குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

12.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பா.ஜ, எம்.பி., மீது வழக்கு

மும்பை:பா.ஜ., எம்.பி., பினாகி மிஸ்ரா, பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ரூ.200 லஞ்சம் கொடுத்ததாக, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடுக்கடலில் தவித்த ஜெகதாபட்டினம் மீனவர்கள் மீட்பு

ராமேஸ்வரம்:படகில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறால் நடுக்கடலில் தவித்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து நவ., 10 ல், முத்துராஜா என்பவரது படகில் பிரசாத், வினோத், ஸ்டீபன், ரவிஅரசன், அஜீத் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்து விட்டு நவ., 11 ல், கரை திரும்ப வேண்டும். ஆனால் படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் மீனவர்கள் கரை திரும்பவில்லை. ஜெகதாபட்டினத்தில் இருந்து மீட்பு படகு மூலம் காணாமல் போன மீனவர்களை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தொண்டி கடற்கரையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் தவித்தது தெரியவந்தது. அங்கு ரோந்து சென்ற மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் 5 மீனவர்களை படகுடன் மீட்டு மண்டபம் கரைக்கு அழைத்து வந்தனர். மண்டபம் வந்த படகு உரிமையாளரிடம் 5 மீனவர்கள், படகை கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர். பின், மீட்பு படகில் பழுதான படகை இழுத்து கொண்டு ஜெகாதபட்டினம் சென்றனர்.

நெல்லை வந்தார் ஸ்டாலின்

திருநெல்வேலி: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நெல்லை வந்தார். சென்னையிலிருந்து மதுரை வரை விமானத்தில் வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்தார். நெல்லை மாவட்டம் சங்கர்நகரில், தி.மு.க.,வினர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். நாளை காலை தி.மு.க., நிர்வாகிகளை சந்திக்கும் ஸ்டாலின், கட்சி தொண்டர்களை சந்திக்கவுள்ளார்.

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.20,000 லஞ்சம்: ஆர்.ஐ., கைது

திருச்சி:திருச்சியில், சொத்து மதிப்பு சான்று வழங்க லஞ்சம் வாங்கிய, வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். திருச்சி, சிந்தாமணியை சேர்ந்தவர் குமார், 35. இவருக்கு, திருச்சி சுற்று வட்டார பகுதிகளில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது. இந்த சொத்துகளுக்கு மதிப்பு சான்று வழங்க கோரி குமார், திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் அருகில் உள்ள, ஆர்.ஐ., அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார்.குறிப்பிட்ட நாளில் குமாருக்கு, சொத்து மதிப்பு குறித்த சான்று வழங்கவில்லை. ஆர்.ஐ., அலுவலகம் சென்ற குமாரிடம், வருவாய் ஆய்வாளர் நவனீஸ்வரன், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி, காலை, 11:00 மணிக்கு குமார், நவனீஸ்வரனிடம் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதை வாங்கிய நவனீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

சட்டசபையில் நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாது: பிரித்விராஜ் சவான்

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் நடந்தது எதுவும் ஏற்றுக்கொளள முடியாது என அம்மாநில முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான் கூறியுள்ளார். தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: பா.ஜ., அரசு முறையாக தேர்வு செய்யப்படவில்லை எனவும், நேர்மையான அரசு இல்லை. மாநில அரசு முறையாக தேர்வு செய்யப்பட்டதா என்பதை கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும். கவர்னர் சென்ற வாகனத்தை மறிக்க முயற்சித்தோம். ஆனால் அவரை தாக்க முயற்சி செய்யவில்லை. மாநிலத்தை சிறுபான்மை அரசு ஆட்சி செய்யப்போகிறது என கூறினார்.

