குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கணினி வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள்

1623 – சிக்கார்ட் என்பவர் உருவாக்கிய முதல் மெக்கானிக்கல் கால்குலேட்டர்

1823 – சார்லஸ் பேபேய் உருவாக்கிய அனலிடிக்கல் இயந்திரம். இந்த இயந்திரமே இன்றைய கணினிகளின் முன்னோடி என்று கூறலாம். சார்லஸ் பேபேயை கணினியின் தந்தை என்று சிறப்பு பெயர் பெற்றவர்.

1957 – இன்றைய அனைத்து மொழிகளின் முன்னோடியான ஃபோர்ட்ரான் கணினி மொழி வெளியிடப்பட்ட ஆண்டு.

1971 – ஸ்மால் டாக் எனப்படும் கணினி மொழி உருவானது. இது முழுக்க முழுக்க OOPS என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானது. இந்த கொள்கையின் அனைத்து சிறப்பமசங்களையும் இதில் பயன்படுத்தலாம். இன்றைய ஜாவா மற்றும் சி++ OOPS ன் அனைத்து சிறப்பம்சங்களையும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் ஜாவா மற்றும் ,சி++ யை ஸ்மால் டாக்குக்கு குறைவாக எடைபோட முடியாது. OOPS ன் விரிவாக்கம் Object Oriented Programming System.

 

1972 – சி என்ற மொழி உருவானது இதுவே இன்றை நவீன மொழிகளின் முன்னோடி என்று கூறலாம். இதை உருவாக்கியவர் டென்னிஸ் ரிட்ச்சி (Dennis Ritchie).

 

1975 – கணினி உலகின் மிக பெரிய நிருவனமான மைக்ரோ சஃவ்ட் உருவான வருடம்.

 

1976 – கணினி உலகின் மற்றொரு மிக பெரிய நிருவனமான ஆப்பிள் உருவான வருடம்.

 

1983 – ஆப்பிள் நிருவனம் மெளசை உருவாக்கிய வருடம்.

 

1990 – இனையதளம் உருவான வருடம். கணினி உலகில் தவிர்க்க முடியாத ஒன்று.

 

1995 – இன்றைய நவீன கணினி உலகின் மிக பிரபலமான மொழியான ஜாவா உருவான வருடம். ஜாவாவை உருவாக்கியவர் ஜேம்ஸ் காஸ்லிங் (James Gosling) அன்று ஜாவா மொழியின் சொந்தக்கார நிருவனம் சன் மைக்ரோ ஸிஸ்டம்(Sun Microsystems) இன்று ஆரக்கல் (Oracle Corporation ). மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 95யை அறிமுகப்படுத்திய வருடம்.

 

1998 – இன்று கணினி உலகின் மிக பெரும் ஜாம்பவானாகிய கூகுல் நிருவனம் உதயமான வருடம்.

 

2000 – உலகின் மிக பெரிய தகவல் களஞ்சியமான விக்கிபீடியா வெளியிடப்பட்ட வருடம். விக்கிபீடியா உல்கின் மிக பெரிய தகவல் பெட்டகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

2004 – சமூக இனையதளங்களில் முக நூல் (Facebook) பெரும் புரட்ச்சியை செய்த வருடம். இன்று முக நூல் கணக்கு இல்லாதவர்கள் மிக சிலரே.