குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

22.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

முத்த போராட்ட அழைப்பு:கோவையில் பரபரப்பு

கோவை : கோவையில் உள்ள முன்னணி மால்களில் நாளை முத்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் கலந்து கொள்ள வருமாறும் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவை இந்து முன்னணி, இந்து கலாச்சார கூட்டமைப்பினர், இது போன்ற போராட்டங்கள் கலாச்சார சீரழிவை ஏற்படுத்த கூடியவை. இது போன்ற போராட்டங்கள் நடந்தால் அதனை எதிர்ந்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் பெற்றோர்கள் யாரும் தங்கள் பிள்ளைகளை நாளை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் இந்து முன்னணியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தி.மு.க.,வை எந்த தீயசக்தியாலும் அழிக்க முடியாது: ஸ்டாலின்

மதுரை: லோக்சபா தேர்தலில் தி.மு.க., தோற்கவில்லை எனவும், தமிழக மக்கள் தான் தோல்வியடைந்துள்ளதாக தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார். மதுரையில், மாநகர் மாவட்ட தி.மு.க., உறுப்பினர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், அ.தி.மு.க., அரசில் பெரு முதலாளிகள் தொழில் துவங்க முன்வரவில்லை. 3 ஆண்டுகளில் அ.தி.மு.க., ஆட்சியில் புதிய தொழிற்சாலைகள் துவங்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க.,ஆட்சியில் 2.36 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. அரசு மீது அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். லோக்சபா தேர்தலில் தி.மு.க., தோற்கவில்லை. தமிழக மக்கள் தான் தோல்வியடைந்துள்ளனர். பெண் சுய உதவி குழுக்களுக்கு உதவித்தொகை முறையாக வருவதில்லை. தி.மு.க.,வை எந்தவொரு தீயசக்தியாலும் வீழ்த்த முடியாது என கூறினார்.

 

சீட்டு பணத்தில் ரூ.1.50 கோடி மோசடி: முதலீட்டாளர்கள் போலீசில் புகார்

திண்டுக்கல்: திண்டுக்கல் குமரன், திருநகர் முருகானந்தம், ஒட்டன்சத்திரம் அங்காளஈஸ்வரி உட்பட பலர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்துள்ள மனு: திண்டுக்கல் சின்னையாபுரத்தை சேர்ந்தவர் முரளி கணேஷ்,45. திண்டுக்கல் வடக்கு காளியம்மன் கோயில் தெருவில் தங்கத்தாமரை என்ற பெயரில் நகைக்கடையும், ஒய்.எம்.ஆர்.,பட்டிரோட்டில் 'குட் இந்தியா' என்ற பெயரில் ரியல் எஸ்டேட்டும், மெங்கில்ஸ் ரோட்டில் 'ஆதிரா சூப்பர் மார்க்கெட்'டும், டியூஷன் சென்டரும், குட்வில் அடகுகடையும் நடத்தி வந்தார். ரியல் எஸ்டேட்டில் 1,200 சதுரடி நிலத்திற்கு சீட்டு கட்டி இடம் வாங்கினால் ஒரு பவுன் தங்க காசு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதே திட்டத்தில் மேலும் ரூ.11 ஆயிரம் கட்டினால் ஒரு பவுன் தங்ககாசு, ரூ.50 ஆயிரம் கட்டினால் 3 பவுன் தங்க காசு என தெரிவித்திருந்தார்.ஆதிரா சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3,500 க்கு சீட்டு கட்டினால் ரூ.10 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டங்களில் ஆட்களை சேர்ப்பதற்காக 50 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார். இதை உண்மை என நம்பி பலரும் பல லட்சங்களை டெபாசிட் செய்தனர். தற்போது தங்க நகை மற்றும் பணத்தை தராமல் மோசடி செய்துள்ளனர்.ஐநுாறுக்கும் மேற்பட்டோரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை பணம் பெற்றிருந்தார். அவருக்கு சொந்தமான ஆதிரா சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை அகற்றிவிட்டு அதை முதலீடுதாரர்கள் திருடியிருப்பதாக போலீசில் போலி புகார் அளித்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தரவேண்டும்,' என கூறியுள்ளனர். வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்திட்டத்தில் ஏமாந்தவர்கள் சின்னையாபுரத்தில் உள்ள முரளி கணேஷ் வீட்டை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆதிரா சூப்பர் மார்க்கெட்டில் உள்ள அரிசி, பருப்பு, கம்ப்யூட்டர், ஜெனரேட்டர் மற்றும் பல பொருட்களை முதலீட்டுதாரர்கள் திருடி சென்றதாக உரிமையாளர் முரளிகணேஷ், நகர் வடக்கு போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

