குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

21.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சொல்வது எளிது;செய்வது கடினம்:சோனியா

புதுடில்லி : காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி வரும் பா.ஜ.,விற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா, மக்களுக்கு வாக்குறுதி அளிப்பது எளிது. ஆனால் யதார்த்தத்தை புரிந்து கொண்டு, மக்களின் கனவுகளை நிஜமாக்குவது கடினம் என தெரிவித்துள்ளார்.

மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் ஒபாமா

வாஷிங்டன்: குடியரசு தின விழாவில் பங்கேற்க வர வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்பு அமெரிக்க அதிபர் ஒபாமா, 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா செல்வார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. டில்லியில், பிரதமர் மற்றும் இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் எனவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

 

திரிணமுல் எம்.பி., சொத்துக்கள் முடக்கம்

கோல்கட்டா: சாரதா சிட் பண்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி., ஸ்ரீன்ஜோய் போசின் வங்கிக்கணக்கை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் பணமோசடி வழக்கில் தொடர்புடையவருமான பெயிண்டர் ஒருவரின் வங்கிக்கணக்கையும் முடக்கியுள்ளனர். எம்.பி.,யின் 4 வங்கிக்கணக்கும், பெயிண்டரின் 26 வங்கிக்கணக்கும் முடக்கப்பட்டுள்ளன.

 

குடியரசு தின விழாவில் ஒபாமா கலந்து கொள்வார்: மோடி நம்பிக்கை

புதுடில்லி: குடியரசு தின விழாவில் பங்கேற்க வரும்படி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி ஒபாமாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த விழாவில் ஒபாமா கலந்து கொள்வார் எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச்சூடு: 7 பேர் காயம்

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள சின்டகுபா பகுதியில் போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மீது மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில், 5 ஜவான்கள், ஒரு எஸ்.ஐ., உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்க விமானப்படை ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

 

மீனவர் நலனில் அக்கறை கொண்ட அரசு: முதல்வர்

சென்னை: மீனவர் நலனில் அக்கறையுடன் செயல்படுவது அ.தி.மு.க, அரசு தான் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்கள், போதை மருந்து கடத்தியதாக கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. 5 மீனவர்களை விடுவிக்கவும், அவர்கள் சார்பில், இலங்கையில் உள்ள வழக்கறிஞர் வாதாடுவதற்கும், அவர்களை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ரூ.2லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு மாதம்தோறும் தலா ரூ.7,500 வழங்கப்பட்டது. 5 மீனவர்களின் குடும்பங்களுக்கும், முதல்வர் காப்பீட்டு தொகையிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. மீனவர்களை மீட்பதற்காக ராஜாங்க மற்றும் சட்டரீதியான தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. மேல்முறையீட்டு மனுவுக்காக வழங்கப்பட்ட தொகையையும் சேர்த்து, மீனவர்களுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.47.45,000 வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதும், அவர்களை மீட்டு பாதுகாப்பாக தாயகம் கொண்டு வர தேவையான நடவடிக்கையை ÷ மற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் தமிழக அரசு நிதியுதவி வழங்கியது. தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை வந்தபோது, தமிழக அமைச்சர்கள் அவர்களை வரவேற்றனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக மத்திய அரசு செயல்பட்டு 5 மீனவர்கள் விடுதலை அடைந்தது மகிழ்ச்சி. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சிலர் இதனை அரசியலாக்க முற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது மீனவர்கள் விடுதலைக்கு நாங்கள் தான் காரணம் என சிலர் மார்தட்டுவது மீனவர்களை கொச்சைபடுத்துவதாகும். மார்தட்டிக்கொள்ளும் சிலர் கடந்த மூன்றாண்டுகளாக என்ன நடவடிக்கை எடுத்தார்கள். மீனவர்களுக்கு எவ்வித இன்னல் ஏற்பட்டாலும், அவர்கள் துயர் துடைப்பதும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பேணிக்காப்பதும், மேம்படுத்துவதும் அ.தி.மு.க., அரசு தான். உண்மையானமீனவ நண்பன் யார், என்பது தமிழக மீனவர்களுக்கு நன்கு தெரியும். தமிழக மீனவர்கள் நலன் காக்க அதிமுக அரசு தொடர்ந்து பாடுபடும் என கூறியுள்ளார்.

