குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

உறங்கும் சாரதியை எழுப்பும் தொழில் நுட்பம் அறிமுகம் !

வாகனங்களைச் செலுத்தும்போது சாரதிகள் உறங்கி விடுவதால் ‘ஸ்மார்ட் கார் சீட்’ ஒன்றை வடிவமைக்கும் முயற்சியில் நொட்டிங்ஹாம் ட்ரென்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இறங்கி யுள்ளனர்.

வாகனத்தை செலுத்துபவர் கவனத்தை இழக்கும்போது, அதாவது உறங்கும்போது, அதை சாரதியின் இதயத்துடிப் பின் முலம் ஆராய்ந்து அறிந்துகொள்ளக்கூடிய சென்சர்களை, நேரடியாக ஓட்டுநரின் ஆசனத்தில் பொருத்துவதற்கான முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த சென்சர்கள், சாரதிகள் உறங்க ஆரம்பித்ததுமே அவரை எச்சரிக்கும். எச்சரிக்கையை அவர் சட்டை செய்யவில்லையானால், வாகனத்தை சுய கட்டுப்பாட்டு முறைக்கோ அல்லது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து ஓரமாக நின்றுவிடும் முறைக்கோ மாற்றிவிடும் வகையில் இந்த சென்சர்கள் காரின் கட்டுப்பாட்டகத்திற்கு கட்டளைகளைப் பிறப்பிக்கும்.

 

இதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துவிட்ட போதும், தொடர்ச்சியாக சாரதியின் இதயத்தின் இயக்கத்தை இந்த சென்சர்கள் உணர்ந்துகொள்வதை உறுதி செய்யவேண்டியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.