குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

17.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மோடியை தமிழில் வரவேற்ற இந்திய மாணவி

பிரிஸ்பேன் : ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, முதலில் மியான்மர் சென்று, பிறகு அங்கிருந்து பிரிஸ்பேனுக்கு நவம்பர் 14ம் தேதி சென்றார். நவம்பர் 14 குழந்தைகள் தினம் என்பதால், அதனை கொண்டாட எண்ணிய மோடி, தனது நிகழ்ச்சி நிரலில் திட்டமிடாத போதும் தன்னுடன் வந்த அதிகாரிகள் குழுவிடம், தான் பிரிஸ்பேனில் வாழும் இந்திய பள்ளி குழந்தைகளை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனால் அவசரமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஜி20 மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள பல்கலைகழகத்தில் இந்திய குழந்தைகள் சிலரை மோடி சந்தித்து, அவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடினார். மோடியை சந்திப்பதற்காக அழைக்கப்பட்ட குழந்தைகளில் தமிழ் பேசும் மாணவியும் ஒருவர். அவரை மோடியை, வணக்கம் என தமிழில் பேசி வரவேற்றார்.

 

விமான பார்சலில் குழந்தைகளின் உடல் உறுப்புகள்

பாங்காக்:தாய்லாந்திலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட விமான பார்சலை சோதனையிட்ட போது குழந்தைகளின் உடல் உறுப்புகள்,தலை,பாதங்கள், தோல்கள் ஆகியன இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த பார்சலை கைப்பற்றிய போலீசார், தடவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.பார்சலை யார் அனுப்பியது குறித்து விசாரணை நடக்கிறது

 

அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்?துருக்கி அதிபர் விளக்கம்

இஸ்தான்புல்:ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ், 1492-ஆம் ஆண்டில், அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்க நிலப்பரப்பைக் கண்டுபிடித்ததாக வரலாற்றுப் புத்தகங்கள் கூறி வருகின்றன.இந்நிலையி்ல்,அமெரிக்காவை 12-ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் கண்டுபிடித்தனர் என்று துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார்.தென் அமெரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், அமெரிக்காவுக்கும் இஸ்லாமுக்கும் 12-ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடர்பு இருந்து வருகிறது என்றார். முஸ்லிம்கள், 1178-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றனர். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க 1492-இல் பயணம் மேற்கொண்டபோது, கியூபா நாட்டின் கரைப் பகுதியில் மசூதியொன்றைக் கண்டதாக குறிப்பிடுகிறார்.அமெரிக்காவுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்து வந்துள்ளது. எனவே, அமெரிக்க நிலப்பரப்பை முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம்கள் என துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார்.

 

கறுப்பு பணம்: பிரதமர் மோடிக்கு சுப்ரமணியன் சாமி பாராட்டு

பெங்களூரு: ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் கறுப்பு பணம் குறித்து பேசிய பிரதமர் மோடிக்கு பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஜி-20 மாநாட்டில் கறுப்பு பணம் குறித்து பிரதமர் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக நான் அவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். பிரதமர் சரியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பல நாடுகளுடன் கறுப்பு பணம் குறித்து பல நாட்டு தலைவர்களுடன் மோடி பேசியுள்ளார். இதன் மூலம் கறுப்பு பணத்தை மீட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என கூறினார்.

 

சிவசேனாவுக்கு இன்னும் கதவு திறந்தே உள்ளன: பட்நாவீஸ்

மும்பை: மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை அடுத்த வாரம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக முதல்வர் தேவேந்திர பட்நாவீஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: சிவசேனாவுக்கு கூட்டணிக்கான கதவு இன்னும் அடைக்கப்படவில்லை. அக்கட்சியுடனான பேச்சுவார்த்தைக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என கூறினார்.