 

ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்

மயிலாடுதுறை: முன்னாள் முதல்வர் ஜெ.,யை விமர்சித்தவர்களை தட்டிக்கேட்ட ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க.,வின் பாரதி மோகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நேற்று முதல் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று சீர்காழி உள்ளிட்ட சில பகுதிகளில் நன்றி தெரிவித்தார். இன்று திருமுல்லைவாசல் பகுதியில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டிருந்தார். அப்போது, திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த வாசன் மற்றும் புகழ்வேந்தன் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.பி.,யை விமர்சித்து தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனை கேட்ட திருமல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்தரன், அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இரண்டு பேரும் ரவீந்தரனை கீழே தள்ளிவிட்டனர். இதனை பார்த்த அ.தி.மு.க.,வினருக்கும், வாசன் மற்றும் புகழ்வேந்தன் இடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் டி.எஸ்.பி., தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று வாசன் மற்றும் புகழ்வேந்தனை போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ரவீந்தரன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மேலப்பாளையத்தில் ஒருவர் வெட்டிக்கொலை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே குறிச்சி பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்க மாடசாமி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். யார் கொலை செய்தார்கள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: காவிரியில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், காவிரியில் கர்நாடகம் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே எந்த திட்டத்தையும் கர்நாடக அரசு மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது. தமிழகத்தை ஆலோசிக்காமல் கர்நாடகம் எந்த திட்டத்தையும் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது. கர்நாடகாவுக்கு அனுமதி தர வேண்டாம் என நீர்வளத்துறைக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேகதாதுவில் இரு அணைகள் கட்டுவது என்ற கர்நாடகாவின் முடிவு நடுவர் மன்ற தீர்ப்பை மீறுவதாகவும். மேகதாது மற்றும் சிவசமுத்திரம் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் மணல் அள்ள தடை நீட்டிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், அதிகளவில் மணல் அள்ளப்பட்டு வந்ததால், மணல் அள்ளப்படுவதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த தடையை மேலும் ஒராண்டிற்கு நீட்டித்து மாவட்ட கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

வக்கீலாக பதிவு செய்ய வயது வரம்பு கிடையாது: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: வக்கீலாக பதிவு செய்ய வயது வரம்பு கிடையாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, வக்கீலாக பதிவு செய்ய வயது வரம்பு எதையும் பார்லிமென்ட் நிர்ணயிக்கவில்லை எனக்கூறி, பல்வேறு மாநில பார் கவுன்சில்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. பல பார் கவுன்சில்கள் வழக்கறிஞராக பதிவு செய்ய வயது வரம்பு 45 என நிர்ணயம் செய்திருந்தன.

பா.ஜ.,-திரிணமுல் கட்சியினர் மோதல்: 3 பேர் காயம்

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் பிர்பும் நகரில், பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

மும்பை: கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கவர்னர் சென்ற காரையும் அவர்கள் மறித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் ராகுல் போந்ரேல அப்துல் சட்டார், கலே விரேந்திர ஜக்தாப், ஜேகே கோரே ஆகியோர் இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் தொகுதி காலி: தமிழக அரசிதழில் வெளியீடு

சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால், அவர் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். இதனால், ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருந்தது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகரின் அறிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தண்டனை பெற்ற ஜெயலலிதா பதவியிழப்பு செய்யப்பட்டதாகவும், ஜெயலலிதா 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேடவாக்கம், அடையாறு, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, நுங்கம்பாக்கம், கிண்டி, மெரினா, சேப்பாக்கம், அண்ணாநகர், கோட்டூர்,சோழிங்கநல்லூர், ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு, தாம்பரம், பல்லாவரம், அடையாறு, பட்டினப்பாக்கம், மைலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் கருத்தடை செய்த பெண்கள் மரணம் ஏன்? அதிர்ச்சி தகவல்கள்

பிலாஸ்பூர்: கருத்தடை செய்த 11 பெண்கள் பலியான சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கருத்தடை செய்யப்பட்ட மருத்துவமனை கடந்த ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த மருத்துவமனையில் பல அறைகள் பல மாதங்களாக அடைக்கப்பட்டு உள்ளன. பல அறைகளில், உடைந்த கட்டீல்களும், சேர்களும் உள்ளன. ஏராளமான பெண்கள் அறுவை சிகிச்சைக்காக தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்த டாக்டர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை. சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர், ஆர்கே குப்தா, ஒரு லட்சத்திற்கு மேல் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று,5 மணி நேரத்தில் 93 அறுவை சிகிச்சைகளையும் குப்தா செய்துள்ளார்.

