குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

குற்றச்சாட்டை இலங்கை விசாரிக்கவேண்டும் நவநீதம்பிள்ளை காட்டம்!

 31.05.2011.த.ஆ.2042-.நன்றி யாழ்வலம்புரி....வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை குறித்து ஐ.நா. நிபுணர்கள் குழு முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பூரண விசாரணையை நடத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது  என ஐ.நா. மனிதவுரிமைகள் குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 17-வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது. ஜூன் மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரின் ஆரம்பவுரையை நவநீதம்பிள்ளை மேற்கொண்டார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது,

இலங்கை யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். வன்னிப்போரின் இறுதிக் கட்டத்தில், போர் தொடர்பான அனைத்துலகச் சட்டங்கள் மீறப்பட்டமை குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை இந்த அறிக்கை முன்வைத்துள்ளது.

இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஒரு பூரண விசாரணையை நடத்தவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த விசாரணைகளை கண்காணிப்பதற்கு ஏற்ற ஒரு சர்வதேசப் பொறிமுறை குறித்து நிபுணர்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளையும் நான் பூரணமாக ஆதரிக்கிறேன். முக்கியத்துவம் வாய்ந்த நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் குறித்தும் இவ் மனிதவுரிமைகள் ஆணைக்குழு கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியமானது.

இக்கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் மனிதவுரிமைகள் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க, நீர்பாசனத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 
சனல் 4 வெளியிட்ட வீடியோ உண்மையானது
ஐ.நா.பிரதிநிதி விபரிப்பு

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் படைத்தரப்பினரால் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு உண்மையானது என நேற்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 17-வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இப்போரின்போது சர்வதேசப் போர் நியமங்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதை இவ்வீடியோக் காட்சி உறுதி செய்வதாகவும் இவ்அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இலங்கை குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பிலான சிறப்பு சட்டவல்லுநர் கிறிஸ்டாவ் ஹெய்ன்ஸ் சமர்ப்பித்தார். ஐந்து நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோக் காட்சிகள் அடங்கிய இப்பதிவானது தனக்குப் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியிடம் இருந்து கிடைத்ததாக அவர் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற போரின்போது அரசாங்கம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சனல் 4 தொலைக்காட்சி கடந்த வருடம் வெளியிட்டிருந்தது. வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் அரசாங்கத் தரப்பின் உயர்மட்டக் கட்டளைகளுக்கு அமைய தமிழ் மக்கள் கண்மூடித்தனமாகப் படுகொலை செய்யப்பட்டதாக சனல் 4 தொலைக்காட்சியின் வெளிநாட்டுச் செய்தியாளர் ஜொனாதன் மில்லர் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது குறித்து படைத்தரப்பின் சிரேஷ்ட படையதிகாரி ஒருவரும், களமுனையில் நின்ற படைச் சிப்பாய் ஒருவரையும் மேற்கோள்காட்டி சனல் 4 தொலைக்காட்சி ஆதாரபூர்வமாகச் இச்செய்தியை வெளியிட்டிருந்தது.

ஆனால் இக்காணொளிக் காட்சி போலியானது என இலங்கை அரசாங்கம் நிராகரித்த நிலையில் இக்காணொளிக் காட்சி முற்றிலும் உண்மையானது என்பதை தொழினுட்ப ஆய்வுகள் உறுதிசெய்யப்பட்டிருந்ததாக அவர் தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்காணொளிக் காட்சி உண்மையானது என தொழினுட்ப ஆய்வுகள் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்ட, அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் மீண்டும் இக்கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.