நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலகிலேயே மிக உயர்ந்த விளம்பரபலகை அமைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விளம்பர பலகை 80அடி உயரத்திலும், 330 அடி அகலத்திலும், 25ஆயிரம் சதுர அடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அளவு ஒரு கால்பந்து மைதான அளவிற்கு சமமானது ஆகும். இதில் விளம்பரம் செய்ய நான்கு வார காலத்திற்கு ரூ.25 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கூகுள் நிறுவனம் விளம்பரம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. டைம்ஸ் சதுக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பலகையினை நாள் ஒன்றுக்கு 3லட்சம் மக்களும், ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளும் பார்ப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.