ஆங் சான் சுகியை சந்தித்தார் பிரதமர் மோடி

நாபிடா: ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மியான்மர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டில் ஜனநாயகத்திற்காக போராடி வரும் ஆங் சான் சுகியை சந்தித்து பேசினார்.

2021ல் விண்வெளிக்கு இந்தியர் அனுப்பப்படுவர்: இஸ்ரோ தகவல்

புதுடில்லி: வரும் 2021ம் ஆண்டு விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட்டில், விண்வெளி வீரர்கள் பயணம் செய்யக்கூடிய உறை (கேப்சூல்) பரிசோதித்து பார்க்கவுள்ளதாகவும், அதன் பின்னர் 2021ம் ஆண்டில் விண்வெளிக்கு இந்தியா மனிதர்களை அனுப்பும் என்றும் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்

மேல்ஜாதியினர் எல்லாம் வெளிநாட்டவர்: மஞ்சி பேச்சு

பாட்னா: இந்தியாவில் உள்ள மேல் சாதியினர் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற பீகார் முதல்வர் மஞ்சியின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் பேட்டியாவில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மஞ்சி, இந்தியாவில் உள்ள மேல் சாதியினர் அனைவரும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஆரியர்களின் வழித்தோன்றல்கள். பழங்குடியினரும், தலித்துகளும் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு கல்வியறிவு போதிப்பதன் மூலம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடித்தட்ட மக்களும் அரசாங்கத்தில் முக்கிய பங்காற்றச் செய்ய முடியும் என்று பேசினார். மஞ்சியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர சட்டசபையில் கூச்சல், குழப்பம்

மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் கவர்னர் உரையாற்றிய போது, எதிர்க்கட்சியினர் கூச்சல் எழுப்பினர். எனினும் கூச்சலுக்கு நடுவே கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார்.

மகாராஷ்டிர கவர்னர் முற்றுகை

மும்பை: மகாராஷ்டிர சட்டசபைக்கு வந்த கவர்னர் வித்யாசாகர் ராவை, காங்கிரஸ் உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிர சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், குரல் ஓட்டெடுப்பு மூலம் பா.ஜ., அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து ஓட்டு நடத்தப்படவேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. இதற்கு சபாநாயகர் மறுத்து விட்டார். இந்நிலையில், சட்டசபையில் உரையாற்றுவதற்காக கவர்னர் வித்யாசாகர் ராவ் காரில் வந்தார். அவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

துபாயில் டிராம் சேவை அறிமுகம்

துபாய்: வளைகுடா நாடுகளில் முதன் முறையாக டிராம் சேவை துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10.6 கி.மீ., தூரம் செல்லும் இந்த டிராம் வண்டிகளுக்கு என 11 ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 5ம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல்: சந்தீப் சக்சேனா

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வரும் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய இதுவரை 20 லட்சத்து 68 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இணையதளம் மூலம் 1.09 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். வாக்காளர் இறுதி பட்டியல் வரும் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

வால்நட்சத்திரத்தில் தரையிறங்கியது விண்கலம்

வாஷிங்டன்: வால்நட்சத்திரத்தில் விண்கலம் செலுத்தி ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். பூமியில் இருந்து 51 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வால் நட்சத்திரம் இந்த நட்சத்திற்கு ரொசேட்டாவில் இருந்து சிறிய ரக விண்கலம் கடந்த 2000-ம் ஆண்டு விண்ணில் உள்ள வால்நட்சத்திரத்திற்கு செலுத்தப்பட்டது. இதனை ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழுவினர் செலுத்தினர். அந்தவிண்கலத்தை தரையிறங்கி இன்று வால்நட்சத்திரத்தினை அடைந்தது. இது ஒரு வரலாற்று சாதனை என கூறப்படுகிறது. இதன் மூலம் பூமியில் உயிர்கள் தோன்றியதற்கான காரணங்கள் அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

