குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

13.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கறுப்பு, நீலம் மை பயன்படுத்த உத்தரவு

புதுடில்லி:அலுவலக கோப்புகளில் குறிப்புகள், தகவல்கள் எழுதும் போது, கறுப்பு அல்லது நீல நிற மையை பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னர், இணை செயலர்கள் மற்றும் அதற்கு மேலான அதிகாரிகள் மட்டும், பச்சை நிற மையை பயன்படுத்தி கையெழுத்திட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அது போல, அரசின் பிற துறைகளுடனான தொடர்புக்கு, தந்தியை பயன்படுத்த வேண்டாம் எனவும் உத்தர விடப்பட்டுள்ளது. நாட்டில், 163 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த தந்தி, கடந்த ஆண்டு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

என்எல்சி: தொழி்ற்சங்கம்-நிர்வாகம் ஒப்பந்தம்

நெய்வேலி: நெய்வேலியில் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்தையில் சுமூக முடிவு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி பணிக்கெடை, ஊதியத்துடன் ஆண்டு ஒன்றிற்கு 18 நாட்கள் விடுமுறை அளிப்பது எனவும் சலவைப்படி ரூ 25-ல் இருந்து 50 ஆகவும், வீட்டு வாடகைப்படி ரூ.50-ல்இருந்து ரூ.100 ஆகவும் அதிகரிப்பது நவ., 1-ம் தேதி முதல் ஊதியம் ரூ.55 ஆகவும் ,2015-ம் ஆண்டு நவம்பர் முதல் ரூ.55 அதிகரித்து வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் அண்ணா, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் இடம்

கோவை: வணிக கிடங்கில் தீ விபத்து

கோவை: கோவை பி.என் புதூரில் பர்னிச்சர் கடைக்கு சொந்தமான கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு பர்னிச்சர் தயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கிடங்கில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூலப்பொருட்கள் அனைத்தும் தீயில் கருகின. தீயணைக்கும் பணியில் ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள், தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சட்டீஸ்கரில் மருந்து நிறுவனங்களில் சோதனை

ராயப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் குடும்ப அறுவைசிகிச்சை செய்து கொண்ட பெண்கள் பலியாயினர்.இதனையடுத்து மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் நகரங்களில் உள்ள மருந்து நிறுவனங்களை மாநில சுகாதாரத்துறை மற்றும் போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

சிவசேனா ஒத்துழைப்பு :வெங்கையா நாயுடு நம்பிக்கை

சென்னை: மகாராஷ்டிரா மக்களின் விருப்பத்திற்குஏற்ப சிவசேனா கட்சி செயல்படும் என தான் நம்புவதாக .மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையி்ல மெட்ரோ ரயில் சேவை வரும் மார்ச் மாதம் முதல் செயல்பட துவங்கும் எனவும், திருவெற்றியூர் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஸ்டாலின் வருகை: நெல்லையில் இருள் மயம்

திருநெல்வேலி: நெல்லையில் முகாமிட்டுள்ள மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் கட்சி உறுப்பினர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி காணப்படுகிறது.

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி மகளி்ர் மேம்பாடு குழு நிர்வாக ஆணையராக அமுதவள்ளி நியமி்க்கப்பட்டுள்ளார். மேலும் கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்து வந்த கணேஷ் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாடநூல் கழக நிர்வாக இயக்குனராகக மைதிலி கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமி்ழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு உறுப்பினர் செயலராக சாம்புவேல் கலோலிகர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மின் நிதிநிறுவனம் கட்டமைப்பு மேம்பாட்டுகழக மேலான் இயக்குனராக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிக்கர் உட்பட 9 பேர் போட்டியின்றி தேர்வு