 

பாக்., பயங்கரவாத நடவடிக்கையை ஆதரிக்காதீர்கள்: சீனாவுக்கு மத்திய அரசு கோரிக்கை

ஜம்மு: பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கையை ஆதரிக்க வேண்டாம் என சீனாவை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், இந்தியாவின் கவலையை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே சீனாவிடம் கூறிவிட்டது. பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கையை ஆதரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளோம். சீன எல்லையையொட்டியுள்ள எல்லைப்பகுதியை மேம்படுத்துவது அரசின் முக்கிய பணியாக உள்ளது. லடாக் மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுக்கு வளர்ச்சிக்கான அனைத்து உரிமையும் உள்ளது. அவர்களுக்கு உலக தர சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர அரசு உறுதி பூண்டுள்ளது. எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சி பணிகளை செய்ய அரசு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களில் எல்லைப்பகுதிகள் வளர்ச்சியடையும். கடந்த காலங்களில் இந்த பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. இனிமேல் அதுபோல் நடக்காது என கூறினார்.

 

பிர்புமில் மீண்டும் கலவரம்: ஒருவர் பலி

பிர்பும்: மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில், சோமோன்டல்பூர் கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பலியானார். ஜாசிம் ஷேக் என்பவர் பலியாகியுள்ளதாகவும், இவர் பா.ஜ., ஆதரவாளர் எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். திரிணமுல் தொண்டர்கள் நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியபோது, வயலில் வேலைபார்த்து கொண்டிருந்த போது, ஷேக் குண்டு பாய்ந்து பலியானார். இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

கப்பலில் இறந்த பணியாளருக்கு ரூ.67 லட்சம் இழப்பீடு

சென்னை:கப்பலில் இறந்த, பணியாளரின் குடும்பத்திற்கு, மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), 67 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

சென்னை, ராயபுரத்தை சேர்ந்தவர் திலீப்குமார், 52. இவர், ஓரியண்டல் ஷிப்பிங் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான, கப்பலில், இன்ஜின் பிட்டராக பணியாற்றி வந்தார்.இக்கப்பல், கடந்த, நவ., 20ம் தேதி, இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டு, சீனாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, வழியில், பிப்., 22ம் தேதி, கப்பல் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. கப்பலின் அடித்தளத்தில், குப்பைகளை சுத்தம் செய்யும், மிஷின் திலீப்குமார் மீது மோதியதில், இறந்தார்.இவரின் மனைவி சுகந்தி, இரண்டு மகள்கள் மற்றும் திலீப்குமாரின் தாய் ஆகிய நான்கு பேரும், இழப்பீடு கேட்டு, சென்னையில், மக்கள் நீதிமன்றத்தில், கடந்த வாரம் (லோக் அதாலத்) வழக்கு தொடர்ந்தனர்.வழக்கு, விசாரணையில், கப்பல் கம்பெனி வழக்கறிஞரும், மனுதாரரின் வழக்கறிஞரும் மக்கள் நீதிமன்ற நீதிபதியிடம், சமாதானமாக போக விரும்பியதாக கூறியதால், மனுதாரருக்கு கப்பல் கம்பெனி, 67.27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முன்வந்தது.நேற்று மாலை, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு தலைவரும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான, அக்னிஹோத்ரி, மனுதாரர் சுகந்தி மற்றும் குடும்பத்தினரிடம், 67.27 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையினை வழங்கினார்.

 

தர்மபுரியில் மேலும் 4 பச்சிளம் குழந்தைகள் மரணம்

தர்மபுரி:தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பச்சிளம் தீவிர சிகிச்சை பிரிவில் மேலும், 4 குழந்தைகள் இறந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த, 2011 பிப்., 23ம் தேதி பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டது. இங்கு குறைமாத பிரசவ குழந்தை, எடை குறைந்த மற்றும் மூச்சு திணறல், மஞ்சள் காமலை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை உட்பட உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட, பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தர்மபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரே, நேரத்தில், 100 பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வசதி உள்ளது.தினமும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை, இங்கு சிகிச்சைக்கு அனுமதித்து வருகின்றனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், ஒரே நாளில், அடுத்தடுத்து, 6 பச்சிளம் குழந்தைகள் இறந்தது. இச்சம்பவம் பொற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், இன்று, இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பொம்மிடியை சேர்ந்த கன்னியம்மாளின் ஆண் குழந்தை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த ராஜேஸ்வரியின் பெண் குழந்தை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை சேர்ந்த பிரேமாவின் ஆண் குழந்தை, பாப்பாரப்பட்டியை சேர்ந்த அம்பிகாவின் பெண் குழந்தை ஆகிய, 4 பச்சிளம் குழந்தைகள் இறந்தது. அடுத்தடுத்து மொத்தம், 10 குழந்தைகள் இறந்தது, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