வியியலாளர் பணி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை:தமிழகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு, உதவி புவியியலாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்திக் குறிப்பு:புவியியலில், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, www.tnpscexams.net என்ற முகவரியில், இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இப்பதவிக்கான கம்ப்யூட்டர் வழித்தேர்வு, 2015 பிப்., 1ம் தேதி, சென்னை மையத்தில், முற்பகல் மற்றும் பிற்பகலில் நடக்கும். இத்தேர்விற்கு, டிச.,17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

ஜப்பானில் கடுமையான பூகம்பம்

டோக்கியோ: ஜப்பானின் நகோனா நகரில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து உடனடி தகவல் ஏதுமில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. பூகம்பம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி காலை 10.08 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது.

 

அரியானாவிலிருந்து ராஜ்யசபாவிற்கு சுரேஷ் பிரபு, பீரேந்தர் சிங் போட்டி

புதுடில்லி: மத்திய அமைச்சர்கள் பிரேந்தர் சிங், சுரேஷ் பிரபு ஆகியோர், அரியானா மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இருவரையும் வேட்பாளர்களாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் இரு அவையிலும் உறுப்பினர்கள் ஏதுமில்லை. அரியானாவில் பா.ஜ.,முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளதால், இருவரும் எவ்வித எதிர்ப்புமின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதன் மூலம் ராஜ்யசபாவில் பா.ஜ.,வின் பலம் 43லிருந்து அதிகரிக்கும். காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த பிரேந்தர் சிங், அரியானா தேர்தலுக்கு முன் பதவி விலகி பா.ஜ.,வில் இணைந்தார். இங்கு ராஜ்யசபா தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது.

 

நடிகர் சங்க தேர்தலில் போட்டி: விஷால்

கோவை: வரும் 2015ம் ஆண்டு நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவேன் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.மேலும் அவர், சங்கத்திலிருந்து தன்னை நீக்கினால், அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், தம்மை இழிவாக பேசிய ராதாரவி மற்றும் காளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் கூறினார்.

 

பயங்கரவாதத்தை பாக்., ஊக்குவிக்கிறது: ராஜ்நாத்

புதுடில்லி: பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் அவர், இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தானே பொறுப்பு எனவும், தாவூத்தை பாகிஸ்தான் பாதுகாத்து வருவதாகவும் கூறினார். இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் விரும்பவில்லை எனவும் கூறினார்.

 

ஒடீசா முதல்வரின் நேர்முக உதவியாளரிடம் சி.பி.ஐ., விசாரணை

புவனேஸ்வர்: சிட்பண்டு மோசடி வழக்கு தொடர்பாக ஒடீசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நேர்முக உதவியாளர் சரோஜிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அனைத்து கட்சி கூட்டம்: திரிணமுல் புறக்கணிப்பு

புதுடில்லி: வரும் திங்கட்கிழமை பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. இந்த தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. கூட்டம் தொடர்பாக குறுகிய காலத்தில் அழைப்பு விடுக்கப்பட்டதால், கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என அக்கட்சி கூறியுள்ளது.

 

உத்தமர்கள் போல் நடிக்கின்றனர்: கருணாநிதி

சென்னை: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யாவின் சுயசரிதை குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி, இந்த வழக்கால் மன உளைச்சலுக்கு ஆளானதாக ஆச்சார்யா கூறியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளாக்கியவர்கள் உத்தமர் போல் நடிக்கின்றனர் என கூறியுள்ளார்.