லக்னோ: ராணுவத்துறையின் புதிய அமைச்சர் பரிக்கர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உ.பி., மாநிலத்தில் காலியாக இருந்த ராஜ்யசபா எம்.பி பதவிக்கு தேர்தல்நடைபெற்றது. இதில் போட்டியி்ட்ட பரிக்கர் போட்டியி்ன்றி தேர்ந்தெடுக்கப்பட்டு்ள்ளார் மேலும் சமஜ்வாடி கட்சியை சேர்ந்த ராம் கோபால் யாதவ் , மாநில அமைச்சர் ஆசாம் கானின் மனைவி தன்ஷீன் பாத்திமா, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீராஜ்சேகர், ரவிபிரகாஷ்வர்மா, ஜாவித் அலி கான், மற்றும் சந்தர்பால்சிங்யாதவ் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கனமழை நீடிப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தி்ட்டமிட்டபடி குழந்தைகள் தின விழா நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டு போட்டி: பிரணாப்,மோடிக்கு அழைப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தி்ன் பல்வேறு மைதானங்களில் 35-வது தேசிய விளையாட்டுபோட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியின் துவக்க விழாவிற்கு பிரதமர் மோடியையும், இறுதி விழாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் அழைப்பது என தேசிய விளையாட்டு செயலகம் முடிவு செய்துள்ளது. மேலும் 27 ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய விளையாட்டு போட்டிகள் கேரள மாநிலத்தில் நடைபெற உள்ளது.

சபரிமலையில் நவ. 16 நடைதிறப்பு

சபரிமலை: கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில் ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 17-ம் தேதி கார்த்திகை பிறந்து மண்டலகாலம் தொடங்குகிறது. இதற்காக சபரிமலை நடை 16-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வரும் மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றுவார். அதை தொடர்ந்து கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, சபரிமலை, கேசவன் நம்பூதிரி, மாளிகைப்புறம் ஆகியோர் இருமுடி கட்டு ஏந்தி ஸ்ரீகோயில் முன்புறம் வருவர். மாலை 6.30 -க்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து ஸ்ரீகோயிலுக்கு அழைத்து செல்வார். வேறு விசேஷபூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். 17-ம் அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடைதிறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். அன்றிலிருந்து தொடர்ச்சியாக 41 நாட்களும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடைபெறும். டிச., 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறும்.

அடுத்தடுத்து ரோகித் சர்மா சாதனை

கோல்கட்டா: இந்தியா வந்துள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, அஷ்வின் நீக்கப்பட்டு ரோகித் சர்மா, கரண் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணிக்கு அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது. குலசேகரா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த ரகானே (24), மாத்யூஸ் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த அம்பதி ராயுடு (8), எரங்கா பந்தில் போல்டானார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, குலசேகரா வீசிய 30வது ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து அசத்திய ரோகித், ஒருநாள் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் கேப்டன் விராத் கோஹ்லியும் அரை சதம் விளாசினார். இவர் 66 ரனகளில் ஆட்டமிழந்தார். ரெய்னா (11) நிலைக்கவில்லை. தொடர்ந்து அசத்திய ரோகித் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். தவிர, ஒரு நாள் அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுதத வீரர் ஆனார். ரோகித் 264 ரன்களில் அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 404 ரன்கள் எடுத்திருந்தது. உத்தப்பா (11) அவுட்டாகாமல் இருந்தார்.

களைப்படையவில்லை:ரோஹித்

கோல்கட்டா: இரண்டு மாதம் கழித்து அணிக்காக விளையாட வந்துள்ளதால், இரட்டை சதம் அடிப்பதில் களைப்படையவில்லை என, சாதனை படைத்துள்ள ரோஹித் சர்மா கூறினார். மேலும், 'நான் 50 ரன்களை கடந்தபோது, இந்திய அணிக்கு பெரிய அளவிலான ஒரு ஸ்கோரை தர வேண்டும் என்று எண்ணினேன்,' என்றார்.

ரோகித் சர்மா உலக சாதனை

கோல்கட்டா: இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக இரட்டைசதம் அடித்தும், பட்டியலி்ல் முதலிடம் பெற்றும் அசத்தினார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, அஷ்வின் நீக்கப்பட்டு ரோகித் சர்மா, கரண் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணிக்கு அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது.

குலசேகரா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த ரகானே (24), மாத்யூஸ் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த அம்பதி ராயுடு (8), எரங்கா பந்தில் போல்டானார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, குலசேகரா வீசிய 30வது ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து அசத்திய ரோகித், ஒருநாள் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார்.

மறுமுனையில் அசத்திய கேப்டன் விராத் கோஹ்லியும் அரை சதம் விளாசினார். இவர் 66 ரனகளில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய ரோகித் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்து சாதித்தார். அவர், 222 ரன்களை எடுத்தபோது, இரட்டை சதம் அடித்தவர்களில் அதிகமான ரன்கள் எடுத்திருந்த சேவாக்கின் சாதனையை (219) முறிடித்து, பட்டியலில் முதலிடம் பெற்றார்.

காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் என்கவுன்டர்

குல்காம்: ஜம்மு காஷ்மீர், குல்காம் மாவட்டம், சானிகாம் கிராமத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள்

ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பட்டியல்

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்த முதல் பட்டியலை ஆம் ஆத்மி வௌியிட்டுள்ளது. இதில் 22 பேர் உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் அனைவருக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது, அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் அடுத்த பட்டியல்களில் வௌிவரும் என கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை: ஐஓசி அறிவிப்பு

புதுடில்லி: உற்பத்தி வரி அதிகரிப்பு காரணமாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இன்று முதல் 1.50 பைசா அதிகரிக்கும் என தகவல்கள் வௌியாகின. இந்நிலையில், வரி உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

நீதி விசாரணைக்கு உத்தரவு-ராமன்சிங்

பிலாஸ்பூர்: பிலாஸ்பூர் கருத்தடை சாவுகள் குறித்து நேரில் ஆய்வு நடத்திய சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங், பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது,' என்றார்.

பாக்., ஏவுகணை சோதனை வெற்றி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், ஷாகீன் 2 என்ற நவீன ஏவுகணை சோதனையை இன்று வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

கெய்ரோ குண்டு வெடிப்பு: 16 பேர் காயம்

கெய்ரோ: எகிப்து தலைநகரான கெய்ரோவில், மெட்ரோ ரயிலில் குண்டு வெடித்ததன் காரணமாகவும், அதனால் ஏற்பட்ட பயணிகள் நெரிசல் காரணமாகவும் 16 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உ.பி.,யில் பா.ஜ., அரசமைக்கும்-மாத்தூர்

லக்னோ: உத்தரபிரதேச பா.ஜ.,வின் தலைவர் (பொறுப்பு) ஓம் பிரகாஷ் மாத்தூர் கூறுகையில், 'வரும் 2017ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெரும் வெற்றி பெற்று, உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்கும்,'என்றார். இதற்காக, கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பதை தீவிரப்படுத்தி உள்ளதாக அவர் கூறினார்.

காஷ்மீரில் போலீஸ் தடியடி

ஸ்ரீநகர்: வேட்பு மனு தாக்கல் செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தேசிய மாநாட்டு கட்சி தொண்டர்களும், மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்களும் மோதிக் கொண்டனர்.நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் தடியடி நடத்தி, கும்பலை விரட்டினர்.

ஆத்தூரில் பெண் தீக்குளிக்க முயற்சி

ஆத்தூர்: ஆத்தூரைச் சேர்ந்தவர் ராணி. மகன், மகளுடன் பஸ் ஸ்டாண்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், தங்கள் வியாபாரத்திற்கு ராஜா என்பவர் இடைஞ்சலாக உள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்க ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். அப்போது திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு, தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து, சமாதானம் செய்து அனுப்பினர்.

கோவை மாநகராட்சி முற்றுகை

கோவை: கோவை மாநகராட்சியில், தனியார் நிறுவனத்தின் சார்பாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த சுகாதார ஊழியர்கள் 600 பேர், தங்களுக்கு மீண்டும் பணி கொடுக்க வேண்டும், சம்பள பாக்கியை தர வேண்டும் என்று கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

புதுடில்லி: பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரி உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.50 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நேருவை வைத்து காங்., அரசியல்-பா.ஜ.,

புதுடில்லி: பா.ஜ.,வின் ஷாநவாஸ் ஹூசைன் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் நேருவின் 125 வது ஆண்டு பிறந்த நாள் விழாவை வைத்து அரசியல் செய்கின்றனர்,' என, குற்றம் சாட்டினார்.

போட்டோவுக்கு போஸ்: ராகுல் மீது தாக்கு

புதுடில்லி: கிளீன் இந்திய திட்டத்தில் மக்கள் தெருக்களை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள், அந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லை. போட்டோவிற்கு போஸ் கொடுக்கவே பயன்படுகிறது என, ராகுல் பேசியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளர் நளின்கோலி கூறுகையில், ராகுலின் அரசியல் வாழ்க்கையே போட்டோவிற்கு போஸ் கொடுப்பதை வைத்து தான் இருக்கிறது. உள்ளூர் ரயில்களில் பயணம் செய்வது, தலித் வீடுகளுக்கு சென்று குசலம் விசாரிப்பது என அனைத்தையும் போட்டோ எடுத்து பிரசுரித்து தான் அவர் அரசியல் செய்கிறார்,' என்று கூறி உள்ளார்,.