 

சீன உணவு தொழிற்சாலையில் தீ: 18 பேர் பலி

பீஜிங்: சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் உள்ள கேரட் பேக்கிங் செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில், 18 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டு நேரப்படி இரவு 7 மணிக்கு பற்றிய தீயை இரண்டரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 18 பேர் பலியாகியுள்ளதுடன், 130 பேர் காயமடைந்துள்ளனர்.

 

யோகா குரு பாபா ராம்தேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

புதுடில்லி: பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதாக பாதுகாப்பு ஏஜென்சிகள் கொடுத்த தகவலின்பேரில், யோகா குருபாபா ராம்தேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.அவருக்கு 40 கமாண்டோக்கள் கொண்ட குழுவினர் 24 மணிநேரமும் பாதுகாப்புஅளிப்பார்கள்.

 

பெரியாறு அணை விவகாரம்: பிரதமர் தலையிட கேரள எம்.எல்.ஏ., கோரிக்கை

தேக்கடி: முல்லை பெரியாறு அணையை பார்வையிட்ட பீர்மேடு தொகுதி எம்.எல்.ஏ., பிஜூமோள், அணையில் 142 அடி அளவுக்கு தண்ணீர் உயர்த்தப்படுவதில் பிரதமர் தலையிட வேண்டும். இரு மாநில முதல்வர்களையும் பிரதமர் அழைத்து பேச வேண்டும். பேபி அணையை கேரள முதல்வர் பார்வையிட வேண்டும் என கூறினார்.

 

சாரதா சிட்பண்டுமோசடி: சி.பி.ஐ., 2வது குற்றப்பத்திரிகை தாக்கல்

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தையே உலுக்கிய சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில், சி.பி.ஐ., இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சுதிப்தா சென், தேஜ்பானி முகர்ஜி, சந்தீர் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

 

பருப்பு வாங்கியதில் முறைகேடு: ராமதாஸ் புகார்

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ரேசன் கடைகளில் துவரை மற்றும் உளுந்து வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், 2013ல் கோரப்பட்ட டெண்டர், 10 மாதம் கழித்தே திறக்கப்பட்டது எனவும், விண்ணப்பித்த 4 நிறுவனங்களில் 2 மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.

 

கருணாநிதி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, அவர் கோடநாட்டில் தங்கியிருந்தபோது, கட்சி பத்திரிகையில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது அவதூறுவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,இந்த வழக்கை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்திற்கு நிவாரண நிதிஒ துக்குவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தத்து, மற்றும் நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காஷ்மீரில் புனரமைப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட ரூ.44 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை தொடர்பாக விரைவாக முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசை நாங்கள் வலியுறுத்த முடியாது என கூறி,வழக்கை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்திற்கு நிவாரண நிதிஒ துக்குவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தத்து, மற்றும் நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காஷ்மீரில் புனரமைப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட ரூ.44 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை தொடர்பாக விரைவாக முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசை நாங்கள் வலியுறுத்த முடியாது என கூறி,வழக்கை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களுடன் மோதல்: 2 வீரர்கள் காயம்

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஜல்தல்பூரில் மாவோயிஸ்டகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 2 கோப்ரா படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தியா அனுப்பிய காரை பயன்படுத்த மாட்டேன்: நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: நேபாளத்தில், இம்மாதம் சார்க் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்காக குண்டு துளைக்காத 6 கார்களை நேபாளத்திற்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்காக அந்நாட்டிலிருந்து கார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கார்களை நான் பயன்படுத்த மாட்டேன் என நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

 

பிரிட்டன் பார்லி.,யில் வெடிகுண்டு?

