குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

ஈழத்தமிழ் மக்களின் விடயத்தில் இந்தியா மெளனம் காக்க கூடாது

இந்திய முன்னாள் நீதியரசர் தெரிவிப்பு

இலங்கைத் தமிழ் மக்களின் மனிதவுரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமைப்பாடு இந்தியாவுக்கு உண்டு என இந்தியாவின் முன்னாள் நீதியரசர் ரஜீந்தர் சஸார் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை நிலைநிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் இந்தியாவும் இதுவரை எதுவும் செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் எழுதிய கட்டுரை ஒன்றிலேயே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார். இக்கட்டுரையில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

இலங்கையில் இடம்பெற்ற போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இப்போரின்போது போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு காத்திரமான ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளது.

நிபுணர்கள் குழுவினால் காத்திரமான ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்ட சர்வதேச போர் நியமங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான, வெளிப்படையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றம் இழைத்தவர்கள் எவராயினும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு இத்தகைய விசாரணைகளை மேற்கொள்வதற்கான சர்வதேச நியமங்களைக் கொண்டிருக்கவில்லை.

அத்துடன் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்குத் தடையாகவிருந்த காரணிகள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு ஆராயவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான மூல காரணிகள் கண்டறியப்படாது அங்கு இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.