குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

19.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சாருக்கான் வீடு மீது தாக்குதல் நடத்த சதி

மும்பை : பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக மும்பை போலீசார் சிலரை கைது செய்தள்ளனர். தாக்குதலில் ஈடுபட முயன்ற 13 பேரில் 3 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில், மகேஷ் பட் குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்த முயன்ற கும்பல் தங்களின் கும்பலை சேர்ந்தவர்களிடம் நடிகர் ஷாருக்கானின் வீடு மற்றும் அலுவலகம் மீதும், டைரக்டர் பரக் கானின் வீடு மீதும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்த அறிவுறுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

வழக்கை எதிர்கொள்வோம்-சித்தராமையா

பெங்களூரு: காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, 'தடுப்பணை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை எதிர்கொள்வோம். காவிரி ஒப்பந்தத்தின்படி, தமிழகத்திற்கு 192 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்படும்,' என்றார்.

 

மின் இணைப்புக்கு லஞ்சம் : உதவி பொறியாளர் கைது

கிருஷ்ணகிரி: வீட்டுக்கு புதிய மின் இணைப்பு தர, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த, திம்மாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ், 31. இவர், அதே பகுதியில் புதியதாக வீடு கட்டியுள்ளார். வீட்டுக்கு மின் இணைப்பு வேண்டி ரமேஷ், சில மாதங்களுக்கு முன், காவேரிப்பட்டணம், மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். அவருக்கு மின் இணைப்பு கொடுக்காமல் பல காரணங்களை கூறி, மின்வாரிய அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். கடந்த, 14ம் தேதி ரமேஷ், இங்கு பணியாற்றிய வந்த அரூரை சேர்ந்த உதவி பொறியாளர் சிவக்குமார், 45, என்பவரை, அணுகி, தன் புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கும் படி கேட்டுள்ளார்.உடனடியாக மின் இணைப்பு வேண்டும் என்றால், தனக்கு, 3,000 ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என, சிவக்குமார் கூறினார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ரமேஷ், இது குறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் அளித்தார்.லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் அறிவுரைபடி, காவேரிப்பட்டணம் மின்வாரிய அலுவலகம் சென்ற ரமேஷ், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, உதவி பொறியாளர் சிவக்குமாரிடம் கொடுத்தார். சிவக்குமார் பணத்தை வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஞானசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், சிவக்குமாரை கைது செய்தனர்.

 

பலரின் உயிரை காப்பாற்றியுள்ளோம்: அரியானா அரசு

ஹிசார்: சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் கைது விவகாரத்தில், ஏற்பட்ட நிலையை அமைதியாகவும், கையாண்டதாகவும், பலரின் உயிரை அரசு காப்பாற்றியுள்ளதாகவும் அரியானா அரசு கூறியுள்ளது.

 

ராம்பாலுக்கு மருத்துவ பரிசோதனை

ஹிசார்: கொலை வழக்கில் சட்லோக் ஆசிரமத்தில் சாமியார் ராம்பாலை போலீசார் கைது செய்தனர். ஆவரை சண்டிகருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றுள்ளனர். மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரை நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

கோமாவில் இருந்து வெளியே வந்தார் பார்முலா ஒன் வீரர் ஜூலியஸ் பியான்சி

லண்டன்: ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் தொடரின் போது நடந்த விபத்தில் சிக்கி தலையில் படுகாயத்துடன் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த மரூசியா அணி வீரர் ஜூலியஸ் பியான்சி, கோமாவிலிருந்து வெளியே வந்தார்.

 

சர்ச்சைக்குரிய அரியானா சாமியார் ராம்பால் கைது

சண்டிகர்: சர்ச்சைக்குரிய அரியானா சாமியார் ராம்பால் இன்று கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலம் ஹிசாரில் ஆசிரமம் அமைத்துள்ள சாமியார் ராம்பால், கடந்த 2006ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதற்காக வந்த போலீசார் மீது ஆதரவாளர்களை ஏவி விட்டு தாக்குதல் நடத்தினார். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் பத்திரிக்கையாளர்கள் உட்பட 200 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், சாமியாரையும், அவரது ஆதரவாளர்களையும் பிடிப்பதற்காக போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று இரவு சாமியார் ராம்பால் கைது செய்யப்பட்டார். அவரை ஆம்புலன்சில் போலீசார் அழைத்துச் சென்றனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.