 

வேலை வாங்கி தருவதாக பணமோசடி: பெண் கைது

காஞ்சிபுரம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இரண்டு பேரிடம் ரூ.6 லட்சம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் சுகுணா மஞ்சு என்பவரை போலீசார் கைது செய்தனர். அனிதா, யுவராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சுகுணாவை போலீசார் கைது செய்தனர்.

 

திருப்பூர் மாநகராட்சியில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. அப்போது மனைப்பிரிவுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தீர்மானத்தை மேயர் நிறைவேற்றினார். இதற்கு நகரமைப்பு தலைவர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தீர்மானத்தை வாபஸ்பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, கருணாநிதியின் படத்தை வைக்க வேண்டும் என தி.மு.க., கவுன்சிலர்கள் அனுமதி கோரினர். இதற்கு மேயர் அனுமதி மறுத்தார். இதனை கண்டித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

சாரதா சிட்பண்ட் மோசடி : திரிணாமுல் காங்., எம். பி. கைது

கோல்கட்டா: சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்., எம். பி. ஸ்ரீ ஜோய் போஸ் இன்று கைது செய்யப்பட்டார். முன்னதாக இவரிடம் இன்று காலையில் சி.பி.ஐ.,அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 

பாசி நிறுவன வழக்கில் அதிரடி தீர்ப்பு

சென்னை : பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏமாந்தவர்களுக்கு 9 சதவீதம் வட்டியுடன் பணத்தை திருப்பித்தர வேண்டும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2 மாதத்தில் பணத்தை திருப்பித் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

லஞ்சம் வாங்கிய பெண் ஆர்.ஐ., கைது

கோவை : கோவை தொண்டாமுத்தூரில் பட்டா நிலத்தில் மண் அள்ள அனுமதி வழங்குவதற்காக ரூ.10,000 லஞ்சம் கேட்ட ஆர்.ஐ., மணிமேகலையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

 

எஸ்.எம்.எஸ்.,ல் டுவிட்டர் பகிர்வு

புதுடில்லி : டுவிட்டர் வலைதளத்தில் பதிவு செய்யப்படும் பதிவுகள் ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் எஸ்.எம்.எஸ்., வழியாக பகிர்ந்து கொள்ளும் வசதியை டுவிட்டர் இணையதளம் அறிமுகப்படுத்தி உள்ளது.

 

2ஜி வழக்கை விசாரிக்கிறார் ஆர்.கே.தத்தா

புதுடில்லி : 2ஜி வழக்கு விசாரணையில் இருந்து சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை சுப்ரீம் கோர்ட் நீக்கியதை அடுத்து, அவ்வழக்கின் விசாரணையை சிபிஐ கூடுதல் இயக்குநர் ஆர்.கே.தத்தா தலைமை ஏற்று நடத்துவார் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

 

சுப்ரீம் கோர்ட்டில் சீனிவாசன் கோரிக்கை

புதுடில்லி : தன்னை மீண்டும் பிசிசிஐ தலைவராக நியமிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். முக்தல் அறிக்கை தொடர்பாக சீனிவாசன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தான் குற்றமற்றவன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மறைமுக வரி பெரிய சவால்: ஜெட்லி

புதுடில்லி : உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு மறைமுக வரிகள் பெரும் சவாலாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும் இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வழிவகை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தமிழக அரசுக்கு மனிதஉரிமை கமிஷன் நோட்டீஸ்

சென்னை : தர்மபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மனிதஉரிமைகள் கமிஷன், தமிழக அரசு, தர்மபுரி மற்றும் சேலம் கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பத்திரிக்கை செய்தி அடிப்படையில் தானே முன் வந்து மனிதஉரிமை கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

பள்ளிகளில் ஜெர்மன் மொழி ; மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்

புதுடில்லி :பள்ளிகளில் ஜெர்மன் மொழியை மூன்றாவது மொழி பாடமாக கொண்டு வரும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, மத்திய அரசு அறிவித்துள்ள 40 மொழி பாடங்களில் ஜெர்மன் மொழி இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

 

அனைவருக்கும் ஆன்லைன் கல்வி:ஸ்மிருதி

புதுடில்லி : அனைவருக்கும் இலவச ஆன்லைன் கல்வி வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மன் வெளிநாட்டு மொழி என்றும், அதனால் அது படிப்பதற்கு கடினமானது எனவும் ஸ்மிருதி தெரிவித்துள்ளார்.

