குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 18 ம் திகதி புதன் கிழமை .

தொழில்நுட்ப மர்மங்கள், நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறுகள்...

மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு பல தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது அனைவரும் அறிந்ததே. தொழில்நுட்ப வளர்ச்சி எல்லைகளை கடந்து நிற்கும் நிலையில் ஆராய்ச்சியாளர்கள் இன்றும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்காக எண்னற்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர், தினமும் ஏதாவதொரு தொழில்நுட்பம் அறிமமுகமாகின்ற நிலையில் தொழில்நுட்பம் பற்றி உங்களுக்கு தெரியாத சில மர்மங்கள்.

ஈமெயில்

நாள் ஒன்றைக்கு 60 பில்லியன் ஈமெயில்கள் அனுப்பப்படுகின்றன, அவற்றில் 97 சதவீதம் ஸ்பேம் மெயில்கள்

ஸ்பேம்

ஸ்பேம் மூலம் 33 பில்லியன் கிலோவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது

பாதிப்பு

1000 கணினிகளில் 9 கணினிகள் ஸ்பேம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகின்றன

பதில்

ஒவ்வொரு 12 மில்லியன் மெயில்களுக்கு 1 மெயில் வீதம் பதில் அளிக்கப்படுகின்றனது

சமூக வலைதளம்

ட்விட்டரில் மில்லியனுக்கும் அதிகம் பாலோவர்களை வைத்திருப்பவர் ட்வில்லியினர் என்று அழைக்கப்படுவார்

கணினி

தற்போது 1 பில்லியன் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன

தொலைகாட்சி

தற்சமயம் 2 பில்லியன் தொலைகாட்சிகள் பயன்பாட்டில் உள்ளது

முகநூல்

முகநூலில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகள் பதிவு செய்திருக்கின்றனர்

யூட்யூப்

யூட்யூபில் இருக்கும் 20 சதவீத வீடியோக்கள் இசை சம்பந்தப்பட்டது . 24 மணி நேர வீடியோ ஒவ்வொரு நிமிடமும் பதிவு செய்யப்படுகின்றது. வீடியோ மக்கள் 15 பில்லியன் வீடியோக்களை ஒவ்வொரு மாதமும் பார்க்கின்றனர். அமெரிக்காவில் மக்கள் மாதம் 100 வீடியோக்களை பார்க்கின்றனர்

ப்ளிக்கர்

ப்ளிக்கரில் மொத்தம் 5 பில்லியன் புகைப்படங்கள் உள்ளன, முகநூலில் 15 மில்லியன் புகைப்படங்கள் உள்ளன

தொலைபேசி

முதல் தொலைபேசி அழைப்பு 1973 ஆம் ஆண்டு சித்திரை 3 ஆம் தேதி செய்யப்பட்டது.

மோட்டோரோலா

மோட்டோரோலா DynaTAC 8000X மாடல் தான் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட முதல் தொலைபேசி

தொலைபேசி

நாள் ஒன்றைக்கு 3 மில்லியன் தொலைபேசி விற்பனை செய்யப்படுகின்றன, மொத்தம் 4 பில்லியன் தொலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளது

வைரஸ்

முதல் தொலைபேசி வைரஸ் 2004 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது

வீடியோ கேம்

2008 முதல் வீடியோ கேம்கள் மொபைல் டிவிடிக்களை மிஞ்சியது

அமேசான்

அச்சடித்த புத்தகங்களை விட அமேசான் இணைய புத்தகங்களை அதிகம் விற்பனை செய்கின்றது

இணையம்

1.8 பில்லியனுக்கும் அதிகமானோர் இணையத்தை பயன்படுத்துகின்றனர் அவற்றில் 450 மில்லியன் பேருக்கு தான் ஆங்கிலம் தெரிந்திருக்கின்றது.

கூகுள்

கூகுள் ட்ரில்லியன் யுஆர்எல் 2008 ஆம் ஆண்டு பதிவு செய்தது. கூகுள் தேடல் ஒன்றுக்கு 0.2 கிராம் Co2க்களை உற்பத்தி செய்கின்றது. கூகுள் நாள் ஒன்றுக்கு 1 பில்லியன் தேடல்களை எதிர்கொள்கிறது. ஆண்டுக்கு 15 பில்லியன் கிலேவாட் மின்சாரத்தை கூகுள் பயன்படுத்துகின்றது

மின்சாரம்

அமெரிக்காவில் நாள் ஒன்றைக்கு 10.6 மெகாவாட் மின்சாரத்தை வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றது

ஐபிஎம்

2011 ஆம் ஆண்டு ஐபிஎம் 100 ஆண்டுகளை நிறைவவு செய்தது. 1981 ஆம் ஆண்டு ஐபிஎம் 5150 மூலம் கணினி உற்பத்தியை துவங்கியது. ஐபிஎம் 6 பில்லியன் டாலர்களை ஆய்வு பணிகளுக்காக செலவிடுகிறது

மைக்ரோசாப்ட்

முதலில் மைக்ரோ - சாப்ட் என்று துவங்கப்பட்டு 1976 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் என்று மாற்றப்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் ஆண்டு வருமானம் $16,000