 

தர்மபுரியில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பெரியம்பட்டி அருகே கஜநாயக்கன்ஹள்ளியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள்.

 

442,000 கார்களை திரும்ப பெற்றது வோல்க்ஸ்வோகன்

புதுடில்லி: பிரச்னையை சரி செய்வதற்காக, வோக்ஸ்வோகன் கார் நிறுவனம் 442,000 கார்களை திரும்ப பெற்றுள்ளது.

 

அரியானாவில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர ராஜ்நாத் வலியுறுத்தல்

புதுடில்லி: அரியானாவில் சாமியார் ராம்பாலை கைது செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என முதல்வர் கட்டாரை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

ராம்பாலை கைது செய்யும் நடவடிக்கை தொடரும்

சண்டிகர்: சாமியார் ராம்பாலை கைது செய்யும் வரை, போலீசாரின் நடவடிக்கை தொடரும் என அரியானா முதல்வர் கூறியுள்ளார். அவர் மீது அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே, சாமியாரை கைது செய்வதற்கான இறுதிக்கட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரியானா மாநில போலீஸ் ஐ.ஜி., கூறியுள்ளார்.

 

திருவள்ளூரில் 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் விஜயநல்லூர் பகுதியில் குடோன் ஒன்றிலிருந்து 2 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செம்மரக்கட்டைகள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட முருகானந்தம் என்பவர் அளித்த தகவலின் பேரில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

பா.ஜ., அரசை கவிழ்க்கும் எண்ணமில்லை: சரத்பவார்

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு இடைத்தேர்தல் வாய்ப்பு உள்ளதாக நேற்று கூறிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தற்போது, பட்நாவீஸ் அரதை கவிழ்க்கும் எண்ணம் ஏதுமில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக கட்சி கூட்டத்தில், அவர் மேலும் பேசியதாவது: அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏதும் கிடையாது. அரசை கவிழ்க்கும் எண்ணம் ஏதும் கிடையாது என்ற கருத்துக்கு எதிர்மாறாக நான் எதையும் பேசவில்லை. அனால், மாநில நலனுக்கு எதிராக அரசு செயல்படும் பட்சத்தில் கட்சி ஒரு நிலையை எடுக்கும். இதனால் அரசை கவிழ்ப்போம் என யாரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. நாம் எதிர்க்கட்சியாக அமர வேண்டும் என மக்கள் தீர்ப்பு கொடுத்துள்ளனர். மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டால், வீதிகளில் இறங்கி போராடுவோம் என கூறினா

 

குழந்தையுடன் தாய் தற்கொலை

பொள்ளாச்சி : பொளாச்சியை அடுத்த உடையங்குளத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி அனிதா(27) இவர்களுக்கு இரண்டரை வயதில் சிவதர்ஷன் என்ற குழந்தை உள்ளது. அனிதா, தனது குழந்தையுடன் பஜனைகோவில் தெருவில் உள்ள விநாயகர்கோவில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இறந்த அனிதா மற்றும் குழந்தையின் உடல் வேட்டைக்காரன் புதூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

கோவை அருகே கார் விபத்தில் மூவர் பலி

கோவை: கோவை, பெரியநாயக்கன் பாளையம் அருகே நடந்த கார் விபத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். காரமடையைச் சேர்ந்த மொய்தீன்ராஜ், மனைவி அப்சத், மாமியார் மாலம்மாள் ஆகியோருடன், கோழிக்கோட்டில் இருந்து காரமடைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். பெரியநாயக்கன்பாளையம் அருகே கார் வந்தபோது, சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது, அது அருகில் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் அப்சத், மாலம்மாள், புளிய மரத்தடியில் கண்ணாடி விற்றுக் கொண்டிருந்த பைபு என்ற வாலிபர் என மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயம் அடைந்த மொய்தீன்ராஜ், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு்ள்ளார்.

