குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

டெல்லி செல்லும் முதல்வர் சோனியாவை சந்திப்பாரா?ஈழப்பிரச்சனை கிடப்பிலா?

புதன், 01 ஆனி 2011 04:31 .-- முதல்வர் யெயலலிதா இன்னும் ஓரிரு தினங்களில் டெல்லி செல்வார் என்று தெரிகிறது. அப்போது, காங்கிரசு தலைவர் சோனியா காந்தியை அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் தெரிகிறது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றிக்காக யெயலலிதாவுக்கு சோனியா வாழ்த்து தெரிவித்தார். ஆனால், தேநீர் விருந்துக்கு வருமாறு யெலலிதாவை அவர் அழைத்ததாக வந்த தகவல்கள் உண்மையா இல்லையா என்று இதுவரை தெரியவில்லை.

இந் நிலையில் டெல்லி செல்லும் யெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கையும் சோனியாவையும் சந்திக்கலாம் என்று தெரிகிறது.

கிரைண்டர்,லேப்டாப் திட்டங்கள் குறித்து யெயலலிதா தீவிர ஆலோசனை:ஈழப்பிரச்சனை தொடர்பில் ஏதும் இல்லை

இந் நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் உள்ளிட்ட 9 முக்கிய திட்டங்கள் குறித்து நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் விவாதிக்கப்பட்டது.

அதிமுக தேர்தல்அறிக்கையில் இலவச மிக்ஸி கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உறுதிமொழிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அந்த இலக்கை எட்டும் நோக்கில் அவர் அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று ஜெயலலிதா தலைமையில் 2வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கியமான 9 திட்டங்கள் குறித்து ஆளுநர் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடுவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தத் திட்டங்களை எந்த வகையில் நிறைவேற்றுவது, தேவைப்படும் நிதி, அதற்கான நிதியாதாரம் உள்ளிட்டவை குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

மேலும், திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இலவச டிவி பெட்டி திட்டத்தை என்ன செய்யலாம் என்பது குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

வருவாய்த்துறை மூலமாக இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஜூன் 3ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது. அப்போது ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்தவுள்ளார். அவரது உறையில் இந்த முக்கியத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Share 0

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.