 

ஆம்ஆத்மி தலைவர் பா.ஜ.,வில் இணைவு

புதுடில்லி : ஆம்ஆத்மி கட்சி தலைவர் எம்.எஸ்.திர், பா.ஜ.,வில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது பங்களிப்பை பா.ஜ., விற்கு அளிக்க விரும்புகிறேன். இதுவரை எந்த ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,வும் என்னை வந்து பார்க்கவில்லை. அதனால் தான் பிரதமரின் வளர்ச்சி திட்டத்தில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள பா.ஜ.,வில் இணைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

 

பா.ஜ.,விற்கு மக்கள் மீது அக்கறையில்லை:சோனியா

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.,விற்கு மக்கள் மீது அக்கறையில்லை எனவும், வெள்ள மீட்புப் பணிகளை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறது எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.

 

பிசிசிஐ பிரமாணபத்திரம் தாக்கல்

புதுடில்லி : கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் வழக்கில் இருந்து சீனிவாசனை காப்பாற்றுவதற்காக, சுப்ரீம் கோர்ட்டில் பிசிசிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. முக்தல் கமிட்டி தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக இந்த பிரமாணபத்திரத்தை பிசிசிஐ தாக்கல் செய்துள்ளது.

 

வைகோ மீது சாமி குற்றச்சாட்டு

புதுடில்லி : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட போவதாக கூறி வருகிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும். பிரபாகரன் முன்னாள் பிரதமர் ராஜிவ்வின் கொலைக்கு காரணமானவர். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதையே வைகோ வழக்கமாக கொண்டுள்ளார் என பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

 

மதிமுக கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு ; அறப்போர் நடத்த வைகோ முடிவு

திருநெல்வேலி ; அரசியல் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ள ஜீவாதார உரிமைகளுள் ஒன்றான பேச்சு உரிமைக்கு போலீசார் அனுமதி மறுப்பது, முந்தைய அரசைப் போல இந்த அரசிலும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என வைகோ தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: வரும் நவம்பர் 27ல் சென்னை, தி.நகர் முத்துரங்கன் சாலையில், ம.தி.மு.க.,சார்பில் "தியாகத் திருநாள் - பினாங்கு பிரகடன விளக்க கூட்டத்திற்கு, போலீசிடம் விண்ணப்பித்திருந்தோம். மூன்று நாட்களுக்கு பிறகு தற்போது அனுமதி மறுத்துள்ளனர்.

ஜெ.,முதல்வராக இருந்தபோது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரும் தீர்மானம்தான், "பினாங்கு பிரகடனம்' ஆகும். 2002ல் திருமங்கலத்தில் புலிகளை ஆதரித்து பேசியதற்காக நான் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு 19 மாதம் சிறையில் அடைக்கப்பட்டோம்.

 

உங்களுக்காக உழைக்கும் அரசு:மோடி

சந்துவா : விவசாயிகள் பங்களா கேட்கவில்லை. கார் கேட்கவில்லை. தண்ணீர் மட்டும் தான் கேட்கிறார்கள். அவர்களுக்கு தண்ணீர் கிடைத்தால், நாட்டில் உள்ள அனைவரின் வயிற்றையும் அவர்கள் நிரப்புவார்கள். அவர்கள் நிலத்தில் இருந்து தங்கங்களை பிரித்தெடுக்கிறார்கள். இந்த நாட்டின் மகள்களுக்கும் தாய்மார்களுக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். மக்கள் நினைக்கலாம், என்ன பிரதமர் இவர் நாட்டில் கழிவறைகள் கட்டுவதற்கு பிரசாரம் செய்து வருகிறார் என்று. மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களின் வளர்ச்சிக்கு பாடுபட தயாராக இல்லை. அதனால் தான் நானே அதில் களமிறங்கி உள்ளேன். டில்லியில் உங்களுக்காக உழைக்கும் ஆட்சியை தந்தீர்கள். அதே போல் ஜார்கண்ட் மாநிலத்தில் தாருங்கள் என ஜார்கண்ட் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி தெரிவித்தார்.