 

அணை விவகாரம் - சித்தாராமைய்யாவிடம் மனு : சரத்குமார்

திருச்சி: "விரைவில், தமிழகம் முழுவதும் மக்கள் தரிசனம் நிகழ்ச்சி நடத்தப்படும்,'' என, ச.ம.க., தலைவர் சரத்குமார் தெரிவித்தார். திருச்சியில், அவர் நிருபர்களிடம் கூறுகையில், காவிரியாற்றின் குறுக்கே, கர்நாடகா அரசு, இரு அணைகளை கட்ட முயற்சி செய்கிறது. இதை தடுத்து நிறுத்தக் கோரி, அந்த மாநில முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, ச.ம.க., சார்பில் மனு கொடுக்கப்படும். தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியை, பன்னீர் செல்வம் சிறப்பாக நடத்தி வருகிறார். முதல்வராக ஜெயலலிதா இல்லாததால், எதிர்க்கட்சிகள் தேவை இல்லாமல் குறை கூறுகின்றன. விரைவில், ச.ம.க., கட்சி சார்பில், மக்கள் தரிசனம் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். இதன் மூலம், மாநில முழுவதும் உள்ள மக்களை சந்திக்க முடியும். தொகுதி செயலாளர் பயிற்சி கூட்டம் மூலம், தரமான மக்கள் சேவை செய்ய, கட்சி நிர்வாகிகளை தயார் படுத்துகிறோம், என்றார்.

 

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

புதுடில்லி : முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையை ஈடுபடுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

டுவிட்டரில் மோடிக்கு 8 மில்லியன் ரசிகர்கள்

புதுடில்லி : டுவிட்டர் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனை கடந்துள்ளது. கடந்த சில நாட்களில் மோடிக்கு டுவிட்டரில் உள்ள ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

கடலில் மூழ்கிய மாணவர் மாயம்

மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள தனியார் கலைக் கல்லூரி ஒன்றில் படித்து வந்த, மதுரையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், தனது நண்பர்கள் 5 பேருடன் கல்லூரிக்கு செல்லாமல், தரங்கம்பாடி கடலுக்கு சென்றார். அங்கு குளித்தபோது, ராட்சத அலை அவரையும், மற்றொரு மாணவரான பிரவீண்குமாரையும் இழுத்துச் சென்றது. அருகில் இருந்த மீனவர்கள் காயங்களுடன் பிரவீண்குமாரை மீட்டனர். சீனிவாசன் மாயமான நிலையில், அவரை தேடும் பணியில் மீனவர்களும், தீ அணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.

 

என் புகழுக்கு களங்கம் விளைவிக்கவே வழக்கு - ரஜினி மனு

மதுரை : ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள லிங்கா படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் கதையை, கர்நாடகத்தைச் சேர்ந்த பொன் குமரன் எழுதியுள்ளார். லிங்கா படப்பிடிப்புகள் முடிந்து டிசம்பர் மாதம் வெளியிட தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் லிங்கா படத்தின் கதை என்னுடையது என்று மதுரையைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையொட்டி இயக்குனர் ரவிகுமார், கதாசிரியர் பொன்குமார் உள்ளிட்ட படம் சம்பந்தப்பட்ட பலருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக ரஜினி தரப்பில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில் லிங்கா படத்தின் கதையை திருடியதாக கூறப்படும் செய்தி பொய்யானது. இப்படத்தில் நான் நடிகர் மட்டும் தான் தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ கிடையாது. என் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கு நவ.,24ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

க்ளீன் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள்

புதுடில்லி : பிரதமர் மோடியின் க்ளீன் இந்தியா திட்டத்தில் சினிமா நட்சத்திரங்களை தொடர்ந்து, கிரிக்கெட் வீரர்கள் சிலரும் இணைந்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, சிகர் தவான் ஆகியோர் இத்திட்டத்தில் இணைந்து டில்லியில் உள்ள தெருக்களை தங்களின் ரசிகர்களுடன் சென்று சுத்தம் செய்தனர்.

