குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை …? – வெற்றிக்கான வீரிய விதைகள்

ஏன் என்னால் வெற்றிபெற இயலவில்லை என்றுயோசிப்பதில்லை? – வெற்றிக்கான வீரிய விதைகள். நாம் அனைவருமே எடுத்துக்கொண்ட காரியத் தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகி றோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை. இந்த காரியத்தில் ஏன் என்னா ல் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை; மாறாக, அவ்வளவுதான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . ஆசை மட்டும் இருந்தால்

வெற்றி கிட்டாது. ஆசையுடன் சிலசெயல்களையும் மேற்கொண்டா ல் மட்டுமே வெற்றிகிட்டும். அதற்குசெய்ய வேண்டியன என்ன ?

இதோ சில டிப்ஸ் உங்களுக்காக …

*நாம் எடுத்துக்கொண்டகாரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடா முயற்சியும் , நம்பிக் கையும்தேவை. அந்த நம்பிக்கை, “என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் ” என்ற மன உறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தா லும் கூட உங்களால் வெற்றி பெற இயலும் .

* பிரச்னைகள் வரும்போது, நான் இவ்வளவுதான், இது என்விதி என்றுமனம் தளரக்கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கவேண்டும். அப்ப டி நம்பினால், நீங்கள் புதியவனாக, புதியவளாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கைதோல்வியுறுபவர்களை, வெற்றியாளராக்கும்; சோம்பேறிகளை சுறுசுறுப்பான வர்களாக மாற்றும் .

*உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக்கொள்ளுங்க ள். அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும், நம்பிக் கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும். பின், ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும்போது உங்களால் வெற்றி அடைய முடியும் .

* தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந் திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்ச யம். மாறாக, எதிர்மறையான (நெகடிவ்) எண்ணங்களை வளர்த்துக்கொண்டால், விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும் . ஏனென்றால் , உங்கள் ஆழ்மனம், உங்கள் எண்ணங்கள் அனை த்தையும் ஏற்றுக் கொள்கிறது. ஆழ்மன திற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ, அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகி றது. உதாரணமாக, தாழ்வுணர்ச்சி, பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொ ள்ளும்போது, அது உங்கள் ஆழ்மனதினு ள்சென்று அதையே திரும்ப அனுப்புகிறது. ஆக நீங்கள் உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள்.

எனவே, மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதில், ஆரோக்கியமான, ஆ க்கப்பூர்வமான, தைரியமான எண்ணங்களால் நிரப்புங்கள். வெற்றி நிச்சயம் !