குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

கடலுக்கு அடியில் கட்டப்படுகிறது அதிநவீன நகரம்

ஜப்பான் நாட்டின் ஷிம்சு என்ற கட்டுமான நிறுவனம் கடலுக்கு அடியில் அதிநவீன நகரத்தைக் கட்டப் போவதாக அறிவித்துள்ளது. 1500 அடி அகலத்தில் வட்டவடிவிலான கூண்டு அமைக்கப்பட்டு, அதற்குள் வீடுகள், ஹேட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.

5 ஆயிரம் பேர் தங்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த நகரத்துக்கு, ‘அட்லாண்டிஸ்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஆழ்கடல் அதிநவீன நகரம் கட்ட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆழ்கடலில் 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உருவாக்கப்பட உள்ளது.

இந்த கடல் நகரம் 2030 ஆம் ஆண்டுக்குள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்படும் என்று ஷிம்சு கட்டுமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த ஒபயாசி கார்ப்பரேசன் என்ற கட்டுமான நிறுவனம் விண்வெளியில் கட்டிடம் கட்டி அங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று தங்க வைக்க போவதாக அறிவித்தது. 40 ஆண்டுகளில் அதற்கான முயற்சியை மேற்கொண்டு திட்டத்தை நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.