குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

5ஆவது அதிசயத்துக்கு ஆபத்தா?

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் 5ஆவது அதிசயமாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் பவளப்பாறைகள் பெருந்தொடர், உலக வெப்பமயமாதல் காரணமாக அழியும் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சொன்னாலும் சொன்னார், பருவநிலை மாற்றம் பற்றிய விவாதம், சர்வதேச அளவில் மீண்டும் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 நாடுகள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேசியபோது தனது இந்தக் கவலையை ஒபாமா வெளியிட்டார்.

ஒபாமாவின் கருத்துக்கு பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்புத் தெரிவித்தாலும், ஆஸ்திரேலிய அரசு கையை முறுக்கி கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

உண்மையில், பவளப்பாறைகளின் நிலைதான் என்ன?

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குயின்ஸ்லாந்து கடல் பகுதியில் சுமார் 2300 கி.மீட்டர் நீளத்துக்கு விரிந்துள்ளது இந்தப் பவளப்பாறைகள் தொடர் (GREAT BARRIER REEF).

பருவநிலை மாற்றம், கடற்கரையோரம் நடக்கும் அளவுக்கதிகமான மேம்பாட்டு நடவடிக்கைகள், மீன்பிடிப்பு போன்றவற்றால் இந்தப் பவளப்பாறைகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்தான், ஒபாமாவும் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

குயின்ஸ்லாந்து கடற்கரையோரப் பகுதியில் நடந்து வரும் வேகமான  தொழில்மயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து யுனெஸ்கோவும் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் இரினா பொகோவா ஆஸ்திரேலியாவுக்கு நேரில் சென்று இந்தப் பவளப்பாறைகளின் நிலை குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த நேரத்தில் ஒபாமாவின் கருத்து வெளியானதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, இந்தப் பவளப்பாறைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியாவின் மத்திய அரசும், குயின்ஸ்லாந்து மாகாண அரசும் ஒரு தொலைநோக்குத் திட்டத்தை வகுத்துள்ளன என்றாலும், இன்னும் வரைவு வடிவத்திலேயே இருக்கும் அத்திட்டத்தால் பெரிய பலன் ஒன்றும் இருக்காது என ஆஸ்திரேலியாவின் அறிவியல் அகாதெமி தெரிவித்துள்ளது.

ஆனால், ஆஸ்திரேலிய அரசு இதை மறுக்கிறது. "பருவநிலை மாற்றத்தால் பவளப்பாறைகளுக்கு ஆபத்து இல்லை; விவசாய நிலங்களிலிருந்து வெளியேறும் ரசாயன உரங்கள் கலந்த கழிவுகள், இயற்கைப் பேரிடர் இந்த இரண்டினால் மட்டுமே ஆபத்து. ஆனால், இந்த இரண்டும் நிகழ 200 ஆண்டுகளாவது ஆகும்' என்கிறார் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர்.

குயின்ஸ்லாந்து கடலோரப் பவளப்பாறைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வரும் யுனெஸ்கோ, அவை அழிவின் பிடியில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து அடுத்த ஆண்டு அறிவிக்கவுள்ளது. அவ்வாறு அழிவின் பிடியில் உள்ளதாக அறிவித்தால், சுற்றுலா உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ள இயலாது.

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் பரவலாக எழுந்துள்ள நிலையில், எந்த ஒரு பாரம்பரிய சின்னமுமே பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்காவின் தலையீட்டை ஆதிக்க மனப்பான்மையாக எடுத்துக்கொண்டாலும் சரி, அக்கறையாக எடுத்துக்கொண்டாலும் சரி.

விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஆஸ்திரேலிய அரசின் கருத்துக்கு நேர்மாறாக அந்நாட்டு விஞ்ஞானிகளே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து குளோபல் சேஞ்ச் இன்ஸ்டிட்யூட் பல்கலைக்கழக இயக்குநர் ஒபே ஹியூஜ் குல்ட்பெர்க் கூறுகையில் "பவளப்பாறைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கை போதாது. ஏற்கெனவே கடந்த 30 ஆண்டுகளில் பவளப்பாறைகள் பாதியாக சுருங்கிவிட்டன. வெப்பமயமாதல் இன்னும் 1.5 டிகிரி அதிகரித்தாலும் பவளப்பாறைகள் அழிந்துவிடும்' என எச்சரிக்கிறார் அவர்.

மற்றொரு விஞ்ஞானி சார்லி வெரோன் என்பவர், கரியமிலவாயு வெளியேற்றம் இதேபோல நீடித்தால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பவளப்பாறைகள் அழிந்துவிடும் என்கிறார்.

ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக தலைமை விஞ்ஞானி ஜோன் புரோடி கூறுகையில், பருவநிலை மாற்றம்தான் பவளப்பாறைகளுக்குப் பெரும் ஆபத்தாக உள்ளது. பவளப்பாறைகள் உள்ள கடல் பகுதியில் தண்ணீரின் தரத்தை மேம்படுத்த அரசு முயல்கிறது, ஆனால், அது மிகச்சிறிய நடவடிக்கையே என்கிறார்.

என்ன இருக்கிறது?

இதில் சுமார் 3000 தனித்தனி பவளப்பாறைகளும், 600 பாறைத் தீவுகளும், 150 சதுப்புநிலத் தீவுகளும் உள்ளன. சுமார் 100 வகையான ஜெல்லி மீன்களும், 3000 வகையான

மெல்லுடலிகளும், 1600 வகையான மீன்களும், 130 வகையான சுறாக்களும், 30 வகையான திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களும் வாழ்கின்றன. இந்தப் பவளப்பாறைகள் தொடரை யுனெஸ்கோ 1981இல் உலகப் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் சேர்த்தது.

 

7 இயற்கை அதிசயங்கள்

இயற்கை அதிசயங்கள் பட்டியல் குறித்து சில முரண்பாடுகள் இருந்தாலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 7 அதிசயங்களை சி.என்.என். தொலைக்காட்சி பட்டியலிட்டுள்ளது. அவை:

1 எவரெஸ்ட் சிகரம்

2 அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கன்யான் பள்ளத்தாக்கு

3 நார்தெர்ன் லைட்ஸ் பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் தோன்றும் பிரமாண்ட ஒளி

4 ரியோ டி ஜெனீரோவில் உள்ள இயற்கைத் துறைமுகம்

5 ஆஸ்திரேலியாவில் உள்ள பவளப்பாறைகள் தொடர்

6 மெக்ஸிகோவில் உள்ள பரிகுட்டின் எரிமலை

7 இங்கிலாந்தில் உள்ள விக்டோரியா அருவி

நடவடிக்கை போதாது

"பவளப்பாறைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசு இன்னும் அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 50 வருடங்கள் கழித்து எனது மகள்கள் தங்களது மகனுடனோ, மகளுடனோ இந்தப் பவளப்பாறைகளைப் பார்க்க வர வேண்டும்'

- அமெரிக்க அதிபர் ஒபாமா

ஒபாமாவின் கவலை தேவையற்றது

"பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியா பல சாதனைகளைச் செய்துள்ளது. அதிபர் ஒபாமாவின் கவலை தேவையற்றது'

- ஆஸ்திரேலிய வர்த்தக  அமைச்சர் ஆண்ட்ரூ ராப்

"பவளப்பாறைகளுக்கு பருவநிலை மாற்றத்தால் ஆபத்து இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இருப்பினும், ஆஸ்திரேலியாவின் இயற்கைப் பொக்கிஷமான அதைப் பாதுகாக்க நாங்கள் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்'

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.