ஆசியான் தலைவர்களுடன் மோடி சந்திப்பு

நாபிடா: ஆசியான் தலைவர்களுடன் மோடி தனித்தனியே சந்தித்து உரையாடினார். மியான்மரில் நடந்த 25வது ஆசியான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு நாட்டு தலைவர்களுடனும் மோடி தனித்தனியே சந்தித்து பேசினார். சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லூங்கை சந்தித்த பிரதமர், இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி என்றதுடன் சிங்கப்பூர் தான் நினைவுக்கு வரும் என்று பிரதமர் தெரிவித்தார். இதே போல், புருனை சுல்தானையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

கோவையில் தி.மு.க., கவுன்சிலர்கள் போட்டி கூட்டம்

கோவை: கோவை மாநகராட்சி அரங்கிற்கு வெளியே தி.மு.க., கவுன்சிலர்கள் போட்டி கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சியின் அவசர கூட்டம் இன்று நடந்தது. புதிய மேயராக ராஜ்குமார் பதவியேற்றப்பின் நடக்கும் முதல் கூட்டம் இது. இந்நிலையில், கூட்ட அரங்கிற்கு வந்த 10 தி.மு.க., கவுன்சிலர்கள், அரங்கில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெ., படத்தை அகற்ற வேண்டும் அல்லது தி.மு.க., தலைவர் கருணாநிதியின் படத்தை வைக்க வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை வெளியேற்ற மேயர் உத்தரவிட்டார். தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் மாநகராட்சி அரங்கிற்கு வெளியே போட்டி கூட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

சக மாணவன் தாக்கி பிளஸ் 1 மாணவன் பலி

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே சக மாணவன் தாக்கி பிளஸ் 1 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த விளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தவர்கள் வினோத் மற்றும் சுந்தரபாண்டி. இவர்கள் இருவரிடையே இன்று வகுப்பறையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுந்தரபாண்டி தாக்கியதில் வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் பொருளாதார சகாப்தம்: மோடி

நாபிடா: இந்தியாவில் புதிய பொருளாதார சகாப்தம் உருவாகி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மியான்மர் நாட்டின் நாபிடா நகரில் நடந்து வரும் 25வது ஆசியான் மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவில் புதிய பொருளாதார, தொழில்துறை மற்றும் வர்த்தக சகாப்தம் துவங்கியுள்ளது. இன்று உலகமும், இந்த பிராந்தியமும் ஆசியான் - இந்தியா உறவு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளது. விரைவாக வளர்ந்து வரும் இந்தியாவும், ஆசியானும் ஒருவருக்கொருவர் சிறந்த பங்காளிகளாக இருப்பர். இவ்வாறு மோடி பேசினார்.

மகாராஷ்டிர அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

மும்பை: நம்பிக்கை ஓட்டெடுப்பில் மகாராஷ்டிர அரசு முறையான நடைமுறைகள் எதையும் பின்பற்றவில்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாகூர் தெரிவித்துள்ளார்.

122 இடங்களில் வெற்றி: தமிழக பா.ஜ., இலக்கு

சென்னை: டில்லியில் செங்கோட்டையைக் கைப்பற்றியது போல, தமிழகத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றுவோம் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், முரளிதர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய தமிழிசை, டில்லியில் செங்கோட்டையைக் கைப்பற்றியது போல, தமிழகத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றுவோம். தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்து ஆட்சியைப் பிடிப்போம். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 122 தொகுதிகளை பிடித்து, ஆட்சியைக்க பா.ஜ., இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், பால்விலை, மின்கட்டண உயர்வுக்கு கண்டனம், பூரண மதுவிலக்கு, தமிழக நதிநீர் இணைப்பை வலியுறுத்தல், அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மழை நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசின் திட்டங்களுக்கு பாராட்டு, பெட்ரோல் டீசல் விலை குறைவு, தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