லண்டன்: பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் வெடிகுண்டு இருக்கலாம் என தகவல் பரவியது. இதையடுத்து, பார்லிமென்ட் கட்டடத்தின் ஒரு பகுதியில் இருந்தவர்கள் அவசரமாக வௌியேற்றப்பட்டனர். பின்னர் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பார்லிமென்ட் வழக்கம் போல இயங்கியது.

 

ராமநாதபுரத்தில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காதல் ஜோடி ஓடும் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டனர். ராமநாதபுரம் முத்துராமலிங்க சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சிந்து பாலா, 17. இங்குள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். ஹாக்கி வீரரான இவர், ராஜபாளையத்தில் இன்று (நவ.,18) நடக்கவுள்ள ராமநாதபுரம் மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க இருந்தார். இதே பகுதியைச் சேர்ந்த முத்துராமன் மகள் சண்முகப்பிரியா,18. இவர் ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு (தமிழ்) படித்து வந்தார். ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து வந்தனர். இருவரின் பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சண்முக பிரியாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தநிலையில், இருவரும் இன்று அதிகாலை வீட்டைவிட்டு வெளியேறி, சிதம்பரனார் ஊரணி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளம் பகுதி வந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் உடலையும் ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

 

டிக்கட் கிடைக்காமல் தவித்த இந்தியர்கள்

சிட்னி: அல்போன்ஸ் அரேனா அரங்கத்தின் வௌியே நூற்றுக்கணக்கான மோடி ஆதரவாளர்கள், அவரின் உருவம் கொண்ட முகமூடியை அணிந்தபடி வலம் வந்தனர். டிக்கட் கிடைக்காமல் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அரங்கத்தின் வௌியில் திரண்டிருந்தனர். உற்சாக மிகுதியில் பலர் டிரம்களை இசைத்தபடியும், நடனமாடியபடியும் இருந்தனர்.

 

ரமேஷ் சந்திராவை சந்தித்தார் மோடி

சிட்னி: கேன்சர் நோயினால் வாடும் பிரபல கார்ட்டூனிஸ்ட் ரமேஷ் சந்திராவை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த ரமேஷ் சந்திரா, 'பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளது,' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்

 

இந்தியர்களுக்கு நீண்டகால விசா : மோடி

சிட்னி : ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களுக்கு நீண்ட கால விசா வழங்க வழிவகை செய்யப்படும் என்று இந்திய பிரதமர் மோடி கூறினார். நீண்ட கால விசா உள்ளிட்ட வசதிகளை, இந்திய வமிசாவளியைச் சேர்ந்தவர்களுக்கும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பயன்படும் வகையிலான பல்வேறு திட்டங்களை, மோடி அப்போது அறிவித்தார்.

 

இந்தியர்கள் நினைத்தால் முடியும்-மோடி

சிட்னி: சிட்னியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியர்கள் நினைத்தால், இந்தியா குறித்து சர்வதேச நாடுகள் வைத்துள்ள எண்ணத்தை மாற்றிக் காட்ட முடியும். நாம் வௌிநாடுகளுக்கு சென்றால் அங்கு தெருக்களை சுத்தமாக வைத்துக் கொள்கிறோம்,. இந்தியா திரும்பினால், அதை பின்பற்றுவதில்லை,. இதனால், தெருக்கள் அசுத்தமாகவே உள்ளன. நோய், ஏழைகளுக்கு மிகப் பெரிய பாரமாக அமைந்துவிடுகிறது. இந்நிலையில், சுத்தத்தை பேணுவதை தவிர வேறு எதுவுமே ஏழைகளை காப்பாற்றாது. நாட்டை சுத்தப்படுத்துவதால் நமது தரம் இறங்கிவிடாது. இந்த விஷயத்தில் நமது மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்,' என்றார்.

 

ஜன்தன் திட்டம்-மோடி பெருமை

சிட்னி: சிட்னி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'ஏழைகளையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு வர வேண்டும் என்பது தான் எனது திட்டம். இதற்காக, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி, ஜன்தன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம், இதன் மூலம், 10 வாரங்களில் 7 கோடி வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது,' என்றார்.

