குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

11.11.2014- இன்றய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

2ஜி வழக்கு: 18ம் தேதிக்கு சி.பி.ஐ., மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில், அமலாக்கத்துறை இணைஇயக்குநர் ராஜேஸ்வர் சிங் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பெற அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஷைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராசா மற்றும் கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புதிதாக சாட்சிகளை சேர்ப்பதற்கும், வாக்குமூலம் பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாட்சிகளிடம் புதிதாக வாக்குமூலம் பதிவு செய்வதன் மூலம், வழக்கு விசாரணையை தாமதப்படுத்த சி.பி.ஐ., முயற்சி செய்வதாக கூறினர். சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரும், தொடர்பிருந்தால் பிற சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இடமுள்ளதாக கூறினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தென் கொரியா கேப்டனுக்கு 36 ஆண்டு சிறை தண்டனை

சியோல்: சுற்றுலா படகு கடலில் மூழ்கி 300க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில், தென் கொரியா கப்பல் கேப்டனுக்கு 36 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 476 பேருடன் சென்ற சுற்றுலா கப்பல் நடந்த இந்த சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியானார். படகின் தலைமைப்பொறியாளருக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், படகில் இருந்த 13 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தென்கொரியாவின் க்வாங்ஜூ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் பால் விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆவின் பால் விலையை குறைக்கக்கோரியும், விலை உயர்வால் ஏழைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டில் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆவின் விலை குறைக்க கோரிய மனு தொடர்பாக 8 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

கூட்டணிக்காக கொள்கையை மாற்ற முடியாது: வைகோ

பினாங்கு: பா.ஜ.,கூட்டணியில் ம.தி.மு.க., நீடிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மலேசியாவின் பினாங்கு நகரில் தனியார் டிவிக்கு பேட்டியளித்த ம.தி.மு.க., செயலாளர் வைகோ, ம.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் நீடிக்கிறது. கூட்டணிக்காக கொள்கையை மாற்ற முடியாது. இலங்கை பிரச்னையில் மத்திய அரசு தனது நிலையை மாற்ற வேண்டும். இலங்கையில், தமிழர் பகுதிகளில் இருந்து சிங்களவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். தமிழ் இனத்திற்காக உலகம் முழுவதும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறினார்.

புர்துவான் வெடிகுண்டு சம்பவம்: முக்கிய குற்றவாளியின் உறவினர் கைது

டாக்கா: மேற்கு வங்க மாநிலம் புர்துவானில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியின் சகோதரர் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ம.பி.,யில் காங்., கட்சியினர் மோதல்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், காங்., கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மீனவர்கள் சார்பில் அப்பீல் மனு தாக்கல்

கொழும்பு: இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மீனவர்களின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அலிகார் பல்கலை.,யிடம் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

புதுடில்லி: உ.பி., மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலை.,யில் உள்ள லைப்ரரியில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து விளக்கம் அளிக்கும்படி, பல்கலை., நிர்வாகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வருடன் பொன். ராதாகிருஷ்ணன் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் உடன் இருந்தார்.

140 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு: பட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் பா.ஜ.,வுக்கு 140 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதால், நாங்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

பி.ஆர்.பி., நிறுவனத்தின் மீது மேலும் 6 வழக்குகள்

மேலூர்: மதுரை கிழக்கு மற்றும் மேலூர் சுற்றுவட்டாரங்களில் பட்டா இடங்களில் அரசின் அனுமதி இன்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கக்கோரி, மேலூர் கோர்ட்டில் மதுரை கலெக்டர் சுப்ரமணியன் மேலும் 11 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். இதில் 6 வழக்குகள் பி.ஆர்.பி., கிரானைட்ஸ் நிறுவனத்தின் மீது போடப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் மீது 5 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து இந்த விவகாரத்தில் இதுவரை 64 வழக்குகள் போடப்பட்டுள்ளன. தற்போது புதிதாக போடப்பட்டுள்ள வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் 17ம் தேதி நடைபெறும் என நீதிபதி மகேந்திர பூபதி அறிவித்துள்ளார்.