பிரதமர் மோடி-ஜின்ஜோ அபே சந்திப்பு

நைபைதா: மியான்மரில் நடக்கும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஜப்பான் பிரதமர் ஜின்ஜோ அபேயை, பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

காங்., தொடர்ந்து போராடும்-சோனியா

புதுடில்லி: டில்லியில் இன்று துவங்கிய பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, 'நேருவின் புகழை கொடுக்க நினைக்கும் சக்திகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக, தொடர்ந்து போராடும். நேருவை எதிர்ப்பவர்கள், நல்ல கொள்கையை எதிர்ப்பவர்கள் என்பதால், காங்கிரஸ் போராடும்,' என்றார்.

கிளீன் இந்தியா திட்டம் குறித்து ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: நேரு பிறந்த நாள் மாநாட்டில் பங்கேற்று காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில், நாட்டில் அனைவரும் தெருவை சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். இது போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வேலையாகத்தான் உள்ளது . இவ்வாறு ராகுல் பேசினார்.

பணபரிவர்த்தனையில் நவீன முறை - ரிசர்வ் வங்கி!

மும்பை : ரிசர்வ் வங்கியின் கூட்டம் தலைவர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு பேசிய ரகுராம் ராஜன், சிறிய அளவிலான கடன்பெறும் வாடிக்கையாளர்களை பாதுகாக்க, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறிய ரக வங்கிகள் உருவாக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர், இதுதொடர்பாக இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றார். மேலும் பணவரிவர்த்தனையை நவீனப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

2.5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த முகம்மது உமர் என்ற பயணியிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் மறைத்து வைத்து கடத்தி வந்த 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 85 லட்சம் ரூபாய் ஆகும்.

நேரு பிறந்தநாள் விழா துவக்கம்

புதுடில்லி: டில்லி, தல்கதோரா ஸ்டேடியத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேரு பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் துவங்கின. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பயங்கரவாதம்:மோடி கோரிக்கை

நைபைதா: ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, வழியில், மியான்மரில் நடக்கும் கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'மதவாதம், பயங்கரவாதம் ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள இணைப்பை அகற்ற நாம் பாடுபட வேண்டும்,' என்றார்.

பிரபல ரவுடியின் தம்பி சரண்

மேலூர்: மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், இந்நிலையில், பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தி்ன் தம்பி, செந்தில் மற்றும் சுப்ரமணி என இருவர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

ராணுவ தீர்ப்பு : ஒமர் வரவேற்பு

ஸ்ரீநகர்: மசில் போலி என்கவுன்ட்டர் வழக்கில், 2 அதிகாரிகள் உள்ளிட்ட 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணுவ கோர்ட் தீப்பளித்துள்ளதை காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்காது என்று காஷ்மீர் மக்கள் நினைத்தனர். நீதி காணாமல் போய்விடும் என்று கருதினர். இந்நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தவறான செயல்படுவோருக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கட்டும்,' என்றார்.

வைகோ உள்ளிட்டோர் மீது வழக்கு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ பேச்சு மற்றும் அக்கட்சி தொண்டர்களின் தள்ளு முள்ளு ஆகியவை காரணமாக, வைகோ உள்ளிட்ட 400க்கும் அதிகமான ம.தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: குளிர்காலம் துவங்கி உள்ள நிலையில், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கான இரவு நேர குடில்கள் குறித்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

காங்.,.கை பார்த்தால் நேரு அழுவார்-பா.ஜ.,

புதுடில்லி: பா.ஜ.,வின் தலைவர்களில் ஒருவரான சம்பத் பத்ரா, காங்கிரஸ் கட்சி குறித்து பேசுகையில், 'காங்கிரஸ் கட்சி தற்போது இருக்கும் நிலையை பண்டித ஜவஹர்லால் நேரு இப்போது வந்து பார்த்தால் கதறி அழுவார். ஒரு நாட்டிற்காக தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பை, அரசியல் கட்சி என்ற குறுகிய வட்டத்திற்குள் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து அவர் வருந்துவார்,' என்று கூறி உள்ளார்.