 

ராம்பால் சரண் அடைய வேண்டும்-டி.ஜி.பி.,

சண்டிகார்: ஹிசார் ஆஸ்ரமத்தில் மறைந்துள்ள சாமியார் ராம்பால் உடனடியாக சரண் அடைய வேண்டும் என, அரியானா டிஜிபி எச்சரித்துள்ளார். மேலும் சாமியாருடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்றும் கூறி உள்ளார். இந்நிலையில், ஆஸ்ரமத்தில் உள்ள சாமியாரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அரசு விளக்கம்: பாண்டியன் மறுப்பு

சென்னை: சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாண்டியன், 'தருமபுரி குழந்தைகள் இறப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. கர்நாடகா தடுப்பணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 22ம் தேதி நடக்க உள்ள விவசாயிகள் போராட்டத்திற்கு எங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும். யூரியா மற்றும் பூச்சிமருந்து தட்டுப்பாட்டை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.

 

காரைக்கால் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

காரைக்கால் : காரைக்கால் பள்ளிகளில் 300 பேருக்கு மேல் இருந்தால் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம கடிதம் வந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தமிழக அரசு மீது ஸ்டாலின் புகார்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், 'தருமபுரி குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசே காரணம். தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்,' என்றார். இப்பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'குழந்தைகள் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கூறி உள்ளார்.

 

பசிபிக் தலைவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி:மோடி

சுவா : பசிபிக் தீவு தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளித்திருப்பதாகவும், பசிபிக் தீவுகளுடன் நெருங்கிய உறவை வளர்ச்சித்துக் கொள்வது இந்தியாவிற்கு மிகவும் முக்கியம் எனவும் பிஜி சென்றுள்ள பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியா வரும் பிஜி நாட்டவருக்கு விமான நிலையத்திலேயே உடனடி விசா வழங்கப்படும் என மோடி அறிவித்தார்.

 

இந்தூரில் பயிற்சி விமானம் விபத்து

இந்தூர் : இந்தூரில் விமானநிலைத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம், தரையிறக்கும் போது விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில், 2 பயிற்சி விமானிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

ஆசிரம மோதல்:டிஜிபி தகவல்

ஹாசர் : அரியானாவின் ஹாசர் பகுதியில் சாமியார் ராம்பாலின் ஆசிரத்திற்கு வெளியே 4 பெண்களின் உடல்கள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரியானா டிஜிபி எஸ்.என்.வஹிஸ்ட் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் உடலில் காயம் இல்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவர்களின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் எனவும் வஹிஸ்ட் கூறினார். இந்நிலையில், ராம்பால் இன்னும் ஆசிரத்தில் தான் இருக்கிறார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

அமைச்சர்கள் பதில் சொல்வதில் வல்லவர்கள்:தமிழிசை

சென்னை : சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், 'இன்றைய தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில் தான் வல்லவர்கள். செயலாற்றுவதில் திறமையானர்கள் அல்ல. மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மத்திய அரசு எடுத்து வருகிறது. 5 மீனவர்களின் தூக்கு தண்டனை விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. தர்மபுரியில் குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக நாளை நேரில் சென்று விசாரிக்க உள்ளேன். தர்மபுரியில் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆவில் பால், முட்டை என அனைத்திலும் ஊழல் உள்ளது. இது, தமிழக அரசு செயலிழந்துள்ளதை தான் காட்டுகிறது,' என்றார்.

 

2ஜி வழக்கு: அரசு சாட்சியம் வாக்குமூலம்

புதுடில்லி : கலைஞர் டிவிக்க சட்டவிரோதமாக பண வரிவர்த்தனை செய்யப்பட்ட வழக்கில் அரசு தரப்பு சாட்சியமான அமலாக்கப் பிரிவு இணை இயக்குனர் ஹிமான்சு, டில்லி சிபிஐ கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் விவசாயம், கட்டுமானம் என வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என தெரிவித்துள்ளார்.