 

சூதாட்ட தரகர்களை சந்திக்கவில்லை: சுந்தர்ராமன்

புதுடில்லி: பிரிமியர் லீக் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களை நான் சந்திக்கவில்லை என பிரிமியர் லீக் தலைமை செயல் அதிகாரி சுந்தர்ராமன் சுப்ரீம்கோர்ட்டில் கூறியுள்ளார். பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி முக்தல் கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில், குருநாத் மெய்யப்பன், பிரிமீயர் லீக் தலைமை செயல் அதிகாரி சுந்தர்ராமன் உள்ளிட்ட 4 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி 4 பேருக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சுந்தர்ராமன் தாக்கல் செய்த அறிக்கையில், தாம் சூதாட்ட தரகர்களை சந்தித்ததில் உண்மையில்லை எனவும், 8 முறை ஒருவரை சந்தித்ததாக முக்தல் கமிட்டி கூறியிருப்பது உண்மையில்லை எனவும், பிரிமீயர் லீக் தொடரை விளம்பரப்படுத்த பிரபலங்களை மட்டுமே சந்தித்தேன் என கூறியுள்ளார்.

 

மேட்டூர் அருகே வெளிமாநில மது பாட்டில்கள் சிக்கியது

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வெளிமாநில மது பாட்டில்கள் சிக்கியது. மேச்சேரி அமரத்தானூரில் ஒரு வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சோதனையிட்டு 2 ஆயிரம் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சின்னயன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ஜெயா டி.வி.,யில் சென்னை மேயர் பெயர் இருட்டடிப்பு

சென்னை: சென்னை மேயர் சைதை துரைசாமி பெயரை ஜெயா டி.வி., இருட்டடிப்பு செய்தது. ஒட்டுமொத்த சேவை, கல்வி, போக்குவரத்து ஆகியவற்றில் சென்னை சிறந்து விளங்குவதாக கூறி, இந்தியா டுடே நாளிதழ் சார்பில், டில்லியில் விருது வழங்கு விழா நடைபெற்றது. இந்த விருதுகளை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.சி.வீரமணி மற்றும் மேயர் சைதை துரைசாமி பெற்றுக்கொண்டனர். ஆனால், இந்த செய்தியை இன்று இரவு 07:15 மணிக்கு ஔிபரப்பிய ஜெயா டி.வி., சென்னைக்கான விருதுகளை அமைச்சர்கள் பெற்றுக்கொண்டதாக தெரிவித்தது. மேயரை பற்றி எந்தவித தகவலையும் அந்த டிவி ஔிபரப்பவில்லை. கட்சி மேலிடத்திற்கும் அரசுக்கும் தகவல் தெரிவிக்காமல் ஒப்பந்தம் விட்டதாக சென்னை மேயர் சைதை துரைசாமி மீது புகார் எழுந்ததாகவும் இதை அடுத்து அவரை பதவி விலகுமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டிருப்பதாகவும் வாட்ஸ் அப்-பில் தகவல் பரவியுள்ள சூழ்நிலையில் மேயர் பெயரை இந்த டி.வி., புறக்கணித்திருப்பது, பதவி நீக்க உத்தரவு தகவலை உறுதி செய்வதாக உள்ளது.

 

காங்., மீது ஒமர் கடும் தாக்கு

ஸ்ரீநகர் : காஷ்மீர் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, காங்கிரஸ் தற்போது தேசியவாத காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தி வருகிறது. ஆனால் 6 மாதங்களுக்கு முன் எந்த குற்றத்தையும் சொல்லவில்லை என தெரிவித்துள்ளார்

 

வரிஏய்ப்பு செய்தால் நடவடிக்கை:ஜெட்லி

புதுடில்லி : வரிஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நடுத்தர மற்றும் மாத சம்பளம் பெறுபவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மற்ற நாடுகளின் ஒப்பந்தங்கள் மறுசீரமைப்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 

நல்லாட்சியே பாதுகாப்பு:அஜித்தோவல்

புதுடில்லி : நல்லாட்சியே இந்தியாவின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானை இந்திய ராணுவம் கட்டுப்படுத்தாமல் இருந்தால், பயங்கரவாதம் மாநில கொள்கையின் கருவியாக கொண்டு வரப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பார்லி., தொடரில் இன்சூரன்ஸ் மசோதா ; ஜெட்லி

புதுடில்லி : பார்லி., குளிகால கூட்டத் தொடரில் இன்சூரன்ஸ் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கலாகும் என மத்திய நிதியமைச்சர் ஜெட்லி உறுதி அளித்துள்ளார்.