கொடிவேரி அணை திறப்பு

கோபி: கோபிச்செட்டி பாளையம் அருகில் உள்ள கொடிவேரி அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு பகுதியில் உள்ள 24,504 ஏக்கர் விளைநிலங்கள் பயன் அடையும்.

சுனந்தா மரணம்: கமிஷனர் விளக்கம்

டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர், டில்லி ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டில்லி போலீஸ் கமிஷனர் பாசி, சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விசாரணை முடிந்த பின்னரே நாங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும். அப்போது, இந்த வழக்கு குறித்து தௌிவாக கூறப்படும்,' என்றார்.

உணவு பாதுகாப்பு: அமைச்சர் விளக்கம்

புதுடில்லி: உலக வர்த்தக அமைப்புடனான உணவு பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறினார். மேலும், உணவு பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா, அமெரிக்கா இடையே தீர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்த இந்தியாவின் நிலையை, உலக வர்த்தக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

போலி என்கவுன்டர்: 7 வீரர்களுக்கு சிறை

புதுடில்லி: கடந்த 2010ம் ஆண்டு நடந்த மசில் போலி என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்த ராணுவ கோர்ட், 2 அதிகாரிகள் உள்ளிட்ட 7 வீரர்களுக்கு சிறை தண்டனை வழங்கி உள்ளது. மேலும், அவர்களின் சலுகைகளையும் ரத்து செய்துள்ளது.

முன்விரோதம்: இரட்டை கொலை

நெல்லை: திருநெல்வேலி வட்டம் நாங்குநேரி, கரந்தானேரியைச் சேர்ந்தவர் வேல்சாமி, 30, நெடுங்குளத்தை சேர்ந்தவர் கணேசன் 33. இவர்கள் இருவரும் நேற்று இரவு பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, பாணான்குளம் ரயில்வே கேட் அருகே ஒரு மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் வேல்சாமி இறந்தார். கணேசன் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அந்த கும்பல், அதே பகுதியைச் சேர்ந்த மாரிக்கனி 37, என்பவரையும் வெட்டியது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கணேசன் சிகிச்சை பெற்று வருகிறார். முன்விரோதம் காரணமாக இந்த இரட்டை கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

பாளை., சிறை கைதிகள் உண்ணாவிரதம்

பாளையங்கோட்டை: திருநெல்வேலி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பைச் சேர்ந்த 19 பேர், மதுரை மற்றும் கோவை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் அமைப்பைச் சேர்ந்த இருவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம்

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்ற, இறக்கமாக காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.61.49-ஆக இருந்தது. பின்னர் சரிந்த ரூபாயின் மதிப்பு காலை 10.30 மணியளவில் 3 காசுகள் சரிந்து ரூ.61.54-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.61.51-ஆக இருந்தது.

நெல்லையில் ஸ்டாலின் கருத்துக்கேட்பு

திருநெல்வேலி: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மாவட்டம் வாரியாக பயணம் செய்து, கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகிறார். இன்று நெல்லையில், நெல்லை நகர கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார். இன்று மாலையில் நடக்க உள்ள கட்சி கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு மாவட்ட அளவிலான நிர்வாகிகளிடம் பேசுகிறார்.

ம.பி., காங்., துணைத் தலைவர் ராஜினாமா

போபால்: மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் மனக் அகர்வால். கடந்த சில தினங்களுக்கு முன், உள்ளாட்சி தேர்தலுக்கு சீட் கொடுத்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் மோதிக் கொண்டனர். இந்நிலையில், மனக் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியது

மும்பை : இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (நவ.,13ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 89.84 புள்ளிகள் உயர்ந்து 28,098.74-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 24.70 புள்ளிகள் உயர்ந்து 8,408 புள்ளிகளாகவும் இருந்தன. ஆனால் சற்று நேரத்திலேயே பங்குகளின் விலை ஏற்றத்தால் லாபம்நோக்கம் கருதி பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததால் பங்குசந்தைகள் சரிந்தன. காலை 10.30 மணியளவில் சென்செகஸ் 34 புள்ளிகளும், நிப்டி 19 புள்ளிகளும் சரிந்து இருந்தன.