 

ஆதர்ஷ் மோசடி: சி.பி.ஐ., மனு தள்ளுபடி

மும்பை : ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பான வழக்கில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவானின் பெயரை நீக்க கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட் நிராகரித்துள்ளது. மேலும், விசாரணை பட்டியலில் சவானின் பெயர் இருக்க வேண்டும் எனவும் கோர்ட் கூறி உள்ளது

 

ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் இல்லை

காசியாபாத் : உத்திர பிரதேசத்தின் காசியாபாத்தில், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என பெட்ரோல் பங்க் நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிபட்டினத்தை அடுத்த திம்மாவரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக காவேரிப்பட்டினம் மின்சார அலுவலகத்தில் உதவி பொறியாளராக உள்ள சிவக்குமாரிடம் மனு அளித்துள்ளார். உடனடி மின் இணைப்பு தருவதற்கு ரூ.5000 லஞ்சம் தர வேண்டும் என சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்த ரமேஷ், போலீசாரின் அறிவுரையின்படி இன்று காலை ரூ.3000ஐ சிவக்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திரந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

மீனவர்கள் விடுதலை: 2 நாட்களில் முடிவு?

கொழும்பு: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரின் மேல்முறையீட்டு மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது. இது குறித்த முறையான அறிவிப்பை இலங்கை அதிபர் மாளிகை இன்று வௌியிட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து பேசிய செய்தி தொடர்பாளர் மோகன சமரநாயக்கே, '5 மீனவர்களின் தூக்கு தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து 2 நாட்களில் அதிபர் ராஜபக்சே முடிவெடுப்பார்,' என கூறி உள்ளார்.

 

ராமேஸ்வரம் மீனவர் பரிதாப பலி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் மார்ட்டின். இவரும், மேலும் சிலரும் விசைப்படகு மூலம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது படகின் புரப்பல்லரில் கயிறு சிக்கிக் கொண்டு, கோளாறு ஏற்பட்டது. இதை கடலில் குதித்து, மார்ட்டின் சரி செய்து கொண்டிருந்தபோது, புரப்பல்லரின் விசிறி தாக்கி, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

 

சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சத்தை தொட்டது!

மும்பை : இந்திய பங்குசந்தைகள் நேற்று சிறு சரிவுடன் முடிந்த நிலையில் இன்று சென்செக்ஸூம், நிப்டியும் புதிய உச்சத்தை தொட்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 130.72 புள்ளிகள் உயர்ந்து 28,294.01-ஆகவும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிப்டி 29.75 புள்ளிகள் உயர்ந்து 8,455.65 புள்ளிகளையும் தொட்டு புதிய உச்சத்தை எட்டின. முன்னதாக நேற்று சென்செக்ஸ் 28,282.85 புள்ளிகளும், நிப்டி 8,454.50 புள்ளிகளும் தொட்டதே புதிய உச்சமாக இருந்தது. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் முன்னேற்றம், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஹிசார் கலவரம்: 4 பெண்கள் பலி?

சண்டிகார்: சர்ச்சை சாமியார் ராம்பாலின், ஹிசார் ஆஸ்ரமத்தின் முன், போலீசார் நேற்று நடத்திய தாக்குதலில் 4 பெண்கள் இறந்துள்ளதாகவும், ஆனால், போலீசார் பொய்யான எண்ணிக்கையை கூறி உள்ளதாகவும் ஆஸ்ரம நிர்வாகிகள் கூறி உள்ளனர். முன்னதாக, ஒரு பெண்ணும், அவரின் குழந்தையும் இறந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

டாஸ்மாக் கடையை அகற்றகோரி மாணவி உண்ணாவிரதம்

மேலூர் : டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி, மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வாசலில் தனது தந்தை ஆனந்தனுடன் அமந்து, சட்டக் கல்லூரியில் 5ம் ஆண்டு படிக்கும் மாணவி நந்தினி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இடத்தை காலி செய்யுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நந்தினி வலியுறுத்தி உள்ளார்.