 

ஆஸி., இந்தியா: மோடியின் ஒப்பீடு

சிட்னி: சிட்னி கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில், 'ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் பல விஷயங்களில் ஒத்த கருத்துடயவை. கிரிக்கெட், ஜனநாயகம் என பல விஷயங்களை கூறலாம். பல இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிற்கு பல அர்ப்பணிப்புக்களை செய்துள்ளனர். எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த ஆஸ்திரேலிய மக்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அன்பு இந்தியாவின் மீது தான். மோடி மீது அல்ல என்று எனக்கு தெரியும்,' என்றார்

 

மோடிக்கு பூர்ண கும்ப மரியாதை

சிட்னி: சிட்னியில் உள்ள அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி வந்தார். அப்போது அரங்கமே எழுந்து நின்று ஆரவாரத்துடன் அவரை வரவேற்றது. நுழைவாயிலில், மோடிக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

 

அல்போன்சா அரேனா கோலாகலம்

சிட்னி: சிட்னியில் உள்ள சிட்னி அரங்கத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேச உள்ள நிலையில், அங்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடி உள்ளனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆஸி.,யின் பிரபல கிரிக்கெட் வீரர் பிரட்லீ, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மேடை ஏறி கலகலப்பை ஏற்படுத்தினார்.

 

ஜி20: ஆஸி.,யில் பலத்த பாதுகாப்பு

பிரிஸ்பேன் : ஜி20 மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கடந்த ஓராண்டாக க்வின்ஸ்லாந்து அரசு, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை, ஆஸ்திரேலிய வர்த்தக கூட்டமைப்பு, ஆஸ்திரேலிய போலீஸ், பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறை, குற்றவியல் கமிஷன் உள்ளிட்ட துறைகள் ஒன்றிணைந்து செய்து வந்தன. இதனால் பயங்கரவாதம் தொடர்பாக ஏராமானோரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர். ஜி20 பாதுகாப்பிற்கென, குறிப்பிட்ட இடங்களில் இருந்து மக்களை அப்புறப்படுத்துவது, வாரண்ட் இன்றி கைது செய்வது உள்ளிட்ட பல புதிய சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்காக ஆஸ்திரேலியாவின் பிற மாநிலங்களுக்கும், நியூசிலாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் போலீசார் அனுப்பப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் விதிப்பதுடன், அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக கட்டிடங்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் வழக்கமான செயல்பாடுகளில் மாற்றம் செய்யுமாறு அல்லது ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஜி20 மாநாடு முடிந்து உலக நாடுகளின் தலைவர்கள் திரும்பிச் செல்லும் வரை உள்நாட்டு தலைவர்கள் குறிப்பிட்ட அளவே குழுக்களை வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் வரைமுறைபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மாநாடு நடைபெறும் பகுதியில் நுளையாமல் இருக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய மாற்றங்களும் கட்டுப்பாடுகளும் முன்னரே விதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படதால் க்வின்ஸ்லாந்து போலீசாரால் மாநாட்டு ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்து முடிக்க முடிந்தது. இதன் காரணமாக பெரிய அளவில் பிரச்னையோ, கைது நடவடிக்கைகளோ, உயிரிழப்பு அல்லத படுகாயம் போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமலும் தவிர்க்க முடிந்துள்ளது.

 

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரம், தாஷ்கன்ட் நகரைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் மனைவியை அழைத்துக் கொண்டு மகன் வீட்டிற்கு சென்றார். பின்னர் வீடு திரும்பி வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 பவுன் நகை, 5 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தை அறிந்தார். இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள்

திருநெல்வேலி: கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு, ஐயப்ப வழிபாடு துவங்கி உள்ளது. குற்றாலத்திற்கு வந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள், அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். பலர், அங்கேயே மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். சோப்பு, எண்ணை பயன்படுத்த கூடாது என்று கோர்ட் உத்தரவு அமலில் இருந்த போதும், அருவிகளில் குளித்த மக்கள் அவற்றை பயன்படுத்தியதை காண முடிந்தது.

