குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை அதிகரிக்கப்படும் - டேவிட் கேமரூன்

உக்ரைன் அரசுக்கு எதிராகப் போராடிவரும் கிளர்ச்சியாளரகளுக்கு ரஷ்யா உதவிபுரிந்தால், அதன் மீதான பொருளாதாரத் தடைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு பகுதியில் தன்னாட்சி கோரிப் போராடிவரும் கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் அரசு படைகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அங்கு கடந்த சில நாட்களாக மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

கிளர்ச்சியாளர்களுக்கு, வீரர்களை அனுப்பியும், ஆயுதங்களை வழங்கியும் ரஷ்யா உதவி வருவதாக உக்ரைன் அரசு கூறிவரும் குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகின்றது.

இந்நிலையில் ஜி20 நாடுகளின் மாநாட்டுக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘உக்ரைன் நாட்டை ஒரு சுதந்திர நாடாக செயல்பட ரஷ்யா அனுமதிக்கும் என நான் இன்னும் நம்புகிறேன்.

உக்ரைனின் சுதந்திர விவகாரத்தில் சாதகமான போக்கை ரஷ்யா கையாண்டால், அதன் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும்.

மாறாக ரஷ்யா தனது கெட்ட நடத்தைகளை தொடருமானால், அதன் மீதான பொருளாதாரத் தடைகள் மேலும் அதிகரிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

உக்ரைன் விவகாரத்தில், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு மேற்கத்திய நாடுகள் தண்டனை வழங்கும் என அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் நாட்டை ஏகாதிபத்திய கொள்கையைக் கொண்டுள்ள ஜரேப்பிய ஒன்றியத்துடன் தங்கள் பகுதியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு உக்ரைன் பகுதி மக்கள் தன்னாட்சி அதிகாரம் கோரி தொடர்ந்துப் போராடிவருகின்றனர்.

ஜரேப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை எதிர்த்து, உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியா மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.