 

வைகை அணையில் தண்ணீர் திறப்பு

தேனி : வைகை அணையில் இருந்து, பாசனத்திற்காக விநாடிக்கு 3500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 

அரசு ஊழியர் வெட்டிக் கொலை

புதுச்சேரி : புதுச்சேரி பூரணகுப்பம் பகுதியில் அரசு ஊழியரான மனோகர் வந்த கார் மீது கையெறி குண்டு வீசி தாக்கியதுடன், தப்பி ஓட முயன்ற அவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளது. இந்த கொலைக்கு காரணமாக குற்றவாளிகளை உடனே கைது செய்யும் வரை மனோகரின் உடலை எடுக்க விட மாட்டோம் என மனோகரின் உறவினர்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு மனோகரின் சகோதரர் கண்ணன் எனபரும் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

அம்மா உணவத்தை பாராட்டிய தென்கொரிய தூதர்

மதுரை : மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள அம்மா உணவத்தை பார்வையிட்ட தென்கொரிய கன்சல் ஜெனரல் சூனே சூகின், அம்மா உணவகத்தில் உணவு தரமானதாகவும், ருசியாகவும் இருக்கிறது. பராமரிப்பும் சுகாதாரமான முறையில் உள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையாக உள்ளது என பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

 

காசநோய் துணை இயக்குநரிடம் விசாரணை

ஊட்டி : காசநோயை தடுப்பதற்கான கள மேற்பார்வையாளர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக காசநோய் துணை இயக்குனர் டாக்டர் வசந்த் என்பவரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்கள் டாக்டர் வசந்தை தாக்கி வருவதால் அங்கு பதட்டம் நிலவுகிறது

 

திமுக ஒன்றிய தேர்தலில் மோதல்

தேவகோட்டை : தேவகோட்டையில் திமுக ஒன்றிய செயலாளர் தேர்தல் இன்று நடைபெற்றது. வடசென்னை திமுக செயலாளர் சசிகுமார் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் பூபாலசிங்கம் மற்றும் அம்சகண்ணன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலில் ஓட்டளிப்பதற்காக பூபாலசிங்கத்தின் ஆதரவாளர்கள் அருகில் இருந்த திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு வந்த அம்சகண்ணனின் ஆதரவாளர்கள், பூபாலசிங்கத்தின் ஆதரவாளர்களை கடுமையாக தாக்கினர். இதில் 2 பேரின் மண்டை உடைந்தது. 2 பேர் காயமடைந்தனர். கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் காணப்படுகிறது.

 

எனது எண்ணம் இந்தியா மீது தான்:மோடி

டல்டான்காஜ்: ஜார்கண்ட் மாநிலத்தின் டல்டான்காஜ் பகுதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வெற்றி பெற செய்த ஜார்கண்ட் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. நான் வெளிநாட்டு சற்றுப்பயணத்தில் இருந்தாலும், எனது நினைவு முழுவதும் இந்திய ஏழை மக்கள் மீதும் இந்திய விவசாயிகள் மீதுமே இருந்தது. நான் ஜப்பான் சென்ற போது அங்கு நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளை சந்தித்து ஆதிவாசி குடும்பங்களுக்கு சுகாதார வசதி அளிப்பது தொடர்பாக பேசினேன். நமது நாடு பணக்கார நாடு தான். ஆனால் மக்கள் தான் ஏழையாக உள்ளனர். அதற்கு காரணம், நீங்கள் தேர்வு சென்ற அரசு உங்களின் கனவுகளை உடைத்தெறிந்தது தான் என பேசினார்.