 

மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவன் பலி

திருத்தணி : திருத்தணி திருவளங்காடு அருகே உள்ள பழையனூரைச் சேர்ந்தவர் வரதராஜ்(19). இவர் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பரான பத்தாம் வகுப்பு படிக்கும் கஜேந்திரன்(15) என்பவருடன் காணாமல் போன மாட்டை தேடுவதற்காக நடேசன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் அருகே சென்றுள்ளார். அப்போது, காட்டு பன்றிகள் உள்ளே வராமல் இருப்பதற்காக தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை வரதராஜ் தொட்டுள்ளார். இதில் வரதராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த கஜேந்திரன், திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக திருவளங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

ஹிசார் கலவரம் :தாய்,குழந்தை பலி

ஹிசார் : அரியானாவின் ஹிசார் பகுதியில் சாமியார் ஆசிரமம் முன் நேற்று நடைபெற்ற கலவரத்தின் போது காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாயும், 5 வயது குழந்தையும் பலியாகி உள்ளனர். இவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

பிஜி பார்லி.,யில் மோடி உரை

பிஜி : பிஜி சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பார்லிமென்டில் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிஜியின் வளர்ச்சி பாதையில் இந்தியாவும் துணை நிற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் பிஜி இடையேயான உறவை பலப்படுத்துவது குறித்து பிஜி பிரதமர் பைனிமரமாவை சந்தித்த போது ஆலோசனை செய்தேன். இவ்வாறு மோடி பேசி உள்ளார்.

 

மேற்குவங்க அமைச்சரிடம் விசாரணை

கோல்கட்டா : சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு தொடர்பாக மேற்குவங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., ஸ்ரீன்ஜாய் போஸ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இவர்கள் இருவரும் இந்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராவார்கள் என்று கூறப்படுகிறது.

 

காஷ்மீரில் இன்று ராஜ்நாத் சிங் பிரசாரம்

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்காக கிஷத்வர் மற்றும் தோடா பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

 

டைரக்டர் ருத்ரய்யா காலமானார்

சென்னை : பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குனர் ருத்ரய்யா(67), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். இவர் கமல், ரஜினி நடித்த அவள் அப்படிதான் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

 

ஐதராபாத்தில் சினிமா பாணியில் துப்பாக்கிச்சூடு

ஐதராபாத் : ஐதராபாத்தில் தொழிலபதிபர் ஒருவர் மீது மர்ம நபர்கள் சினிமா பாணியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் காரில் வந்த தொழிலதிபர் மீது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பதிலுக்கு தொழிலதிபரும் மர்ம நபர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

குஜராத் அமைச்சரவை இன்று விரிவாக்கம்

அகமதாபாத்: ஆறு மாத இடைவெளிக்கு பின்னர் குஜராத் மாநிலத்தில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளது, மாநிலத்தில் முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.கடந்த மே மாதம் மோடி பிரதமராக பதவியேற்றபின்னர் ஆனந்திபென் படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஆறு மாத கால இடைவெளி்க்கு பி்னனர் முதன் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறுகிறது. இந்த விரிவாக்கத்தில் 4 முதல் 5 எம்.எல்.ஏ.,க்கள் வரை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இன்று நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் மாநில கவர்னர் கோஹ்லி புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

 

சென்னை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

சென்னை: பஹ்ரைனில் இருந்து சென்னை வந்த விமானத்தி்ல் கடத்தி வரப்பட்ட தங்கத்தை சுங்கா இலாகாவினர் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் உசேன் பீர் . இவர் பஹ்ரைன் நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 800 கிராம் எடை கொண்ட தங்கத்தை உடலில் மறைத்து கொண்டு வந்தார். விமான நிலையத்தில் சுங்க இலகாவினர் நடத்திய சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

 

