காங்., கொள்கை: சோனியா விளக்கம்
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில், 'நாங்கள் நேருவின் கொள்கைகளை மட்டும் கடைப்பிடிக்கவில்லை. ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் பலப்படுத்துவதற்காகவும் போராடி வருகிறோம்,' என்றார்.
ஆவின்பால் கலப்படம்: குற்றப்பத்திரிக்கை
விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட வழக்கில், வைத்தியநாதன் உள்ளிட்ட 23 பேர் மீது, விழுப்புரம் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு முதல்வர் கண்டனம்
சென்னை: முல்லை பெரியார் அணை பிரச்னையில் தமிழகத்திற்கு சாதகமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தவர் ஜெயலலிதா. இந்நிலையில், முல்லை பெரியார் அணை பிரச்னையில் தேவையில்லாத அறிக்கையை வௌியிட்டு, தமிழகர்களின் நலனுக்கு எதிராக கருணாநிதி செயல்பட்டு வருகிறார் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
அறிக்கை கேட்கிறது உள்துறை
புதுடில்லி: அரியானா மாநிலம், ஹிசாரில் உள்ள சாமியார் ராம்பாலின் ஆஸ்ரமத்தின் முன் நடந்த மோதல் குறித்து அறிக்கை அளிக்கும்படி, அரியானா அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
சரத்பவார் மீது உத்தவ் தாக்கு
மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, 'அவர் எதை சொன்னாலும் அதை செய்ய மாட்டார். செய்யப் போவதையும் அவர் சொல்லமாட்டார்,' என கூறி உள்ளார்.
அரசுக்கு கோர்ட் இடைக்கால தடை
மதுரை: அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் பொது அறிவிப்பை அரசு வௌியிடவில்லை என்றும், இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என்றும் கூறி, அங்கன்வாடி பணியாளர் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளையில், திருமங்கலத்தை அடுத்த புளியங்குடியைச் சேர்ந்த மீனலட்சுமி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, அங்கன்வாடி நியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.
லைபீரியாவிலிருந்து டில்லி வந்தவருக்கு எபோலோ
புதுடில்லி: லைபீரியா நாட்டிலிருந்து டில்லி வந்த ஒருவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவருக்கு எபோலோ நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனையிலும் அவருக்கு எபோலோ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இந்தியாவில் எலோலோ நோய் பாதித்த நபர் ஒருவரை கண்டுபிடிக்கப்படுவது இது முதல்முறை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை கண்டு பீதியடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
லாலு காலாவதியான மருந்து: பஸ்வான்
பாட்னா: ராஷ்டிரியா ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத் காலாவதியான மருந்து என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.முன்னதாக, பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து கருத்து தெரிவித்த லாலு பிரசாத், தற்போது மோடி பிரதமராக இருக்கவில்லை, வெளிநாடுவாழ் இந்தியராக மாறிவிட்டார் என கூறியிருந்தார்.
மீனவர்கள் விடுதலையாவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்
புதுடில்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், மீனவர்களை விடுதலை செய்ய சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பதாக சுஷ்மா உறுதியளித்துள்ளார். மீனவர்கள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார். தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறுகையில், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
டில்லி சட்டசபை தேர்தலுக்கு தயாராக பா.ஜ.,வினருக்கு அமித் ஷா உத்தரவு
புதுடில்லி: பா.ஜ., தலைவர் அமித் ஷாவை டில்லி மாநில பா.ஜ., தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, பிப்ரவரியில் நடைபெறும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும், ஆன்லைனில் நடக்கும் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என கூறினார். இதனிடையே, டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-15க்கு இடையே தேர்தல் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
கிரிக்கெட்டை சுத்தப்படுத்துங்கள்: கவாஸ்கர்
புதுடில்லி: கிரிக்கெட்டை சுத்தப்படுத்த வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சிறைக்கு வேண்டும். மெய்யப்பன் மீது முழுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சீனிவாசன் விளக்க வேண்டும் என கூறினார்.
போர்க்கப்பல் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை ரத்து செய்ய முடிவு
புதுடில்லி: கடந்த 3 வருடங்களுக்கு கொரியாவுடன் போடப்பட்ட போர்கப்பல்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முந்தைய மன்மோகன் அரசில், ரூ.2700 கோடி மதிப்பில் கப்பல் வாங்க கொரியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. கப்பல் வாங்குவதற்கான விவகாரத்தில் தரகர்கள் தலையிடுவதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. இந்த கப்பல்கள், பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டப்படி, கோவாவில் உள்ள கடற்படை தளத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு: சரத்பவார் ஆரூடம்
மும்பை: மகராஷ்டிரா மாநில சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இது தொடர்பாக கட்சி கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாநிலத்தில் பா.ஜ.,வும் சிவசேனாவும் கூட்டணி அமைத்திருந்தால் ஆட்சி நிலையானதாக இருந்திருக்கும். ஆனால் அதுபோன்று நடக்கவில்லை. இதே சூழ்நிலை தொடர்ந்தால், அடுத்த 6 மாதத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என கூறினார்.