 

உலகம் இந்தியாவை கவனித்து வருகிறது:மோடி

புதுடில்லி : தனது 3 நாடுகள் பயணம் குறித்து தனது மைக்ரோ பிளாக்கில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, எனது சுற்றுப் பயணத்தின் போது நான் உலக தலைவர்களை சந்தித்தேன். இந்த இருதரப்பு சந்திப்பு, உலக நாடுகள் இந்தியா மீது மதிப்பும் எதிர்பார்ப்பும் வளர்ந்து வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

 

நாமக்கல்லில் திடீர் சாலை மறியல்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கவுண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் நடேசன். விவசாயியான இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவரை நல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அங்கு டாக்டர்கள் யாரும் இல்லாததால், சுகாதார மையத்தின் பின்புறம் குடியிருந்த டாக்டர் மேகலாவை சிகிச்சை செய்ய வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் மேகலா தாமதமாக வந்ததுடன், சிகிச்சை அளிக்கவும் மறுத்துள்ளார். இதனையடுத்து திருச்செங்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நடேசன் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நடேசனின் உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் நல்லூர்-திருச்செங்கோடு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

2ஜி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

புதுடில்லி : கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்யப்பட்ட வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் நடத்தப்படும் விசாரணை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24ம் தேதிக்கு பிறகு அரசு தரப்பு சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

தர்மபுரியில் மேலும் ஒரு குழந்தை பலி

சேலம் : தர்மபுரி மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு குழந்தை உயிரிழந்துள்ளது. பவித்ரா என்பவரின் குழந்தை உயிரிழந்துள்ளது.

 

2014-ன் சிறந்த கண்டுபிடிப்பு மங்கல்யான்:டைம்ஸ்

நியூயார்க் : 2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளில் மங்கல்யான் குறிப்பிடத்தக்கது என டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. இது குறித்து டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா என பல நாடுகள் முயன்றும் முடியவில்லை. ஆனால் இந்தியா, செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது. அதனை செவ்வாயின் சுற்றுவட்ட பாதையிலும் வெற்றிகரமாக நிலைநிறுத்தி உள்ளது. வெறு எந்த ஆசிய நாடும் செய்யாத சாதனை இது என தெரிவித்துள்ளது. டைம்ஸ் பத்திரிக்கையின் 2014ம் ஆண்டின் சிறந்த 25 கண்டுபிடிப்புக்கள் பட்டியலில் மங்கல்யான் முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தேர்தல் கமிஷனிடம் வாசன் தரப்பினர் மனு

புதுடில்லி : ஜி.கே.வாசன் தொடங்கி உள்ள புதிய கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரை பதிவு செய்யமாறு ஞானதேசிகன் உள்ளிட்ட வாசன் ஆதரவாளர்கள் டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

 

பா.ம.க., செயலாளர் திடீர் விலகல்

நெல்லை : பா.ம.க., கொள்கை பரப்பு அணியின் செயலாளர் வியனரசு, அப்பகுதியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போது கட்சி பொறுப்பு அன்புமணியிடம் சென்று விட்டது. அவருக்கு ஏழை மக்களின் பிரச்னை புரிவதில்லை. அதனால் கட்சி பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார். பாமக செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வரும் நிலையில் வியனரசு கட்சி பொறுப்பில் இருந்து விலகியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

குற்றாலம்:அருவியில் தடை நீக்கம்

நெல்லை : மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றா அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை பக்தர்கள் அதிகளவில் குற்றால அருவிகளில் குளித்து வருகின்றனர்.

 

பெண்கள் விடுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது

நெல்லை : நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதிக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் விடுதியில் இருந்து வெளியேற முடியாமல் 25 மாணவிகள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

பாமக செயற்குழு கூடியது

சென்னை : சென்னையில் பாமக செயற்குழு இன்று காலை கூடி நடைபெற்று வருகிறது. இதில், 2016ம் ஆண்டு தேர்தலில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர்கள் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

 

24 மீனவர்களின் காவல் நீடிப்பு

கொழும்பு : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் இருக்கும் ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 24 மீனவர்களின் காவல் டிசம்பர் 5ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

தேனி லோயர் கேம்ப் பகுதியில் கொண்டாட்டம்

தேனி: பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை எட்டியதை அடுத்து தேனி லோயர் கேம்ப் பகுதியில் பென்னிகுக் சிலை அருகே மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். அணைக்கு 1,500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வரும் நீர் வைகை அணைக்கு திருப்பி விடப்படுகிறது. 35 ஆண்டுகளுக்கு பின்னர் நீர் மட்டம் 142 அடியை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆவின் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

விழுப்புரம் : ஆவின் பால் முறைகேடு வழக்கில் வைத்தியநாதனின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் கோர்ட் தெரிவித்துள்ளது.

