சிங்கப்பூர்: விமானத்தில் வைபை பயன்படுத்தியதற்காக பயணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 1,171 டாலர் பில்லை அனுப்பி அதிர்ச்சி அடையவைத்துள்ளது. விமானத்தை விட்டு இறங்கியதும் அவரிடம் பில்லை கொடுத்து கட்டும்படி கூறியுள்ளது. இவர் பயணத்தின்போது வைபையைப் பயன்படுத்தி சில மெயில்களை அனுப்பினார். மேலும் சில ஆவணங்களை அப்லோட் செய்துள்ளார். 30 எம்.பி வரை பயன்படுத்த 29.99 டாலர் கட்டணம் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் 1171 டாலர் பில் வந்துள்ளது. 1200 டாலர் அளவுக்கு மிகப் பெரிய அறிவுப்பூர்வமான ஆவணத்தை நான் அப்லோட் செய்ததால் வந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.
ஆனால் இதில் கொடுமை என்னவென்றால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இன்டர்நெட் வேகம் மகா மட்டமாக இருந்ததால் வீடியோக்களை இதில் அப்லோட் செய்ய முடியாது. எனவே எனக்கு எந்த வசதியும், சவுகரியமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து விசாரிப்பதாக மட்டும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.