அரியானா போலீசுக்கு நோட்டீஸ்
புதுடில்லி: அரியானா மாநிலம் ஹிசாரில் ராம்பால் என்ற சாமியாரை கைது செய்ய போலீசார் சென்ற போது ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹிசார் போலீசாருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பழநி அருகே சிறுத்தையால் மக்கள் பீதி
பழநி: பழநி பாலாறு-பொருந்தலாறு அணைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் பீதியில் உள்ளனர். பழநி வனப்பகுதி 18ஆயிரம் எக்டர் பரப்பளவில் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான யானைகள்,மான்கள், காட்டுமாடுகள், காட்டுபன்றிகள்,குரங்குகள் என பல விலங்கினங்கள் வாழ்கின்றன. புலி, சிறுத்தைபோன்ற விலங்கினங்கள் ஆணைமலை, முதுமலை வனப்பகுதியில் அதிகளவில் வசிக்கின்றன. இவை அமராவதி வனப்பகுதிவழியாக பழநி வனப்பகுதிக்குள் வருகின்றன. ஏற்கனவே விலங்குகள் கணக்கெடுப்பில், புலி, சிறுத்தையின் கால்தடம் எச்சங்கள் கண்டறியப்பட்டது. பழநி பாலாறு-பொருந்தலாறு ஜீரோ பாயின்ட் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைநடமாட்டம் உள்ளது. சிறுத்தை ஆடுகளை இழுத்துசென்று இரையாக்கியுள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அருகேயுள்ள பொருந்தல், புளியம்பட்டி கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மின்தேவை 11,250 மெகாவாட்டாக அதிகரிப்பு
மேட்டூர்: பருவமழை தீவிரம் குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், தமிழகத்தின் இன்றைய மின்தேவை, 11,250 ஆக அதிகரித்தது. இரு நாட்களுக்கு முன், மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்ததால் தமிழகத்தின் மின்தேவை, 9,000 மெகாவாட் வரை, சரிந்தது. மழை தீவிரம் குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், 16ம் தேதி, 9,700 மெகாவாட் ஆக இருந்த மின்தேவை, நேற்று , 10, 500 மெகாவாட் ஆகவும், இன்று, 11,250 மெகாவாட் ஆக உயர்ந்தது. தெர்மல்களில், 3,250 மெகாவாட், நீர்மின்நிலையங்களில், 1,300 மெகாவாட், காற்றாலைகளில், 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இதனால், மின்தேவை, 11,250 மெகாவாட் ஆக உயர்ந்த போதிலும், தேவைக்கேற்ப மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.
அமைச்சர் ராஜ்நாத்சிங் திடீர் ஆய்வு
புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டில்லி துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங்குடன் இணைந்து, டில்லி போலீஸ் ஸ்டேஷன்களிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும் திடீர் ஆய்வு நடத்தினார்
ஜப்பான் பார்லிமென்ட் கலைப்பு
டோக்யோ: ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக, அந்நாட்டின் பார்லிமென்ட்டை கலைப்பதாக பிரதமர் ஷின்சோ அபே கூறி உள்ளார். இதையடுத்து, ஜப்பானில் விரைவில் பொது தேர்தல் நடக்க உள்ளது.
ராஜ்நாத்சிங் தலையிட கோரிக்கை
புதுடில்லி: கொலை வழக்கு தொடர்பாக, சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்ய அரியானா போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விஷயத்தில் தலையிடும்படி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை, ராம்பாலின் ஆதரவாளர்கள் கோரி உள்ளனர்.
ராம்பால் கைது உறுதி-டி.ஜி.பி.,
சண்டிகார்: சர்ச்சை சாமியார் ராம்பாலை ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்ய அரியானா போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், ஹிசாரில் உள்ள தனது ஆஸ்ரமத்தில் சாமியார் பதுங்கி உள்ளார். போலீசார் கைது செய்ய சென்றபோது, சாமியாரின் ஆதரவாளர்கள் போலீசை தாக்கினர். இந்த சம்பவம் குறித்து மாநில டி.ஜி,பி., கூறுகையில், 'என்ன நடந்தாலும், எப்படியாவது ராம்பாலை கைது செய்தே தீருவோம்,' என்றார்.