 

பதவி உயர்வு தாமதம்: ஏட்டு தற்கொலை

நாகப்பட்டனம்: நாகப்பட்டனம், கரியாபட்டனம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆறுமுகம், 45. இவருக்கு பதவி உயர்வு கிடைக்காததால், கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்தார். இந்நிலையில், நேற்று இரவு, ஸ்டேஷன் பின்புறம் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

 

பிரபல திருட்டு குற்றவாளி சரண்

ஆத்தூர்: ஆத்தூர் பகுதிகளில் கடந்த 1998ம் ஆண்டுகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் கட்டையன் என்ற கொளஞ்சி. போலீஸ் தேடுவதை அறிந்த கட்டையன் தலைமறைவானார். இந்நிலையில், அவரை தேடி கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி ஆத்தூர் கோர்ட் போலீசாருக்கு உத்தரவிட்டது. போலீசார் கட்டையனை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் ஆத்தூர் சப்கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

 

ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த வயலூர் ரயில்வே கேட் அருகே, உடல் முழுவதும் காயங்களுடன், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயில் தண்டவாளம் அருகில் இறந்து கிடந்தார். இது குறித்து விசாரணை நடத்திய ரயில்வே போலீசார், ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து அவர் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

போர்டுகள் அகற்றம்: மேலூரில் பதற்றம்

மேலூர்: முல்லை பெரியார் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியதை தொடர்ந்து, அந்த அணை நீரை நம்பி உள்ள மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலூர் விவசாயிகள், தங்கள் மகிழ்ச்சியை வௌிப்படுத்தும் வகையில் நகரின் பல இடங்களில் பிளக்ஸ் போர்டுகளை வைத்திருந்தனர். இந்நிலையில், மேலூர் நகராட்சி கமிஷனர் அலாவூதீன் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் அந்த போர்டுகளை அதிரடியாக அகற்றினர். இதனால், மேலூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்ச்சியே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 

மனு கொடுக்க வந்த மூதாட்டி காயம்

வேலூர்: வேலூரை அடுத்த சங்கரன்பாளையத்தைச் சேர்ந்தவர் மாலா, 60. இவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவி தொகை நிறுத்தப்பட்டது. அதை மீண்டும் வழங்க கோரி மனு கொடுப்பதற்காக வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மரத்தடியில் காத்திருந்தார். அப்போது, குரங்குகள் ஆட்டியதால் மரக்கிளை ஒன்று உடைந்து, மாலாவின் தலைமீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மாலா, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரின் நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், முதியோர் உதவி தொகை கேட்டு மனு கொடுக்க வந்த சக்ரவர்த்தி என்பவர், மாரடைப்பு காரணமாக இதே இடத்தில் இறந்தார் என்பது

 

டில்லியில் 6 பஸ்கள் எரிப்பு:பதற்றம்

புதுடில்லி: டில்லியில், கிரேட்டர் நோடியா ஆணையத்தின் சார்பில் ஆக்கிமிப்புக்கள் அகற்றப்பட்டன. இதை கண்டித்து பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின்போது, குலிசரா பகுதியில், அரசுக்கு சொந்தமான 6 பஸ்களை எரித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

2ஜி வழக்கு: விசாரணை துவங்கியது

புதுடில்லி: ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்க பிரிவு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை இன்று சி.பி.ஐ., கோர்ட்டில் துவங்கியது. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, அமிர்தம் உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராகினர்.

