குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

87ம் ஆண்டில் புலிகளின் தோல்வியை இந்தியா தடுத்து நிறுத்தியது – கோதபாய ராயபட்ச அண்ணாவைப் புகழும்தம்பி

1 .06. 2011த.ஆ.2042--  போர் நடவடிக்கையில் இந்தியாவினால் மாத்திரமே இலங்கைக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும் -1987ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை இந்திய மத்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராயபட்ச தெரிவித்துள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
1987ம் ஆண்டு இந்தியாவுடனான உறவு சரியான முறையில் பேணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு வடமராட்சி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்திய அரசாங்கத்தின் தலையீட்டினால் இந்த இராணுவ முன்நகர்வை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய காலானித்துவ ஆட்சியின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய மரபு ரீதியான போராக 87ம் ஆண்டு யுத்தம் கருதப்படுகின்றது.
 
பிரிகேடியர் டென்சில் கொப்பாகடுவ, கேணல் விஜய விமலரட்ன ஆகிய இருவரும் இந்த யுத்தத்தை வழிநடத்தியதுடன், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும், பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோர் அரசியல் ரீதியான தலைமைத்துவத்தை வழங்கினர். எனினும், இந்திய அரசாங்கம் திடீரென இலங்கை வான் பரப்பிற்குள் பிரவேசித்து உணவுப் பொதிகளை போட்டதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
 
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டதனைத் தொடர்ந்து, புது டெல்லியுடன் சிறந்த உறவுகளைப் பேணி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த முனைப்புக்களுக்கு இராஜதந்திர ரீதியில் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சில நட்பு ரீதியான நாடுகள் யுத்தத்திற்கு ஆரம்பம் முதல் உதவிகளை வழங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாத சில தரப்பினர் யுத்தத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.


போர் நடவடிக்கையில் இந்தியாவினால் மாத்திரமே இலங்கைக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும் - கோத்தாபய ராஜபக்ஸ:-
 
யுத்தம் நடைபெற்ற போது யுத்தம் தொடர்பாக இந்தியாவிற்கு காரணங்களைக் கூறவும் தவறான நிலைப்பாடுகள் சம்பந்தமாக சரியான அர்த்தப்படுத்தலை வழங்க ஜனாதிபதி கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இலங்கையின் அனுபவங்கள் தொடர்பாக சர்வதேசத்திற்குத் தெளிவுபடுத்தும் வகையில் கொழும்பில் இன்று ஆரம்பமான மாநாட்டில் உரையாற்றும்போதே பாதுகாப்புச் செயலாளர் இதனைக் கூறியுள்ளார். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் சிறந்த தொடர்புகளை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி சிறந்த வழிமுறைகளை மேற்கொண்டார்.
 
உலகில் வேறு நாடுகள் ராஜதந்திர ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இலங்கைக்கு அழுத்தங்களை ஏற்படுத்தினாலும் போர் நடவடிக்கையில் இந்தியாவினால் மாத்திரமே இலங்கைக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும் என கோதாபய சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமான இந்த மாநாட்டில் 46 நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரிகள், தூதுவர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
 
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மனிதாபிமானமற்ற முறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க் குற்றங்களை புரிந்துவந்தனர். போர்நிறுத்த உடன்படிக்கை இருந்த காலத்திலும் பயங்கரவாத தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டனர். அப்பாவி பொதுமக்கள்மீது அனாவசியமாக தாக்குதல் நடத்தினர். இறுதியாக மாவிலாறு அணையினை மூடி மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க முனைந்தனர் எனக் குறிப்பிட்டார்.
 
இதனை தடுப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் மனிதாபிமான போரை தொடர்ந்தோம். இப்போராட்டங்களில் படையினருக்கும் சிறு சிறு இழப்புக்கள் நிகழ்ந்தன. ஆனால் அவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக சென்று உற்சாகப்படுத்தினார். அன்று எமது படையினருக்கு கிடைத்த உற்சாகம்தான் இறுதி யுத்தத்தினை வெல்வதற்கும் அடித்தளமாக அமைந்தது எனத் தெரிவித்தார்.
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - மாவிலாறு யுத்தத்தினை வென்றபோது நேரடியாக களத்திற்கு சென்று வெற்றி வீரர்களுக்கு உற்சாகமூட்டினார். கிழக்கினை முழுமையாக வெற்றிகொள்ளாத நிலையிலும் தன் உயிரையும் துச்சமென மதித்து படையினரோடு கைகோர்த்த ஜனாதிபதியின் தைரியம் அனைத்து படையினர் மனதிலும் புது தெம்பினை உருவாக்கியது. அந்த உற்சாகத்தினால்தான் நாம் இலகுவாக யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தோம் என பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.