 

ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரட்டும்:மம்தா

கோல்கட்டா : மத்திய அரசு தன்னால் முடிந்தால் மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரட்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு சவால் விட்டுள்ளார்.

 

மம்தா கருத்துக்கு ஆம்ஆத்மி ஆதரவு

புதுடில்லி : திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சிரிஞ்சாய் போஸ் கைது செய்யப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ள கருத்திற்கு ஆம்ஆத்மி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் அசுதோஷ் கூறுகையில், இந்த விஷயத்தில் மம்தாவின் கருத்து சரியானது தான். பா.ஜ., சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அப்படி பார்த்தால் அவர்கள் கட்சியின் அமித்ஷா மீது கூட கொலை குற்றம் சாட்டப்பட்டவர் தான் என தெரிவித்துள்ளார்.

 

சிவசேனா எங்கள் நண்பன்:மகா.,முதல்வர்

மகாராஷ்டிரா : டில்லியில் விழாவில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பெட்னாவிஸ், நான் மென்மையான ஆள். ஆனால் இரக்கமற்றவன் அல்ல. சிவசேனா எப்போதும் எங்கள் நண்பன். இனியும் நண்பர்களாக இருப்போம் என நம்புகிறேன். மும்பையை விரைவில் முதன்மை மாநிலமாக மாற்றுவேன். மகாராஷ்டிராவில் மாற்றம் ஏற்பட்டால் இந்தியா மாறும் என தெரிவித்துள்ளார்.

 

உ.பி.,யில் மீண்டும் சமாஜ்வாதி அட்டகாசம்

லக்னோ : உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள், சுங்கச்சாவடி அதிகாரிகளை தாக்கிய சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. இந்த கொலை வெறித் தாக்குதல் சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

 

குமரி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

கன்னியாகுமரி : பெருஞ்சாணி அணை நிரம்பி, 71 அடியை எட்டி உள்ளது. இதனால் கரையோரங்களில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பரளியாறு, தாமிரபரணி ஆற்றங்கரைகளில் உள்ள மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக பொதுப் பணித்துறை அறிவித்துள்ளது.

 

நெல்லையில் குளங்களில் உடைப்பு

நெல்லை : தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக இதுவரை 2 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் 3 கிராமங்களுக்குள் தண்ணீர் புக வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

பா.ஜ., மீது திரிணாமுல் கோபம்

கோல்கட்டா : திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சிரிஞ்சாய் போஸ் கைது செய்யப்பட்டது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ., மீது கடுமையான கோபத்தில் உள்ளது. பா.ஜ., அரசு சிபிஐ.,யை தங்களுக்கு எதிராக பயன்படுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. மேலும் காங்கிரஸ் கையாண்ட விதத்தையே பா.ஜ.,வும் கையாள்வதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

 

புதுச்சேரி ரவுடிக்கு போலீஸ் வலை

புதுச்சேரி : அரசு ஊழியர் மனோகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி கைப்பிள்ளை ராஜூவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக கைப்பிள்ளை மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைப்பிள்ளை ராஜூவை தமிழக போலீசும் தேடி வருகிறது.

 

மேட்டூரில் நீர்திறப்பு அளவு குறைப்பு

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 4000 கனஅடி குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து 2000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

ரஞ்சித் சின்ஹா மீது குற்றப்பத்திரிக்கை?

புதுடில்லி : 2ஜி விசாரணையில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தலையிட கூடாது என சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததை அடுத்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஞ்சித் சின்ஹாவின் பதவிக்காலம் டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் புதிய சிபிஐ இயக்குனராக அடுத்த இடத்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளில் யாராவது ஒருவரை நியமிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 24ம் தேதி துவங்க உள்ள பார்லி., குளிர்கால கூட்டத் தொடரில், திருத்தப்பட்ட லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் பேரில் ரஞ்சித் சின்ஹா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவும், பதவி காலம் முடிவதற்கு சில நாட்கள் முன்னரே அவர் பதவிநீக்கம் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

தஞ்சையில் விவசாயிகள் கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

திருத்துறைப்பூண்டியில் கடையடைப்பு

திருத்துறைப்பூண்டி : விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் சாலை மறியலைத் தொடர்ந்து பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

 

