குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

வல்லரசுகளின் பொருளாதாரப் பொம்மலாட்டம்

இரசியாவில் சனாதிபதி மகிந்தவிற்கு  முடி(கிரீடம்)

கலாநிதிப் பட்டம் வழங்கியமை..
சரத் பொன் கைது... பூநூல் கூட்டத்தின் மூடுமந்திரம்.

மேற்குலகினதும் அமெரிக்காவினதும் சாய்வின் அறிகுறி!

ஆசியாவின் உயர்ச்சி ஆரம்பம்.
தமிழர் நிலை திரிசங்கு சொர்க்கமா?

உலக பொருளாதாரத்தில்  தமிழரின் தாக்கம்  வருமா?

ஒருங்கிணைந்த வர்த்தகப் பொருளாதார சிந்தனை வளருமா?

பட்டு உற்பத்தி இலத்திரன் உற்பத்தி   நாடுகளையும் பொறிகள் (வாகனங்கள்) உற்பத்தி செய்யும்

நாடுகளையும்
ஈர்ப்பதற்கு ஏற்ற கூட்டு முடிவுகளைத்  தமிழர்கள் எடுப்பார்களா?

இவைகள் எம்மில் இல்லாதவரை தமிழர்களுக்கான நீதி  கிடைக்காது.  அங்காடிகளை யார் கையாளத்தகுதியுடையவர்களோ   அவர்களின் கருத்துக்களே உலக அரங்கில் எடுபடும்.

கண்ணகி காலத்திலும் மனநீதிச் சோழன் காலத்திலும் உலகமமில்லை.2000 ஆண்டுகளுக்கு முன்னே

பொருள் இல்லாதோர்க்கு  இவ்வுலகில்லை  என்று திருவள்ளுவர் குறள்மூலம் கருத்துரைத்துள்ளார்.

வல்லரசுகளின்  பொருளாதாரப்  பொம்மலாட்டம்   நடக்குது ஏழைநாடுகளின் சிலமுகங்கள் நூலின்

அசைவுக்கு  நன்கு ஆடுது.
வாக்குக்கேட்டு  போட்டிகளும் சாட்டுக்கு நடக்குது.

இலங்கையில் தமிழர் மூலம் பணம் குவிகின்றது.இதனால் உலகமெங்கும் உழைக்கும் தமிழர்களின்

பணத்தில்  உலகம் குறிவைத்து விட்டது.அன்று சமாதான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

உலகத்தமிழரின் பணம் யாரின் கையில் இருந்து சுழன்றதோ  அதற்கும்  குறிவைத்து 2009 இல் அதை

மாற்றி விட்டார்கள். 

தமக்கு ஏற்ற ஆளைத்தெரிந்து எடுப்பதிலும் சனநாயக முறைக்கு போட்டிக்கு வந்தார்கள். அதில் வெற்றி எடுத்துக்கொடுக்கக் கூடியவர்கள்  நவகுடியேற்றவாதம்  செய்தார்கள் வெற்றி பெறத்தெரிந்த பக்கம் வென்றது. 

அந்தப்பக்கமே இன்று உலகபொருளாதாரம் உயர்ந்து வருகிறது.

ஈழத்தமிழரின் பணத்தைக் கையாளவே வடக்கு கிழக்கில் வங்கிக் கிளைகள் ஆரம்பம்.

மத்தியவங்கி திட்டம் தீட்டியிருப்பதை தற்போதைய கவர்ச்சியான அறிவித்தல் மூலம் தமிழர்நாம்

உணரவேண்டும். எனவே எம்மிடமிருக்கும்   ஒரே பிடி எம்பொருளாதாரம்.இதைக்கையாண்டு கொண்டே மற்றவிடையங்களையும் கையாளவேண்டும்.

இதைவிடுத்து  நிழலும்..  தேர்தல்களும் சாதாரணமானது.  நீண்ட காலத்திட்டமும்  ஏன்

உலகம் போல் மென்   போக்குமில்லையென்றால்  உலகத்தில் தோல்விகளையே சந்திப்போம்.

ஆசியதரப்பு வல்லரசுகளுக்கு தமிழர்தரப்பு நியாயங்கள் தமிழர்தரப்பால்  சிறப்பாகச்செயல்பட்டு

எடுத்துரைக்கப்படும் வரை அயலாரின் வெற்றி நிகழும்....அத்துடன் உலகநாடுகளின் அரசியல் கட்சிகளில் ஈழத்தமிழரின் தாக்கம் ஏற்படவேண்டும்.

தமிழினத்தின் வரலாறு பற்றியும் தமிழ்மொழியின் வரலாறுபற்றியும் எடுத்துரைக்ககூடிய வல்லுனர்களும் ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடவேண்டும்.

சர்வதேச சட்டதுறையில் பாண்டித்தியம் பெற்று அய்.நா. சபை போன்ற உலகநிர்வாகங்களில் தமிழர் ஈடுபடவேண்டும்.எடுத்துக்காட்டாக திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் போன்று..

முருகவேள் ஆசிரியர்

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.