கோவை வணிக வரித்துறையினர் ஒட்டுமொத்த விடுப்பு
கோவை: காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி கோவை வணிக வரித்துறையினர் ஒட்டுமொத்த விடுப்பு விடுத்துள்ளனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு
புதுடில்லி: காவிரியில், மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்ட கர்நாடகா அரசு முயற்சி எடுத்து வருவதை தடுத்து நிறுத்தும்படி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஹாக்கி பயிற்சியாளர் ராஜினாமா
புதுடில்லி: இந்திய அணியின் ஹாக்கி பயிற்சியாளர் டெர்ரி வாலஸ் ராஜினாமா செய்துள்ளார்.
18 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு
புதுடில்லி: சாரதா சிட்பண்ட் மோசடி குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ., இன்று 18 இடங்களில் இன்று சோதனை நடத்தியது. டில்லி மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் உள்ள, ராஜ்யசபா எம்.பி.,யான பியாரி மோகன் இல்லத்திலும் சோதனை
குஜராத் கலவர அறிக்கை தாக்கல்
ஆமதாபாத்: கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்த நானாவதி கமிட்டியின் இறுதி அறிக்கை, குஜராத் முதல்வர் ஆனந்திபென் பாட்டீலிடம் தாக்கல் செய்யப்பட்டது.
அரசுக்கு கோர்ட் இடைக்கால தடை
மதுரை: அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் பொது அறிவிப்பை அரசு வௌியிடவில்லை என்றும், இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என்றும் கூறி, அங்கன்வாடி பணியாளர் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளையில், திருமங்கலத்தை அடுத்த புளியங்குடியைச் சேர்ந்த மீனலட்சுமி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, அங்கன்வாடி நியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து
டோனி அப்போட்டுக்கு மோடி நன்றி
மெல்போர்ன்: பிரதமர் நரேந்திரமோடியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் நிறைவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கும், கவனிப்புக்கும் டோனி அப்போட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பி.சி.சி.ஐ., விருது பெறுகிறார் வெங்சர்கார்
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரரான வெங்சர்க்கார் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஹைவேசும், ஐ வேசும் தேவை-மோடி
மெல்போர்ன்: மெல்போர்னில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, 'பொருளாதர ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த எனது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில் துவங்குவதற்கான சூழலை ஏற்படுத்த மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் (ஹைவேஸ்) அவசியம். அதேபோல், தகவல் தொழில்நுட்ப (இன்பர்மேஷன்) வசதிகளும் தேவைப்படுகின்றன, ' என்றார்.
தமிழக எல்லையில் நக்சல் தாக்குதல்
ஊட்டி: தமிழக எல்லையை ஒட்டி உள்ளது வயநாடு. கேரளாவைச் சேர்ந்த இப்பகுதியில் நக்சல் நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், வயநாட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்குள் நுழைந்த நக்சலைட்டுகள், அங்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால், தமிழக-கேரள எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எரிந்த நிலையில் ஆண் உடல் மீட்பு
ஊட்டி: ஊட்டி, டி.ஆர்., பஜார் பகுதியில் கருகிய நிலையில் ஒரு ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளன. இவரை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்து, பின்னர் எரித்துள்ளனர்.
கர்நாடகா மீது தமிழக அரசு வழக்கு
சென்னை: காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை ஒன்றை கட்ட கர்நாடக அரசு முயற்சி எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, கர்நாடகா அணை கட்டக்கூடாது என்று உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசுக்கு வாசன் கோரிக்கை
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், 'தர்மபுரியில் பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் முறையாக நியமிக்கப்பட வேண்டும். குழந்தைகள் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்,' என்றார். மேலும், 'முன்னர் அறிவித்தபடி, புதிய கட்சியின் பெயர், சின்னம் குறித்த விவரங்கள் திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்,' என்றார்.
அரசு மருத்துவமனையில் குழந்தை பலி
சேலம்: தருமபுரி அரசு மருத்துவமனையில் 11 பச்சிளம் குழந்தைகள் பலியாகி உள்ள நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமவனைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு குழந்தை இறந்தது. தருமபுரி மாவட்டம், ஊத்தாங்கரையைச் சேர்ந்த சிவகுமார்-தங்கமணி ஆகியோருக்கு கடந்த சனிக்கிழமை தருமபுரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலன் இன்றி குழந்தை இறந்தது. தருமபுரி மருத்துவமனையில் இருந்து மேலும் இரு குழந்தைகள் மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதிய உச்சத்துடன் பங்குசந்தைகள் துவக்கம்
மும்பை : இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(நவ.18ம் தேதி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 82.78 புள்ளிகள் உயர்ந்து 28,260.66 எனும் புதிய உச்சத்தை தொட்டது. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் முன்னேற்றம், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குசந்தைகளில் ஏற்றம் காணப்படுகின்றன. இதேப்போல் தேசிய பங்குசந்தையா குறியீட்டு எண் நிப்டி 16.65 புள்ளிகள் உயர்ந்து 8,447.40-ஆகவும் இருந்தது.
