குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 18 ம் திகதி புதன் கிழமை .

வங்கதேசத்துடன் டெஸ்ட் நியூசி. 553 ரன் குவிப்பு

வங்கதேச அணியுடனான டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 553 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. குப்தில் 189, மெக்கல்லம் 185 ரன் விளாசினர். நியூசிலாந்து & வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டி, ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசியது.
நியூசிலாந்து முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்தது. குப்தில் 80, மெக்கல்லம் 58 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். மெக்கல்லம் 185 ரன் (272 பந்து, 17 பவுண்டரி, 3 சிக்சர்), குப்தில் 189 ரன் (310 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 339 ரன் சேர்த்தது. நியூசி. 7 விக்கெட் இழப்புக்கு 553 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வங்கதேச பந்துவீச்சில் ருபெல் 5 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாம் நாள் முடிவில் வங்கதேசம் 1 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்துள்ளது.