நேரு பிறந்த நாள் விழா: மம்தாவுக்கு சோனியா அழைப்பு

புதுடில்லி: டில்லியில் கொண்டாடப்படவுள்ள முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125 பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும்படி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா அழைப்பு விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் பா.ஜ., வளர்ச்சியடைந்து வரும் நிலையில், சோனியாவின் இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்திய, இலங்கை அரசுகள் நாடகம் போடுகின்றன: வைகோ

சென்னை: இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விவகாரத்தில், இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் நாடகம் போடுவதாக, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நடிகர் கடத்தல் வழக்கில் பிடிவாரண்ட்

கோபி: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு ஈரோடு கோர்ட் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்தது. இவ்வழக்கில் தொடர்புடைய செல்வம் (30) கோபி கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜராகி வந்தார். விடுமுறை காரணமாக இவ்வழக்கு ஈரோடு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது செல்வம் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஈரோடு கோர்ட் உத்தரவிட்டது.

ஆசியான் நாடுகளுடன் நல்லுறவு: பிரதமர் மோடி உறுதி

நாபிடே: ஆசியான் நாடுகளுடன் இந்தியா இருதரப்பு உறவுகளை சிறப்பான முறையில் பேணி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மியான்மரில் நடந்து வரும் 25வது ஆசியான் மாநாட்டில் பேசிய அவர், ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. மியான்மர் இந்தியாவின் மிகச்சிறந்த அண்டை நாடு. மியான்மருடன் இந்தியா வரலாற்றுப்பூர்வ உறவுகளைக் கொண்டுள்ளது. ஆசியான் நாடுகளுடன் இந்தியா இருதரப்பு உறவுகளை சிறப்பான முறையில் பேணி வருவதாகவும், ஆசியான் அமைப்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மகாராஷ்ட்டிர அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி

மும்பை: மகாராஷ்ட்டிர அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இன்று சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஹரிபாவ் பக்தே குரல் ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு நீண்ட கால தடை ?

புதுடில்லி: குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு நீண்ட கால தடை விதிக்க சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய ஆசியவிளையாட்டு போட்டியில் கிடைத்த வெண்கல பதக்கத்தை சரிதாதேவி வாங்க மறுத்தார். இது தொடர்பாக ஏற்கனவே சரிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் மீதான தடை நீண்ட காலத்திற்கான தண்டனை அறிவிக்கப்படும் என தெரிகிறது.

ரவுடி கீரிமணி விழுப்புரம் கோர்ட்டில் சரண்

விழுப்புரம்: மதுரையில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி கீரிமணி என்ற மணிவாசகம் இன்று விழுப்புரம் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி விக்னேஷ் பிரபு உத்தரவிட்டார்.

காவிரியில் கர்நாடகா அணை: கருணாநிதி கண்டனம்

சென்னை: காவிரியில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும், சட்டசபையை கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பெட்ரோல், டீசல் விலை ரூ. 1 குறைகிறது

புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 1 குறைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விலைகுறைப்பு வரும் நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவானி சாகர் அணை நாளை திறப்பு: முதல்வர் உத்தரவு

சென்னை: அரக்கன் கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலில் இரண்டாம் போக சாகுபடிக்காக பவானி சாகர் அணை நாளை முதல் திறக்கப்படும் என முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதன் மூலம் கோபி மற்றும் பவானி ஆகிய பகுதிகளில் 24,054 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

பழநி கவுன்சிலர்கள் தர்ணா

பழநி: பழநியில் 200க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியாததைக் கண்டித்து, அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் 20க்கும் மேற்பட்டோர் பழநி நகராட்சி அலுவலகம் முன்பாக, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் கடத்தல்: தர்மபுரி எஸ்.ஐ., சஸ்பெண்ட்

தர்மபுரி: மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததா, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை எஸ்.ஐ., ஆனந்த குமாரை சேலம் சரக டி.ஐ.ஜி., வித்யா குல்கர்னி இன்று சஸ்பெண்ட் செய்தார்.