 

மிசோரமில் மிதமான நிலநடுக்கம்

எய்ஜ்வால் : மிசோரமில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

 

திமுக.,வினர் நல்ல நடிகர்கள்:சாமி

புதுடில்லி : திமுக தலைவர் கருணாநிதியின் வலியுறுத்தலை ஏற்று மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் பேரிலேயே இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை பெற்றதாக திமுக தரப்பில் கூறப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி, திமுக.,வினர் அனைவரும் நல்ல நடிகர்கள். அவர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் பெயர் வாங்க நினைக்கின்றனர். மீனவர்கள் பிரச்னையில் நான் தான் முதல் முயற்சியை மேற்கொண்டேன் என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.

 

75 அடி கேக் வெட்டிய முலாயம்சிங்

ராய்பூர் : சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் தனது 76வது பிறந்தநாளை முன்னிட்டு 75 அடி நீளமுள்ள கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். உ.பி.,யில் இன்றும் நாளையும் முலாயமின் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் உ.பி.,யின் 45 அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

 

மேற்குவங்க அமைச்சருக்க சிபிஐ சம்மன்

கோல்கட்டா :சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக மேற்குவங்க போக்குவரத்து துறை அமைச்சர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் 2 அமைச்சர்களுக்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

 

சர்வதேச இந்து மாநாடு துவங்கியது

புதுடில்லி : டில்லியில் நடைபெறும் சர்வதேச இந்து மத மாநாடு இன்று துவங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், தலாய் லாமா, அசோக் சிங்கல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

சுப்ரீம் கோர்ட்டிற்கு சாமி வலியுறுத்தல்

புதுடில்லி : சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை 2ஜி வழக்கு விசாரணையில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி, இனி வரும் காலங்களில் சிபிஐ இயக்குனர்கள் தங்களின் பதவிகளை தவறாக பயன்படுத்தாமல் இருக்க சுப்ரீம் கோர்ட் வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

 

மோடிக்கு ஹமீது கர்சாய் நன்றி

புதுடில்லி : ஆப்கானிஸ்தானிற்கு ஆதரவு அளிக்க இந்திய பிரதமர் மோடி ஒத்துக்கொண்டுள்ளதற்கு நன்றி எனவும், ஆப்கானிஸ்தானை மீண்டும் புதுப்பிக்க உதவி செய்ய மோடி முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார்.

 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு:சிபிஎஸ்இ யோசனை

புதுடில்லி : சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வை பொதுத் தேர்வாக அறிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

 

பங்குசந்தையில், நிப்டி புதிய உச்சத்தை தொட்டது

மும்பை : பங்குசந்தைகளில் காணப்படும் தொடர் ஏற்றத்தால் நிப்டி இன்று(நவ.,21ம் தேதி) புதிய உச்சத்தை தொட்டது. ஆசிய பங்குசந்தைகளில் ஏற்ற-இறக்கம் இருந்தபோதிலும் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கியதால் பங்குசந்தைகளில் ஏற்றம் தொடர்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 187.29 புள்ளிகள் உயர்ந்து 28,254.85-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 59.75 புள்ளிகள் உயர்ந்து 8,461.65 எனும் புதிய உச்சத்தை தொட்டது.

 

குளம் உடைந்து வீடுகளில் நீர்:மக்கள் பதற்றம்

நெல்லை : நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பாம்பன் குளத்தில் உடைப்பு ஏற்பட்டதால், கிருஷ்ணபுதூர் கிராமத்திற்குள் நீர்புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் மேடான இடங்களில் உள்ள பள்ளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

 

சுப்ரீம் கோர்ட் உத்தரவு:காங்., வரவேற்பு

புதுடில்லி : 2ஜி வழக்கு விசாரணையில் இருந்து சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை விலக்கி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு குழப்பம் அளிப்பதாக உள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

ஜப்பான் பார்லிமென்ட் கலைப்பு

டோக்கி்யோ : ஜப்பான் பார்லிமென்ட்டை கலைக்க அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய தேர்தல் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