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
விருதுநகர்: விளாத்திகுளம் தாலுகா, சுப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அதேபகுதியைச் சேர்ந்தவர் சண்முகலட்சுமி. இவர்கள் இருவருக்கும் திருணமாகி, ராஜேந்திரனுக்கு மனைவியும், சண்முகலட்சுமிக்கு கணவரும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த மூன்று தினங்களுக்கு முன், வீட்டை விட்டு வௌியேறினர். இந்நிலையில், திருமங்கலம் அருகே, மேலக்கோட்டை என்ற இடத்தில், பொதிகை ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிசக்திக்கு உதவ மோடி கோரிக்கை
கான்பரா: ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ஆஸ்திரேலியா பார்லிமென்ட்டில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், 'இந்தியாவின் எரிசக்தி தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் எரிசக்தி பற்றாக்குறையை போக்க ஆஸ்திரேலியா பெருமளவில் உதவ வேண்டும்,' என்று கோரிக்கை வைத்தார்.
வண்டலூர்:போக்குகாட்டிய நேத்ரா புலி சிக்கியது
சென்னை:கடந்து மூன்று நாட்களாக போக்குகாட்டிய வண்டலூர் பூங்காவில் உள்ள நேத்ரா புலி இன்று சிக்கியது.சென்னை வண்டலூர் பூங்காவில் கடந்த மூன்று நாட்களுக்கு முன், சுற்றுச்சுவர் இடிந்ததால், பூங்காவிலிருந்து நேத்ரா புலி தப்பியது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று 3 நாட்களுக்கு பின்னர் கூண்டிற்குள் வைத்திருந்த இறைச்சியை சாப்பிட வந்த நேத்ரா புலியை ஊழியர்கள் மடக்கி பிடித்தனர்.இதனால் ஊழியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இந்தியா-ஆஸி அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்ற வேண்டும்:மோடி
கான்பெர்ரா:இந்தியா-ஆஸ்திரேலியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு பார்லிமென்டில் நடந்த சிறப்பு அமர்வு கூட்டு கூட்டத்தில்பேசும் போது இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசுகையில்,மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நிகழ்ச்சி அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் என்றும் இந்தியாவில் பொருளாதார சூழல் முன்னெப்போதும் இல்லாதவகையில் தற்போது நல்ல சூழல் உள்ளது என்றும் ஒருங்கிணைந்த பொருளாதாரத்தை செயல்படுத்த வேண்டும் என்றார் மோடி.
மகா.,அரசில் சிவசேனா பங்கேற்க அதிக வாய்ப்பு: மனோகர் ஜோஷி
மும்பை:மகாராஷ்டிராவில் பா.ஜ.க., அரசில் சிவசேனா பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மனோகர் ஜோஷி தெரிவித்தார்.இந்துத்வா கொள்கையின் அடிப்படையில் பா.ஜ., சிவசேனா கைகோர்க்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அது எப்போது நடக்கும் என தெரியாது. இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரே இறுதி முடிவு எடுப்பார்.இவ்வாறு மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
தாய்லாந்தில் ஹெலிகாப்டர் சிதறி 5 பேர் பலி
பாங்காக்:தாய்லாந்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலியான தகவல் வெளியாகி உள்ளது.தாய்லாந்தின் வடக்குப் பகுதி ராணுவ விவகாரங்களுக்கான புதிய பிராந்திய துணைத் தளபதியாக சாங்போல் தாங்ஜீன் நியமிக்கப்பட்டார். அவர் ஒவ்வொரு பகுதியிலும் ராணுவப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில், பயாவோ மாகாணத்தில் நேற்று தனது ஆய்வுப் பணிகளை முடித்த துணைத்தளபதி, வேறு மாகாணத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன் மேலும் 8 அதிகாரிகள் சென்றனர். பயாவோ ராணுவ தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் 10-வது நிமிடத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாரதா சிட்பண்டுமோசடி:குற்றப்பத்திரிகை தாக்கல்
கோல்கட்டா: கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் அதன் முதலீட்டாளர்களிடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அந்த நிதி நிறுவன தலைவர் சுதிப்சென்னை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கில் சாரதா குழுமத்தின் 4 நிறுவனங்களுக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ கடந்த அக்டோபர் 22ம் தேதி தாக்கல் செய்தது.வழக்கின் 2வது குற்றப்பத்திரிகையை அலிபூர் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று தாக்கல் செய்தது.