உடுமலை வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை: பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, அமராவதி சின்னாறு செக்போஸ்ட்டில், உடுமலை வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த வக்கீல்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம், புதுச்சேரியில் வங்கிச் சேவைகள் பாதிப்பு

சென்னை: வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வங்கிப்பணிகள் பாதிக்கப்பட்டன. 25 சதவீத ஊதிய உயர்வு கோரி, நாடு முழுவதும் உள்ள வங்கிப்பணியாளர்கள் 10 லட்சம் பேர் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பொதுத்துறை, தனியார் மற்றும் கிராமப்புற வங்கிகளில் பணியாற்றும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, பணப்பரிமாற்றம், ஏ.டி.எம்., மற்றும் காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பட்னாவிசுடன் சிவசேனா தலைவர்கள் சந்திப்பு

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடன் சிவசேனா தலைவர்கள் ராம்தாஸ் கதம் மற்றும் திவாகர் ரவுட் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். பட்னாவிஸ் அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரவுள்ள நிலையில் நடந்துள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

மதுரை கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம் சரண்

மதுரை: மதுரை அண்ணாநகர் பகுதியில் நேற்று முன்தினம் 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், இன்று மதுரை மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தார். வெடிகுண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் கீரிமணி என்ற மணிவாசகம் சரணடைந்தார்.

தாய்லாந்து பிரதமருடன் மோடி சந்திப்பு

நாபிடா: ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மியான்மர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாநாடு நடக்கும் நாபிடாவில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சாவை சந்தித்துப்பேசினார். அப்போது தாய்லாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்த மோடி, இந்தியா - தாய்லாந்து இடையேயான மேலும் வலுவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

நாபிடா: இந்தியாவில் தொழில் துவங்க வருமாறு, அந்நாட்டு தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மியான்மரில் நடக்கும் 25வது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்த பேசினார். அப்போது, மேக் இன் இந்தியா திட்டத்தை இந்தியா செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், மலேசிய கம்பெனிகளுக்கு இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும், எனவே மலேசிய தொழிலதிபர்கள் இந்தியாவில் தொழில் துவங்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தார் ஒபாமா

பீஜிங்: திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ஒபாமா அங்கீகரித்துள்ளார். அதே நேரம் திபெத்தின் தனித்தன்மைகளை பாதுகாக்க சீனா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகா., சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் ஹரிபாவ் பக்தே

மும்பை: மகாராஷ்டிர சபாநாயகர் தேர்தலில், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதையடுத்து, பா.ஜ.,வைச் சேர்ந்த ஹரிபாவ் பக்தே போட்டியின்றி தேர்வானார்.

சொத்து விவரத்தில் மகளை சேர்த்த காங்.வேட்பாளர்

ஸ்ரீநகர்: காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த காங். வேட்பாளர்,வேட்புமனு தாக்கலின் போது, தனது சொத்து விவரத்தில் திருமணமாகாத மகளையும் இணைத்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது.இந்நிலையில் கேண்டர்பால் தொகுதிக்கு காங். சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் காங். வேட்பாளர் முகமதுயுசுப்பட் , தனது சொத்து விவரத்தில் திருமணம் ஆகாத தனது மகள் குறித்த விவரத்தையும் தெரிவித்தார்.

தேர்தல் அதிகாரிகள் கேட்ட போது மகள் வீட்டிற்கு விளக்கு போன்றவர், திருமணம் ஆன மகன், குடும்பம் சம்பாத்தியம் என தனியாக சென்றுவிடுவான்,ஆனால் மகள் திருமணம் ஆகும் வரை எப்போதும்எங்களுடன் வசிப்பார். எனவே தான் மகளையும் சொத்துவிபரத்தில் சேர்த்தேன், மகளும் எனது சொத்து தானே என்றார்.

டாக்டர்கள் வேலைநிறுத்தம் நியாயமா?: சுப்ரீம் கோர்ட் புத்திமதி

புதுடில்லி: டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது என அறிவிக்க முடியாது, எனினும். அவர்கள் மக்களுக்கு உயிரை காக்கும் சேவை செய்பவர்கள் என டாக்டர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்து டாக்டர்களுக்கு புத்திமதி புகட்டியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பல நாட்கள் போராட்டம் நீடித்ததால் மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். டாக்டர்கள் ஸ்டிரைக்கால் போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பலர் பலியாயினர்.இந்த விகாரத்தில் மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் தலையிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் என்.ஜி.ஓ.அமைப்பைச் சேர்ந்த சிலர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2012-ல்பொதுநலவழக்கு தொடந்தது.அதில் டாக்டர்கள் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் அறிவிக்க கோரி இருந்தனர்.

