குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

சிங்களவர், படையினர், மகாசங்கத்தினர் மத்தியில் அரசு பிளவை ஏற்படுத்தியுள்ளது : ரணில்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனால் செய்ய முடியாததை அரசாங்கம் இன்று செய்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பாதுகாத்த ஜெனரல் சரத் பொன்சேகா தேசத் துரோகியாகி விட்டார். கே.பி. இன்று தேசப்பற்றாளர் ஆகிவிட்டார் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார். ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ள 10 இலட்சம் மக்களின் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையின் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தன நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

"குற்றங்களை முன்வைத்தே எவரையாவது கைது செய்ய முடியும். இது தான் சட்டம். அரசியலமைப்பும் இதனையே வலியுறுத்துகிறது. ஆனால், இவையனைத்தையும் மீறி ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும். இன்று அவரது மருமகனின் தாயாரைg கைது செய்துள்ளனர். எதிர்காலத்தில் இறந்து போன அவர்களது உறவினர்களின் புதை குழிகளையும் தோண்டினாலும் அது அதிர்ச்சிக்குரிய விடயமல்ல.

எமது நாட்டு அரசியல் வரலாற்றில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

இவை போன்ற சம்பவங்கள் மியான்மாரில் இடம்பெற்றன. இன்று எமது நாட்டிலும் நடைபெறுகிறது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம். ஆனால், இன்று இனங்களிடையே அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது.

முதன் முறையாக சிங்கள மக்களை, மகா சங்கத்தினரை, படையினரை அரசாங்கம் பிளவுபடுத்தியுள்ளது. தாய்நாட்டை பாதுகாத்தவரை தேசத் துரோகியாக முத்திரை குத்தி நாட்டை காட்டிக் கொடுத்த கே.பிக்கு தேசப்பற்றாளன் முத்திரையை அரசாங்கம் குத்தியுள்ளது.

நாட்டில் அனைவராலும் மதிக்கப்படும் மகா சங்கத்தினர் விமர்சிக்கப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். அந்தளவுக்கு ஒழுக்கம் சீர்குலைந்து போய்விட்டது.

ஜெனரல் பொன்சேகா நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களைப் பாதுகாத்தார். அவர் தேசிய வீரர். எனவே தேர்தலின் போது அவருக்கு வாக்களித்தோர், வாக்களிக்காதோர் அனைவரும் அவரின் விடுதலைக்கான மகஜரில் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும்.

இது ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டுமல்ல, நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமான போராட்டமுமாகும்.

இந்த நாட்டை மியன்மாராக மாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம். எனவே மக்கள் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக அணி திரள வேண்டும்." இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சோமவன்ச அமரசிங்க

"ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு 10 லட்சம் கையெழுத்துக்கள் அல்ல, அதனையும் தாண்டி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற வேண்டும். அவரின் விடுதலைக்காக தேசிய, சர்வதேச ரீதியில் இன்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனை மேலும் உத்வேகப்படுத்த வேண்டும்.

இந்த அரசாங்கத்திடம் அதிகாரம் இருக்கின்றது. ஆனால், புத்திசாலித்தனம் கிடையாது. அண்மையில் லங்கா பத்திரிகை சீல் வைக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பால் சீல் உடைக்கப்பட்டது.

அதேபோன்று அதன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் சென்றார்கள். குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இத் தீர்ப்பு வெளியாகி அரை மணித்தியாலத்தில் ஊடகவியலாளர்களைக் கைது செய்யும்போது தன்னிடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி அறிக்கை வெளியிட்டார். இவ்வாறு அரசாங்கம் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.

சர்வதேச ரீதியாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஆளாகியுள்ளது. இதனால் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையும் பறிபோயுள்ளது."

திஸ்ஸ அத்தநாயக்க

"ஜெனரல் பொன்சேகாவை எதுவிதமான நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அரசியலமைப்புக்கு விரோதமான அரசின் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்."

இந்நிகழ்வில் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, தவிசாளர் ருக்ஷன் சேனாநாயக்க, பிரதித் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் ஆர். யோகராஜன், எம். சச்சிதானந்தன், மேல் மகாண சபை உறுப்பினர்களான முஸம்மில், முஜிபுர் ரஹ்மான், எஸ். சதாசிவம் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், ஆதரவாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.