02 .06.2011-- 450 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அலைக்கற்றை ஊழலில் தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக பிரமுகருமான ஆ.ரசா.
கனிமொழி கருணாநிதி ஆகியோர் திஹார் சிறையில் அடைபட்டிருக்கும் நிலையில் 450 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருப்பதாக முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரும் கருணாநிதியின் பேரனுமான தயாநிதி மாறன் மீது புதுக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்யும் விதிமுறைகள் மாற்றப்பட்டன. இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை 24 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயரித்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது.தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் முதலில் ஒரு மண்டலத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த நிறுவனத்துக்கு 14 மண்டலங்களில் சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது.இந்த ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக தெகல்காவில் செய்தி வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் தயாநிதி மாறனை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளதன் மூலம். விரைவில் தயாநிதிமாறன் பாரளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.இந் நிலையில் இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். அதே போல மாறனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜகவும் கோரியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழலை ஊதியவரே தயாநிதிமாறன்
.......................................................................................................
தயாநிதி மாறனுக்குச் சொந்தமான தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புத் தொடர்பாக எழுந்த கலவரத்தின் விளைவாக கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு காரணமாக தயாநிதிமாறனை மத்திய அரசில் இருந்து விலக்கி வைத்தார் கருணாநிதி மேலும் அவர் வசம் இருந்த தொலைத் தொடர்புத்துறையை பிடுங்கி ஆ.ராசாவிடம் ஒப்படைத்தார்கள். அப்போது ஆ.ராசா தான் வகித்த அந்த பதவிக்கு வந்ததும் ஆ.ராசா ஸ்பெக்டரம் ஊழல் புரிந்துள்ளார் என்று முதன் முதலாக எழுதியது தயாநிதிமாறனின் தினகரன் இதழ்தான். அப்போது தமிழகத்தில் உள்ள எந்த தலைவர்களுமே இதைக் கண்டு கொள்ளவில்லை. அதன் பின்னர் தொடர்ந்து தினகரன் இது குறித்து விரிவாக எழுதியதால்தான் தமிழக தலைவர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான அறிக்கைகளை விடத் துவங்கினர். இப்போது தயாநிதி மாறனே ஸ்பெக்டரம் ஊழலில் விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறார்.
தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் லைசென்ஸ்களை வழங்கும் உரிமையை அந்தத் துறை அமைச்சருக்கே வழங்க வேண்டும் என்று கேட்டு அந்த உரிமையை வாங்கிக் கொண்ட தயாநிதிமாறன் தொலைத் தொடர்புத்துறையின் பல நூறு டெலிபோன் சேவைகளை தனது சன் குழும நிறுவங்களுக்கு பயன்படுத்திக் கொண்டதோடு லைசென்ஸ் வழங்கியதிலும் முறைகேடுகள் செய்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.