அந்த வழக்கு நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. , மனுதாரர் சார்பில் கிருஷ்ணவேணி ஆஜரானார். இதில் டாக்டர்கள் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் மீறி செய்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

நீதிபதிகள் கூறியதாவது, தேவையில்லாமல் டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்வது சரியல்ல. அவர்கள் உயிர் காக்கும் சேவை செய்பவர்கள், எனினும் அவர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என உத்தரவினையும்அறிவிக்க இயலாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு கூறினார். இந்த தீர்ப்பின் மூலம் டாக்டர்கள் உயிர்க்காகும் சேவை செய்பவர்கள் எனவும் வேலைநிறுத்தம் செய்வது சரியல்ல எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

சொந்த கரன்சி வெளியிட ஐ.எஸ்.அமைப்பு முடிவு

லண்டன்: ஈராக், சிரியா எல்லைப்புற நாடுகளை இணைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்.என்ற பயங்கரவாத அமைப்பினர் போர் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவிற்கு சவால் விடும் அளவிற்கு இவர்கள் வளர்ச்சியடைந்து வருகின்றனர். இந்த அமைப்பினர் ஏற்கனவே கொடியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சொந்தமாக கரன்சி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினார் மதிப்பில் 4.3 கிராம் எடையில் தங்கம் , திர்ஹாம் மதிப்பில் 3 கிராம் எடையில்வெள்ளி ஆகியவற்றால் நாணயங்களும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கேரளாவில் சி.எம்.பி., உடைந்தது: இரு அணியினரால் குழப்பம்

கண்ணுார்: கேரளாவில், மூத்த அரசியல் தலைவர், ஆர்.எம்.ராகவனின் இறுதிச் சடங்கு முடிந்த சில மணி நேரங்களில், அவர் நிறுவிய, சி.எம்.பி., கட்சியில் பிளவு ஏற்பட்டது.கேரள மாநிலம் கண்ணுாரை சேர்ந்த, ஆர்.எம்.ராகவன், 81, மா.கம்யூ.,வில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அதிலிருந்து விலகி கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சி.எம்.பி., என்ற புதிய கட்சியை துவங்கியிருந்தார்.சமீபத்தில் ராகவன் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு, முடிந்த சில மணி நேரங்களில், அவரின் கட்சியும் உடைந்தது. கட்சியின் புதிய பொதுச் செயலராக சி.பி.ஜான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான, கே.ஆர்.அரவிந்தகிஷன் போர்க்கொடி உயர்த்தினார்.இதில், ஜான் அணியினர், மாநிலத்தில் காங்., தலைமையிலான காங்., கூட்டணிக்கும், அரவிந்தகிஷன் தலைமையிலான அணியினர், மா.கம்யூ., தலைமையிலான எதிர்க்கட்சிக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால், சி.எம்.பி.,யில் குழப்பம் நீடிக்கிறது.

2ஜி வழக்கு: 18ம் தேதிக்கு சி.பி.ஐ., மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில், அமலாக்கத்துறை இணைஇயக்குநர் ராஜேஸ்வர் சிங் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பெற அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஷைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராசா மற்றும் கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புதிதாக சாட்சிகளை சேர்ப்பதற்கும், வாக்குமூலம் பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாட்சிகளிடம் புதிதாக வாக்குமூலம் பதிவு செய்வதன் மூலம், வழக்கு விசாரணையை தாமதப்படுத்த சி.பி.ஐ., முயற்சி செய்வதாக கூறினர். சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரும், தொடர்பிருந்தால் பிற சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இடமுள்ளதாக கூறினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

 

 

 

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.