மேற்பார்வைக்குழு தலைவருக்கு கேரளா கடிதம்

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், மேற்பார்வைக்குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அதன் தலைவர் நாதனுக்கு, கேரள அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 139 அடியை தாண்டியது

கூடலூர்: மல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 139 அடியை தாண்டியது. அணைக்கு தற்போது 1049 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 456 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் மொத்தம் 6849 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

சபரிமலை சீசன்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில் (00652) டிசம்பர் 4,7,11,14,18,21,23,25,28 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 11.40க்கு சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி பிரீமியம் சூப்பர் பாஸ்ட் ரயில் (00653) 5,12,19,26 தேதிகளில் சென்னை சென்டரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பி மறுநாள் மதியம் 12.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். பிரீமியம் வகை ரயில்களுக்கான முன்பதிவு, ரயில் கிளம்பும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் (06348) டிசம்பர் 3,10,17,24,31 ஆகிய தேதிகளில் இரவு 8.20க்கு கிளம்பி மறுநாள் மதியம் 12.35 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு (06347) 4,11,18,25 மற்றும் ஜனவரி 1 2015 ஆகிய தேதிகளில் மாலை 6.15க்கு கிளம்பி மறுநாள் காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் ரயில் (06352) டிசம்பர் 2,16,30 ஆகிய தேதிகளில் இரவு 8.20க்கு கிளம்பி மறுநாள் மதியம் 12.35க்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி சூப்பர் பாஸ்ட் ரயில் (06351) சென்னை சென்ட்ரலில் இருந்து 3,10,17 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மாலை 6.15க்கு கிளம்பி மறுநாள் காலை 11 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கு: சி,பி.ஐ.,க்கு மாற்றம்

சென்னை: மதுரை, விமாலாதேவி கவுரவ கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் செய்து, சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு: கேரள அரசு தயக்கம்

புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணையின் 2 மதகுகளின் பழுதை நீக்கும் வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனு தாக்கல் செய்யவிருந்தது. இந்நிலையில், அவ்வாறு மனு தாக்கல் செய்தால், அது அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 136 அடியாக குறைக்க வேண்டும் என்று முன்னர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவின் விசாரணையை பாதிக்கும் என்பதால், புதிய மனு தாக்கல் செய்ய கேரள அரசு தயக்கம் காட்டி வருகிறது. இதனிடையே இன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.9 அடியாக உள்ளது.

சட்டசபையை கூட்டச்சொல்ல உரிமை இல்லையா: ஸ்டாலின் கேள்வி

சென்னை: சட்டசபையை கூட்டச் சொல்ல தனக்கு உரிமை இல்லையா என தி.மு.க., பொருளாளர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக்தில் புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவை பதவியேற்ற பின் சட்டசபையை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். சட்டசபையை கூட்டச் சொல்ல, தி.மு.க., சட்டசபை குழு தலைவரான எனக்கு உரிமை இல்லையா. சட்டசபை உறுப்பினர் ஆலோசனை கூறக்கூடாது என முதல்வர் கூறுவது சர்வாதிகாரம் இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை பிரச்னை குறித்து ஸ்டாலின் குறிப்பிடுகையில், மத்திய அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், தூக்கு தண்டனை பெற்றுள்ள 5 மீனவர்களை முன்கூட்டியே விடுவித்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

28ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம்: வாசன்

சென்னை: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புது கட்சி துவங்கியுள்ள வாசன், தனது கட்சியின் கூட்டம் வரும் 28ம் தேதி திருச்சியில் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடந்த மகளிர் அணி கூட்டத்தில் பேசிய அவர், விரைவில் துவங்கப்படவுள்ள புதிய கட்சியின் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். கட்சிப்பதவிகளில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் துவக்க விழா பொதுக்கூட்டம் வரும் 28ம் தேதி திருச்சி ஜி கார்னர் பகுதியில் நடக்கும். இவ்வாறு வாசன் தெரிவித்தார்.

காங்கிரஸ் தவிர அனைத்து கட்சி ஆதரவு கோருகிறது பா.ஜ.,

மும்பை: மகாராஷ்டிராவை முன்னேற்ற, காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவையும் வரவேற்பதாக, மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

மேலூர் கோர்ட்டில் பி.ஆர்.பி., குடும்பத்தார்

மேலூர்: பட்டா நிலங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்க வேண்டும் எனக்கோரி, மதுரை கலெக்டர் தொடர்ந்த வழக்கில், பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தார் இன்று மேலூர் கோர்ட்டில் ஆஜராகினர். இவ்வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி மகேந்திர பூபதி உத்தரவிட்டார்.

