தானே விரும்பி ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை, கடைசி வரை அத ன்படியே வாழ்ந்தும் காட்டியவன் மகா கவி பாரதியார்! இவரது உறுதி மொழியி னை ஏற்று அதன் படி நாமும் நமது வாழ்க் கையில் கடை பிடித்து நடந்தால் நம் ஒவ்வொருவருடைய சிந்தையிலும் பாரதி வாழ்வான், வாழ்ந்து கொண்டிருப்பான் என்பது எள்ளவும் சந்தேகமில்லை.
இதோ அந்த மகா பாரதியாரின் உறுதி மொழிகள்
இயன்றவரை தமிழே பேசுவேன்.
தமிழே எழுதுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்.
எப்போதும் பராசத்தி, முழுஉலகின்முதற்பொருள்,அதனையே தியானம் செய்து கொண்டிருக்க முயற்சிப்பேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயற்சிப்பேன்.
பொழுது வீணே கழிய இடங்கொடேன். லெளகிக காரியங்களை ஊக்கத் துடனும் மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும்பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன். உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்பதாலும் தூய்மையுறச் செய்வேன்.
மறைத்தும், மறந்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதலை விரும்பேன்.
மூடரின் உள்ளத்தில் என்னைப்பற்றி பொய் மதிப்புண்டாக இடங்கொ டேன்.
சர்வசக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலு மாறு சூழ்வேன்.
பொய்மை, இரட்டுறமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.
இடையறாத தொழில் புரிந்து இவ்வுலக பெருமைகள் பெற முயல்வே ன். இல்லாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சி யோடிருப்பேன். எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம் இவற்றோடிருப்பேன்