மோடிக்கு அமெரிக்க நிர்வாகம் பாராட்டு

வாஷிங்டன் : பிரதமர் மோடியின் அமெரிக்க வருகை குறித்து தெரிவித்துள்ளஅமெரிக்க நிர்வாக அதிகாரி ஆன்டனி பிலின்கென், மோடியின் அமெரிக்க வருகை அபரிமிதமான வெற்றியை ஈட்டி தந்துள்ளது. மோடியின் வருகையால் இந்தியா-அமெரிக்க உறவு குறிப்பிடும்படியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

முல்லை பெரியாறில் நீர்திறப்பு அதிகரிப்பு

தேனி : முல்லை பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1400 கனஅடியில் இருந்து 1913 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதன் காரணமாக நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

நெல்லையில் விடிய விடிய கனமழை

திருநெல்வேலி : நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. பாபநாசம் அணை ஒரே நாளில் 3.25 அடி உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வியாழக்கிழமை மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. விடிய விடிய மழை கொட்டியது. இன்றும் கனமழை தொடர்கிறது. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாயம், குடிநீர் தேவையின் ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 124.50 அடியாக உள்ளது. நேற்றை விட ஒரே நாளில் 3.25 அடி உயர்ந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 143 அடியாகும். அணைப்பகுதியில் 132 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 635 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. மாவட்டம் முழுவதும் பலத்தமழை பெய்வதாலும், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் செல்வதாலும் அணை நீர் வெளியேற்றப்படாமல், மூடப்பட்டுவிட்டது. இருப்பினும் வழக்கம்போல ஸ்ரீவைகுண்டம் அணையை கடந்து தாமிரபரணியில் தண்ணீர் வீணாக கடலில் செல்கிறது.இன்று காலை நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அதிகபட்சமாக 188 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. காயல்பட்டணத்தில் 175 மி.மீ., நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 165 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் 93 மி.மீ., சேரன்மகாதேவி 92 மி.மீ.,மூலைக்கரைப்பட்டியில் 96 மி.மீ., ராதாபுரம் 139 மி.மீ., ஆலங்குளம் 113 மி.மீ.,மழை பதிவானது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 134.58 அடியாக இருந்தது. ஒரே நாளில் ஐந்து அடி உயர்ந்து இன்று காலை 139.99 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 85.35 அடியாக இருந்தது. இரண்டு அடி உயர்ந்து இன்று காலை 87.90 அடியாக உயர்ந்தது.

 

அனுஷ்காவுடனான காதல் உண்மை:வீராத்

புதுடில்லி : நடிகை அனுஷ்கா சர்மா உடனான காதல் உண்மை தான் என ஒப்புக் கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் வீராத் கொஹ்லி, தங்களை தனிமையில் இருக்க விடுங்கள் என மீடியாக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தங்கச்சிமடம் புறப்பட்டனர் மீனவர்கள்

சென்னை : இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் நேற்று டில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பி உள்ள அவர்கள், தற்போது சொந்த ஊரான தங்கச்சிமடத்திற்கு புறப்பட்டுள்ளனர். அவர்களை வரவேற்க தங்கச்சிமடம் பகுதியில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

குற்றால அருவிகளில் குளிக்க தடை

நெல்லை : மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் வந்த ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

ஓராண்டில் 10,577 குழந்தைகள் மாயம்

போபால் : மத்திய பிரதேசத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகள் மாயமானது தொடர்பாக 10,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 90 சதவீதம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 3370 பெண் குழந்தைகள் உள்ளிட்ட 4506 குழந்தைகள் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை தேடுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட், மத்திய பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

3 மணிநேரம் போக்குவரத்தில் சிக்கிய மோடி

புதுடில்லி : 3 நாடுகளில் 10 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு பிரதமர் மோடி நேற்று காலை டில்லி திரும்பினார். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் பிரதமர் இல்லத்திற்கு செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக, 5 நிமிடத்தில் செல்ல வேண்டிய பிரதமரின் பயணம் 3 மணிநேரம் தாமதமானது. போக்குவரத்து போலீசார் எவ்வளவோ முயன்றும் 3 மணிநேரத்திற்கு பிறகே போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், பிரதமர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, போக்குவரத்தும் சரி செய்யப்பட்டிருந்தது. ஆனால் காலை நேரம் என்பதால் வழக்கமான போக்குவரத்து நெரிசல் நேற்று எதிர்பாராத வகையில் அதிக அளவில் இருந்தது என தெரிவித்துள்ளனர்.