தெருமுனை போராட்டம்: சிவசேனா முடிவு

மும்பை: மகாராஷ்ட்ரா சட்டசபையில், பெரும்பான்மை இடங்களை பெறாத பா.ஜ., அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது. இது குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில், தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்த சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளது.

பஸ் மோதி 2 மாணவர்கள் பலி

மதுரை: மதுரை அருகே சிலைமானில் பைக்கில் சென்று கொண்டிருந்த முகம்மது கமர்தீன், சையது சபிபுல்லா என்ற இரு மாணவர்களும், அரசு பஸ் மோதிய விபத்தில் பலியாகி உள்ளனர். இவர்கள் இருவரும் அருகில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணை மிரட்டி நடனம்: போலீஸ் கைது

ஷாஜகான்பூர்: உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருவிழா நடந்தது. இங்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சைலேந்திர சுக்லா, அங்கிருந்த பெண் ஒருவரை பிடித்து, துப்பாக்கி முனையில் நடனமாட வைத்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்பெண் நடனமாடி உள்ளார். இந்த காட்சி, உள்ளூர் டிவி சானல் ஒன்றின் வீடியோவில் பதிவாகியது. இந்நிலையில், இது குறித்த புகாரின் பேரில், அந்த குடிகார போலீஸ் கான்ஸ்டபிளை மாவட்ட எஸ்.பி., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ரெய்டுகளை வீடியோ எடுக்க உத்தரவு

புதுடில்லி: வருமானவரி்த்துறை சோதனைகளின் போது, சில இடங்களில் அதிகாரிகள் தேவையில்லாத நெருக்கடிகளை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கறுப்பு பணத்தை மீட்க சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு, வருமானவரி சோதனைகள் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், சோதனைகள் குறித்த புகார்களை கண்டறிய முடியும் என்று அக்குழு கூறி உள்ளது.

காலி இடங்களை நிரப்ப வேண்டும்-தத்து

புதுடில்லி: கோர்ட்டுகளில் உள்ள காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து தெரிவித்துள்ளார். இதன் மூலம், வழக்குளை சரியாகவும், விரைவாகவும் முடிக்க வழிபிறக்கும் என்று அவர் கூறி உள்ளார்.

எல்லையில் பாக்., துப்பாக்கி சூடு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், சம்பா என்ற இடத்தில், இந்திய எல்லை அருகில் உள்ள நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தியது.

ரஷ்ய பிரதமரை சந்தித்தார் மோடி

நய்பெய்தா: மியான்மர் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, தனது மூன்றாவது நாளில் ரஷ்ய பிரதமர் டிமிட்ரியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இருநாட்டு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது.

எகானமி வகுப்பில் பரிகர் பயணம்

புதுடில்லி: பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோகர் பரிகர், நான்கு நாள் பயணமாக கோவா சென்றார். இந்த பயணத்தின்போது, கோவா ஷிப்யார்டு, கடற்படை வசதிகள் குறித்து அவர் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துகிறார். இந்த பயணத்திற்காக அவர் டில்லியில் இருந்து விமானத்தில், எகானமி வகுப்பில் பயணம் செய்தார். பிரதமர் மோடியின் சிக்கன நடவடிக்கையை ஏற்று, அவர் இவ்வாறு பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை எரிவாயு குழாயில் தீ

மும்பை : மும்பை அருகே குர்லா பகுதியில் பாரத் பெட்ரோலிய எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

அரசு பஸ்கள் மோதல்: 40 பேர் காயம்

கும்பகோணம் : கும்பகோணம் அருகே ஆடுதுறையில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பஸ்களில் பயணம் செய்த 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் கருத்தடை டாக்டர் கைது

ராய்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் பிலாஷ்பூரில் கருத்தடை அறுவை சிகிக்சை செய்து 14 பெண்கள் உயிரிழக்க காரணமாக இருந்த டாக்டர் ஆர்.கே.குப்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் மின்சார ரயில்கள் தாமதம்

சென்னை : சென்னை-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வேலைக்கு செல்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

வைகோ மீது வழக்குப்பதிவு

சென்னை : மலேசியாவில் இருந்து திரும்பிய வைகோ சென்னை விமான நிலையத்தில் தொண்டர்களிடம் பேசினார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அனுமதியின்றி தொண்டர்களிடையே பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 200 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் நீர் நிறுத்தம்

சேலம் : டெல்டா மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டு வந்த நீர் இன்று காலை 9 மணியில் இருந்து நிறுத்தப்படும் என திருச்சி மண்டல பொதுப்பணித்துறை அதிகாரி அசோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை : மழை காரணமாக சென்னை பல்கலைகழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அண்ணா பல்கலைகழகத்தில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை : தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர், காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர்:பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர் : தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை காஞ்சிபுரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை:தமிழகத்தி்ல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களி்ல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்ககப்பட்டு்ள்ளது.