 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் கைவரிசை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை எப்படியாவது தடுக்க வேண்டும் என, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட சில பயங்கரவாத அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் புல்வாமா பகுதியில், தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என, பயங்கரவாதிகளால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மக்கள் ஓட்டு போட வீட்டை விட்டு வௌியே வரக்கூடாது என்று கூறி உள்ளனர். இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

 

20 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய மோடியின் ஆசை

பிரிஸ்பேன் : 1994ம் ஆண்டு தனது நண்பர் ஹேமந்த் மற்றும் அவரது மனைவி கல்பனாவை காண்பதற்காக மோடி, பிரிஸ்பேன் சென்றார். அப்போது, பிரிஸ்பேன் நகரில் மகாத்மா காந்தியின் நினைவிடம் அல்லது தெரு ஒன்றிற்கு அவரது பெயரை சூட்ட ஏற்பாடு செய்யுமாறு தனது நண்பரை கேட்டுக் கொண்டார். மோடி அப்போது முதல்வராக கூட பதவி வகிக்கவில்லை. இந்நிலையில், தற்போது மோடி, இந்தியாவின் பிரதமராக பிரிஸ்பேன் சென்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன் அவர் ஆசைப்பட்டது போல், உலகின் மிகப் பெரிய நகர்புற பூங்காவான ரோமா ஸ்ட்ரீட் பார்க்கில் மகாத்மாவிற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்பிரிங்ஃபீல்ட் லேக்ஸ் நகரில் உள்ள ஒரு தெருவிற்கு காந்தியின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. காந்தி சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, தனது பேச்சின் போது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆசைப்பட்ட காந்தி குறித்த விஷயங்களை நினைவு கூர்ந்தார். தனது கனவை நிஜமாக்கியதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மோடி கூறினார். கூட்டத்திற்கு பின் தனது நண்பர் ஹேமந்தை சந்தித்து பேசிய மோடி, தனது பழைய நண்பர்களின் பெயர்களை கூறி நலம் விசாரித்துள்ளார். அன்புடன் அனைவரையும் ஞாபகம் வைத்து மோடி விசாரித்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

சென்னை : சென்னையில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சென்னை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து இன்று (நவம்பர் 17) முதல் அதிரடி சோதனை நடத்த உள்ளனர்.

 

இந்தியாவில் தொழில் தொடங்க எளிதான நடைமுறை:மோடி

பிரிஸ்பேன்:இந்தியாவில் தொழில் தொடங்கும் வெளிநாட்டினருக்கு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன என ஆஸ்திரேலியாவில் தொழில்அதிபர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தெரிவித்தார்.இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,தேவையில்லாத சட்டங்கள், விதிமுறைகளை நீக்க ம்த்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், வெளிநாட்டு முதலீடுகளால் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற முடியும் எனவும் வெளிநாட்டு கொள்கைகள் வெளிப்படையாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி பேசினார்.

 

சபரிமலை ஐயப்பன் சன்னதி நடை திறப்பு:காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

சபரிமலை:கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு மண்டல பூஜைக்காக,இன்று காலை ஐயப்பன் சன்னதி நடை திறக்கப்பட்டது.இந்நிலையில் ஐயப்பனை காண திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

 

நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்

வெலிங்டன்:நியூசிலாந்து நாட்டின் கிஸ்போர்ன் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.சேதம் குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

 

மக்கள் விருப்பப்படி செயல்படுவோம்: பாஜக

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துள்ள அரசமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு விவகாரத்தில், அந்த மாநில மக்கள் விருப்பப்படி செயல்படுவோம் என்று பா.ஜ.க., தெரிவித்துள்ளது.ஸ்ரீநகரில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில பா.ஜ.க., பொறுப்பாளர் அவிநாஷ் ராய் கன்னாவிடம், 370ஆவது பிரிவை பா.ஜ.க., நீக்கத் திட்டமிட்டுள்ளதா என கேள்வி கேட்டபோது இவ்வாறு பதில் கூறினார்.

 

நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் பெண் கமாண்டோக்கள்

புது டில்லி:நாட்டிலேயே முதல் முறையாக, நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்) பெண்கள் சிறப்புப் படையினர் வனப் பகுதிக்குள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதையடுத்து, நாட்டுக்கு அச்சுறுத்தல் தரும் சக்திகளை எதிர்த்து நேரடியாகப் போரிடுவதற்கு, பெண்கள் சிறப்புப் படையை ஈடுபடுத்தும் சில நாடுகளில் இந்தியாவும் தற்போது இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு படையிலும் 35 பெண் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.அவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்திலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கண்காணிப்பு, ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.