30 வருடங்களுக்கு முன்பு இருந்த ராணுவ வீரர்களின் அடையாளத்தை சரியாகக் குறிப்பிடுவதால் ராணுவ வீரரின் ஆவி சிறுவனது உடலில் புகுந்துள்ளதாக நம்பப்படுகிறது. 1983 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போரில் அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்த லூயிஸ் இறந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்த 244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள். இந்நிலையில் வெர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவன் ராணுவ வீரர் லூயிசின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல்களையும் சரியாக கூறுகின்றானாம்.
அத்துடன் லூயிசுடன் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் படத்தைக் காட்டினால் சரியாக அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுச் சொல்கின்றானாம்.
எனவே லூயிஸின் ஆவி இந்த சிறுவனது உடலில் புகுந்து விட்டதாக மற்றவர்கள் கருதுகின்றனர்.