பிரான்ஸ் கப்பல் படை தளபதி இந்தியா வருகை

புதுடில்லி: பிரான்ஸ் நாட்டின் கப்பல் படை தளபதி அட்மிரல் பெர்னார்டு ரோஜல் இன்று இந்தியா வருகை தர உள்ளார். அவர் கோவா மற்றும் மும்பையில் இந்தியாவின் கப்பல் படை தளங்களை பார்வையிடுகிறார். வரும் 15-ம் தேதி கோவா மாநிலத்தில் செயல்பட்டு வரும் கப்பல் படையின் போர் கல்லூரியை பார்வையிடுகிறார். தொடர்ந்து 17-ம் தேதி மும்பைக்கு செல்கிறார். மேலும் பிரான்ஸ் நாட்டு உதவியுடன் கட்டப்பட்டு வரும் கப்பல்களையும் அவர் பார்வையிடுகிறார். பிரான்ஸ் நாட்டு உதவியுடன் கட்டப்பட்டு வரும் நீர்மூழ்கி கப்பல் அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் இயக்குனர் ரவி சோப்ரா காலமானார்

மும்பை: பாலிவுட் இயக்குனர் ரவிசோப்ரா (68) காலமானார். பிரபல பாலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர் பி.எஸ். சோப்ரா, இவரது மகன் ரவிசோப்ரா(68), தி பர்னிங் டிரைன், ஆஜ் கி ஆவாஸ் உள்ளிட்ட வெற்றி படங்களைஇயக்கியவர். கடந்த மாதங்களாக நுரையீரல் நோய் காரணமாக மும்பை பிரீஜ்கேன்டி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இன்று நள்ளிரவில் சிகிச்சைபலனின்றி இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். நாளை அவரது இறுதி சடங்கு நடக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்

சூரத் விமானநிலைய இயக்குனர் இடமாற்றம்

அகமதாபாத்: சூரத் விமான நிலைய ஒடு பாதையில் எருமை மாடு புகுந்த விவகாரத்தி்ல் விமான நிலைய இயக்குனர் இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த வாரம் சூரத் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட இருந்த தனியார் நிறுவன விமானம் மீது ஒன்று எருமை மாடு மோதியது. இவ்விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சூரத் விமான நிலைய இயக்குனர் எஸ்.டி சர்மா அசாம் மாநிலம் லீலாம்பரி விமான நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டது விமான நிலைய ஆணையம்.

சத்தீஸ்கர் மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 13 பெண்கள் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சத்தீஸ்கர் மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள்: எதிர்கட்சிகளுக்கு பட்நாவீஸ் சவால்

மும்பை: பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர் பட்நாவீஸ், சட்டசபையில் நியாயமான முறையில் தான் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.எதிர்க்கட்சிகள், ஓட்டு பிரிவினையை கோரவில்லை. அரசு மெஜாரிட்டி இல்லை என யாராவது கருதினால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என கூறினார்.

செயல்வீரர்: மோடியை பாராட்டிய ஒபாமா

நை பை டவ்: மியன்மரில் நடைபெறும் ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு மியான்மர் அதிபர் விருந்தளித்தார். இந்த விருந்தின் போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, செயல்வீரர் என பிரதமர் மோடியை ஒபாமா பாராட்டியதாக வெளியுறவுத்துறை செயலாளர் அக்பருதீன் கூறியுள்ளார்.

புர்துவான் குண்டுவெடிப்பு: 5 பேருக்கு என்.ஐ.ஏ., சம்மன்

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் புர்துவானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கிராம தலைவர் ரஷீத் ஆல்வி உள்ளிட்ட 5 பேருக்கு தேசிய புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.