டில்லி தேர்தல்: ஆம் ஆத்மி மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: டில்லியில் சட்டசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற ஆம் ஆத்மியின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. தற்போது தேர்தல் கமிஷனிடம் இவ்விவகாரம் உள்ளதால், இதுகுறித்து தலையிட முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

பிச்சை எடுக்கும் நிலையில் சிவசேனா: தேசியவாத காங்., கடும் தாக்கு

மும்பை: சிவசேனா கட்சி தனது மரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை இழந்து, பா.ஜ., பிச்சையிடும் எதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைக்கு வந்து விட்டதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மஜீத் மேமன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா., விசாரணைக்குழு அதிகாரியாக இந்தியர் நியமனம்

ஐ.நா.,: பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஐ.நா., அலுவலகத்தில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்து ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூன் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்குழுவுக்கு தலைவராக இந்தியாவைச் சேர்ந்த கே.சி. ரெட்டி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிரியாவுக்கான ஐ.நா., பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எபோலா வைரஸ்:சிகிச்சைக்குபி்ன் வீடு திரும்பிய நியூயார்க் டாக்டர்

நியூயார்க்:நியூயார்க் டாக்டர் கிரேக் ஸ்பென்சர்(33) மேற்குஆசியாவில் மருத்துவசேவை அளித்துவிட்டு கடந்த அக்டோபர் 23ல் நியூயார்க் திரும்பியபோது எபோலோ வைரஸ் அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதை தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

பாலிவுட்: பெண் மேக்-அப் கலைஞர்கள் பணிபுரிய அனுமதி:சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி, இந்தி திரையுலகில் பெண் மேக்-அப் கலைஞர்கள் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.பாலிவுட் திரையுலகில் பணியாற்றும் மேக்-அப் கலைஞர்கள் மற்றும் முடி திருத்துவோருக்காக சி.சி.எம்.ஏ.ஏ. என்ற சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சங்கத்தில் பெண் மேக்-அப் கலைஞர்கள் யாரும் பதிவு செய்ய முடியாது. இந்த சங்கத்தில் பதிவு செய்யாதவர்கள் யாரும் இந்தி திரையுலகில் பணியாற்ற முடியாது.இந்த நடைமுறை பாலிவுட் திரையுலகில் கடந்த 59 ஆண்டுகளாக அமலில் இருந்தது. இதனால் பெண் மேக்-அப் கலைஞர்கள் இந்தி திரையுலகில் நுழைய முடியாமல் இருந்தனர்.இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள், பாலிவுட் திரையுலகில் பெண் மேக்-அப் கலைஞர்கள் பணிபுரிவதற்கு சி.சி.எம்.ஏ.ஏ. போட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்

மாஜி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,மோடிக்கு பாராட்டு

புதுடில்லி:மாஜி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மணீந்தர் சிங் தீர், பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துளளார்.டில்லியில் நடக்கவுள்ள சட்டமன்ற தோ்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால், அக்கட்சியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில் அவர், மோடி அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளார். மக்கள், பிரதமர் மோடியையும் அவரது பணிகளையும் ஏற்றுகொண்டிருப்பதாக கூறினார் தீர்.

மகா., அரசைக் கவிழ்க்கமாட்டோம்: பவார்

மும்பை:மகாராஷ்டிராவில் பா.ஜ.க., அரசைக் கவிழ்க்கமாட்டோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர பா.ஜ.க., அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர முடிவு செய்துள்ளோம். மாநிலத்தில் மாற்று அரசை அமைக்கும் நிலையில் காங்கிசோ, தேசியவாத காங்கிரசோ இல்லை. இந்தச் சூழ்நிலையில் மாநிலத்தில் மீண்டும் தேர்தல் வராமல் தவிர்ப்பதற்கான ஒரே வழி பா.ஜ.க., அரசை நாங்கள் ஆதரிப்பதுதான் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.