ராணிப்பேட்டை அருகே இன்ஸ்பெக்டருக்கு கத்தி குத்து

ராணிப்பேட்டை: வாலாஜா அருகே சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு கத்திகுத்து விழுந்தது. வாலாஜா அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாராமன் வாகனங்களை சோதனையிட்டு கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம மனிதன் ஒருவர் தான் கொண்டுவந்திருந்த கத்தி மூலம் சீதாராமனி்ன் உடலில் பல்வேறு இடங்களில் தாக்கினார். மேலும் போலீஸ் ஜீ்ப்பையும் எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தார். இச்சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சாலை விபத்தில் 3 பேர் பலி

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை நேரத்தி்ல நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாயினர். நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அன்புராஜ், சுரேஷ், அர்ஜூன் உட்பட 5 பேர் காரில் பயணம் செய்தனர். கார் குராம் பேட்டை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். காயமடைந்த இருவர் குராம்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து குராம்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தெலுங்கானா : காங்., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 14 பேர்சஸ்பெண்ட் செய்யப் பட்டனர்.காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏக்களை டி.ஆர்.எஸ் ஈடுபட்டு வருவதாக காங்., மூத்த உறுப்பினர் ஜனாரெட்டி கூறினார். மேலும் இது குறித்து சட்டபேரவையில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு மறுப்புதெரிவித்த டி.ஆர். உறுப்பினர்கள் இது சம்பந்தமான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து இரு கட்சி உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் காங்.,எம்.எல்.ஏக்கள் 14 பேரும் ஒரு நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

மேகதூது அணை கட்டக்கூடாது என கூற தமிழகத்துக்கு உரிமையில்லை: அமைச்சர்

பெங்களூரு: ""மேகதூது அணை கட்டக்கூடாது என்று கூற, தமிழகத்துக்கு உரிமையில்லை,'' என்று கர்நாடகா நீர்ப்பாசன துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார்.கர்நாடகத்தில் மேகதூது அணை கட்டுவதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, கர்நாடகா நீர்ப்பாசன துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது:"மேகதூது அணை கட்டக்கூடாது' என, தமிழகம் எதிர்ப்பு தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டமானது. மேகதூத்தில் அணை கட்டி, குடிநீருக்காக, தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த அணையை கட்டக்கூடாது என்று கூற, தமிழகத்துக்கு உரிமையில்லை. கர்நாடகாவுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை, குடிநீருக்கு பயன்படுத்த, மேகதூது அணை கட்டப்படுகிறது, என்றார்.

 

டெல்டா மாவட்டங்களில் 22ம் தேதி கடை அடைப்பு

சென்னை: 'விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தரும் வகையில், வரும், 22ம் தேதி, டெல்டா மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்படும்' என, வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே ஆணைகள் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து, டெல்டா மாவட்ட விவசாயிகள், வரும், 22ம் தேதி, முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தரும் வகையில், டெல்டா மாவட்டங்களில், அன்றைய தினம் கடைகள் அடைக்கப்படும் என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.பேரவைத் தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில், அனைத்து தரப்பு வணிகர்களும் கடையடைப்பு செய்து, ஆதரவு அளிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

 

யானை தாக்கி வனவர் காயம்

கோவை: காட்டு யானை தாக்கியதில் வனவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவை வனச்சரகத்தில் நவக்கரை பகுதியில் வனவராக இருப்பவர் கோபால்(28). நேற்று மதியம் வனப்பகுதிக்குள் ரோந்து வந்த போது, காட்டு யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயக்கமடைந்தார். இது குறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், நேற்று இரவு கோபாலை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

பிஜி சென்றார் பிரதமர் மோடி

சுவா: பிரதமர் மோடி பிஜி வந்தடைந்தார். கடந்த 33 வருடங்களுக்கு பின் பிஜி செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். பிஜி பிரதமரை மோடி சந்தித்து பேச உள்ளார். பிஜி பார்லிமென்டிலும் பிரதமர் பேச உள்ளார்.

=

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.