24.11.2014-சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும், குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் புரட்சிகரமான திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்கு, உலக நாடுகள் போராடி வரும் நிலையில், மக்கள் அனைவருக்கும், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஊதியமாக வழங்க, சுவிஸ் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் படி, ஒருவருக்கு, 1.70 லட்ச ரூபாய் ஆண்டு ஊதியம் கிடைக்கும்.
ஏழை, பணக்காரர், முதியவர், பெண்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் மாதந்தோறும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட உள்ளது.
ஆனால், இந்த உதவித்தொகையை பெற 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்றும் குற்றப்பின்னணி ஏதும் இருக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறைந்தபட்ச மாத வருமானம் கிடைத்தால், குழந்தைகளின் கல்வித்தரம் உயரும், நோயாளிகள் நல்ல மருத்துவ சிகிச்சையை பெற முடியும் என்றும் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்க முடியும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.