குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

காற்றிலிருந்து குடிநீர் தரும் கருவி : பிரான்சு(ஸ்) நிறுவனம் கண்டுப்பிடிப்பு

துபாய்,ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குடிநீருக்கு திண்டாடி வரும் நிலையில் மாற்று ஏற்பாடாக‌ காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில் சூரிய ஒளியில் செயல்படும் புதிய இயந்திரம் ஒன்றை பிரான்சு(ஸ்) நிறுவனம் தயாரித்துள்ளது.

 

மேலும் இந்த இயந்திரம் மூலம் மின்சாரமும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சு(ஸ்) நிறுவனமும் எமிரேட்சு(ஸ்) சுற்று சூழல் அமைப்பும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவியை பயன்படுத்துவதற்கென் பிரத்யோக இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் எமிரேட்சு(ஸ்) சுற்று சூழல் அமைப்பின் தலைவர் மேர் அல் சக்ர் சல் சுவைதி தெரிவித்துள்ளார்.திரத்தின் மூலம் காற்றில் இருக்கும் ஈரப்பதம் அகற்றப்படுகிறது .பிறகு நீராவியானது திரவ வடிவமாக மாறி காற்றிலிருந்து நீராக பிரிகிறது. அந்த நீர் இயந்திரத்திற்குள் இருக்கும் சிறிய டேங்க் மூலமாக சேகரிக்கப்படுகிறது. அதன்பிறகு, இறுதியாக சேகரிக்கப்பட்ட நீர்  இதில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம் ரசாயனம் மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பொறுத்து இந்த இயந்திரம் நாளொன்றுக்கு 1000ம் லிட்டருக்கு மேல் உற்பத்தி செய்யும் என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.