சிட்பண்ட் ஊழல்:மம்தா கட்சி எம்.பி., கைது

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சிரிஞ்சாய் போசை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக 6 மணி நேரம் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முறையாக விளக்கம் அளிக்காததை அடுத்து சிபிஐ அவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு

ஸ்ரீநகர் : காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்ல உள்ளார். இதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

சென்னைக்கு சிறந்த நகரம் விருது

புதுடில்லி : இந்தியா டுடே சார்பில் நாட்டின் சிறந்த நகரம் 2014 விருது வழங்கும் விழா டில்லியில் நடைபெற்றது. இதில், கல்வி அடிப்படையில் சிறந்த நகரத்திற்கான விருது சென்னைக்கு கிடைத்துள்ளது. சுற்றுசூழல் அடிப்படையிலான சிறந்த நகரத்திற்கான விருது தானே நகருக்கு கிடைத்துள்ளது. மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு இந்த விருதுகளை வழங்கினார்.

 

அசோக் கேம்கா மீண்டும் இடமாற்றம்

சண்டிகர் : அரியானாவில் பா.ஜ., அரசு பதவியேற்ற பிறகு, அரசு நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 71 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் அசோக் கேம்காவும் ஒருவர். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நில மோசடி விவகாரத்தில் பலமுறை இடமாற்றம் செய்யப்பட்ட அசோக் கேம்கா, தற்போது ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் இடமாற்றம் செய்யபட்டுள்ளார்.

 

இந்தியா சிமிண்ட்ஸ் திட்டவட்டம்

புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரை கடுமையாக பாதிக்கும் என இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவன சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

 

முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்: துவங்கியது உடைக்கும் பணி

மும்பை: இந்திய கப்பற்படைக்கு பெருமை சேர்த்ததும்,இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விக்ரந்த் ஏலம் விடப்பட்ட நிலையில் நேற்று அதனை உடைக்கும் பணியை தனியார் நிறுவனம் துவக்கியது. எச்.எம்.எஸ். ஹர்குலிஸ் என்ற பெயரில் விமானம் தாங்கி போர்க் கப்பல் கடந்த 1943-ம் ஆண்டு டிசம்பரில் பிரிட்டன் கப்பற்படையான ராயல் நேவி படையில் சேர்க்கப்பட்டது . 1945-ல் செயல்பட துவங்கி இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு இந்தியாவிற்கு விற்கப்பட்டது. 1959-ம் ஆண்டு இந்திய கப்பற்படையில்சேர்க்கப்பட்டது. பின்னர் மறு கட்டுமானம் செய்யப்பட்டு 1961-ல் பணிகள் முடிந்த நிலையில் ஐ.என்.எஸ்.விக்ரந்த் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்திய கப்பற்படையில் முறைப்படிசேர்க்கப்பட்டு செயல்பட துவங்கி1971-ல் இந்தியா-பாக் போர் ஏற்பட்ட போது இக்கப்பல் பயன்படுத்தப்பட்டது.

 

ஜப்பானில் கீழ்சபை கலைப்பு: அபே அறிவிப்பு

டோக்கியோ: ஜப்பானில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் பார்லி. கீழ்சபை கலைத்தார் அந்நாட்டு பிரதமர் ஷின்சோஅபே.ஜப்பானின் லிபரல் ஜனநாயக கட்சிஆட்சி நடக்கிறது. பிரதமராக ஷின்சோ அபே உள்ளார். அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. அபே ஆட்சியில் அமைச்சர்கள் பெருமளவு ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் கீழ்சபைஉறுப்பினர்கள் என்பதால் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், கீழ்சபையை கலைப்பதாக அறிவித்தார். தேர்தலை மனதில் வைத்தே சபையை கலைத்ததாக கூறப்படுகிறது.

 

குற்றச்சாட்டு நிருபனமானால் பதவி விலக தயார்: மம்தா

கோல்கட்டா: சாரதா சிட் பண்டு மோசடி வழக்கு தொடர்பாக திரிணமுல் கட்சியினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிருபனமானால், தான் பதவிவிலக தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் அவர் சாரதா சிட்பண்டு மோசடி இடதுசாரிகள் ஆட்சியில் நடந்தது எனவும் கூறினார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.