் உள்ள டி விட் என்னும் கடிகார நிறுவனம் செவ்வாய்க் கிழமையன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதாவது டி விட் நிறுவனம் தயாரிக்கவுள்ள 500 கை கடிகாரங்களில், சுமார் அரை மில்லிமீற்றர் துண்டுகள் அளவில் அவரது தலைமுடியை சேர்த்து உருவாக்க உள்ளதா
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விவியன் தெரிவித்துள்ளார்.
அந்த கடிகாரத்தின் விலை 8,000 யூரோக்கள் அதாவது 10,000 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யெனிவாவில் உள்ள டெ விட் தொழிற்சாலையில், கடந்த செவ்வாய் கிழமை, நெப்போலியன் தலைமுடியை கடிகாரத்தில் பயன்படுத்த துண்டாக்குவதை ஒரு அறுவை சிகிச்சை போல செயல்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்த கடிகாரத்தினை வாங்கி கையில் கட்டுவதன் மூலம், நெப்போலியனின் டி.என்.ஏ-வை கையில் பெற்றிருப்பதாக இதனை பெறுபவர் நினைத்து மகிழ்வார்கள் என்று விவியன் தெரிவித்துள்ளார்.