குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

வன்னியிலேயே படையினருக்கு அதிக இழப்பு ஏற்பட்டது: மேயர் யெனரல் முனசிங்காவின் முனங்கல்

வியாழன், 02 .06.2011 03:17    . 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான யுத்தத்தில் வன்னிப் பகுதியிலேயே படையினருக்கு அதிகளவான உயிர் இழப்பு ஏற்பட்டது என இராணுவ மருத்துவ பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த மேயர் யெனரல் எசு.எச். முனசிங்க தெரிவித்தார். பயங்கரவாதத்தினை தோற்கடித்தமை மூலம் தாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்து கொள்ளும் மூன்று நாள் கருத்தரங்கில் மருத்துவ உதவிகள் தொடர்பாக விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேயர் யெனரல் எஸ்.எச். முனசிங்க மேலும் கூறுகையில்...

இறுதி யுத்தம் மிகவும் கடுமையாக இடம்பெற்றது. படையினருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடுவதில் பாரிய சவால்களை நாங்கள் எதிர்கொண்டோம். 2006ஆம் ஆண்டு எங்களிடம் 108 இராணுவ வைத்தியர்கள் மாத்திரமே இருந்தார்கள்.

அதன்பின்னர் பலரை நாங்கள் பயிற்றுவித்தோம். யுத்த களத்தில் இராணுவ மருத்துவர்களின் பங்கு பெருமளவில் இருந்தது. பயிற்றப்பட்ட வைத்தியர்களினாலும் உதவியாளர்களினாலும் பாரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கிலே ஆரம்பித்த யுத்தம் வன்னியில் நிறைவடைந்தது. கிழக்கிலும் பார்க்க வன்னியிலேயே படையினருக்கு பாரிய உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. கிழக்கில் 5.15 வீதமான உயிர்ச்சேதம் தான் நிகழ்ந்தது. ஆனால் வன்னியில் 78.5 வீதமான உயிர்ச்சேதம் பதிவாகியுள்ளமை துரதிர்ஷ்டவசமானது.

அடர்ந்த காடு, திறந்த வெளி, சகதி நிலங்கள் என பல முனைகளில் எமது படையினர் போராட வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் தான் அதிகளவான உயிர்ச் சேதங்களை படையினர் எதிர்கொள்ள நேர்ந்தது.

குண்டு வெடிப்புகளின் மூலம்தான் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 59.6 வீதமான உயிரிழப்பு குண்டு வெடிப்புகளினால்தான் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 39.9 வீதமான படையினர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.

குண்டு வெடிப்பில் மூலமான உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் புலிகளின் ஆட்லரி தாக்குதலுக்கு இலக்காகியவர்கள். இந்த குண்டு வெடிப்புகளில் ஆட்லரி குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள் 81.2 வீதமானவர்கள்.

எதிரிகளின் ஆட்லரி தாக்குதல் எமக்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.