டோக்கியோ: யப்பானில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலை பொதுமக்களுடன் இணைந்து சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை தங்களுக்கு பெரும் த்ரில்லை கொடுத்ததாக பயணிகள் தெரிவித்தனர். யப்பானில் 'floating maglev' என்ற புதிய ரயில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 500 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயில் பொதுமக்களின் உதவியோடு சோதனை ஓட்டம் செய்ய ஜப்பான் ரயில்வே துறை முடிவு செய்தது. அதன்படி ஒருசில குறிப்பிட்ட பயணிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு இந்த சோதனை ஓட்டத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதில் சில குழந்தைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
100 பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்த 'floating maglev' ஜப்பான் தலைநகர் டோக்கியோ முதல் நாகோயா வரை சமீபத்தில் சோதனை ஓட்டமாக சென்றது. ரயிலின் வேகத்தை பயணிகள் அறியும் வகையில் மானிட்டர் வைக்கப்பட்டிருந்தது. ரயிலின் வேகம் 500ஐ தொட்டதும் பயணிகள் மகிழ்ச்சியுடன் கைதட்டி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். ஜப்பான் ரயில்வே துறையில் இந்த ரயிலின் கண்டுபிடிப்பு ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.