 

அனுமதி பெறாத பள்ளிகளை மூட நடவடிக்கை

பெங்களூரு : அக்டோபர் மாதம் அனுமதி பெறாமல் இயங்கிய பள்ளி ஒன்றில் 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அந்த பள்ளியை மூடவும், அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றவும் கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பல பள்ளிகள் இயங்கி வருவது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அனுமதி பெறாமல் இயங்கும் பள்ளிகள் அனைத்தும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பள்ளிகளில் படிக்கும் சுமார் ஒரு லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

 

டைரக்டர் மைக் நிக்கோலஸ் காலமானார்

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க டைரக்டர் மைக் நிக்கோலஸ் (83), மாரடைப்பால் காலமானார். சுமார் 25 படங்களை இயக்கிய இவர், தி கிராஜூவேட் படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றுள்ளார். சில படங்களில் காமெடியனாகவும் நடித்துள்ள இவர் எம்மி, கிராமி, ஆஸ்கார், டோனி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

 

மதுரையில் கல்லூரி மாணவன் கொலை

மதுரை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் விவேக்(18). மதுரை தனியார் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த இவர், பகுதி நேரமாக டாஸ்மாக் கடை ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதுபான சப்ளை செய்வதில் விவேக்கிற்கும், மர்ம கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று இரவு விவேக்கை வழிமறித்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், விவேக்கை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தப்பி ஓடி விட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

2 நாட்களில் 8 பேர் மீது குண்டாஸ்

மதுரை : மதுரையில் கடந்த 2 நாட்களில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இவர்கள், மதுரை போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் மத்தோரின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நெல்லை: பல்கலை தேர்வு ரத்து

நெல்லை: தொடர மழைகாரணமாக நெல்லை மாவட்டத்தி்ல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது., இந்நிலையில் மாவட்டத்தி்ல் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கண்ணையன் தெரிவித்துள்ளார். ரத்து செய்யப்பட்ட தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

சூரிய மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு

புதுடில்லி: சூரிய மின் சக்தி உற்பத்திதிறன் அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப் பட்டுள் ளது. இந்தியாவின் சூரிய மின் சக்தி உற்பத்தி திறன் 3 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியுள்ளதாக வும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் இது வரையில் சுமார் 734 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின சக்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டை ஒப்பிடுகையில் இவை குறைவாகவே காணப்படுவதாகவும் ஆய்வி்ல் கூறப்பட்டுள்ளது. மேலும் நிலக்கரி உற்பத்தி துறை பல்வேறு பிரச்னைகளில் சிக்கிதவித்து வரும் வேளையி்ல் சூரிய மின்சக்திக்கான தேவை அதகரித்துள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

குளிர் கால கூட்டத்தொடர்:39 மசோதா தாக்கல்

புதுடில்லி : வரும் 24-ம் தேதி துவங்கி டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரையில் நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் சுமார் 39 மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்சூரன்ஸ் மசோதா, சரக்கு சேவைவரி, லோக்பால் சட்டதிருத்தம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ஜவுளித் துறை, சி,பி,ஐ.,இயக்குனரை தேர்வு செய்யும் சட்ட திருத்தமசோதா உட்பட பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. முன்னதாக மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவது குறித்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பார்லி., விவகாரத்துறை இணை அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோர் பங்கேற்றனர்.

 

சீதா பிறந்த இடம்: மோடி பயணம் ரத்து

காத்மாண்டு : நேபாள நாட்டில் உள்ள சீதா பிறந்த இடத்திற்கு செல்ல இருந்த மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் வரும் 26 மற்றும் 27 ஆகிய இரு தேதிகளில் 18-வது சார்க் அமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேபாள நாட்டிற்கு செல்ல உள்ளார். மேலும் நேபாள நாட்டில் உள்ள சீதா பிறந்த இடமான ஜானக்பூருக்கும் செல்லும் வகையில் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் மோடியின் ஜானக்பூர் வருகையை எதிர்த்து அந்நாட்டின் எதிர்கட்சி்யினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மோடி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.