குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மார்கழி(சிலை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சீனாவில் அத்தியாவசிய பணிகளில் பயன்படும் ரோபோக்களுக்கு வரவேற்ப்பு அதிகரித்துள்ளது.

சீனாவில் அத்தியாவசிய பணிகளில் பயன்படும் ரோபோக்களுக்கு வரவேற்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு காளான்கள் போல் ரோபோ தொழிற்சாலைகள் அதிகரித்து உள்ளன.

 

 

இந்த ரோபோக்களை உற்பத்தி பணிகளுக்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படும் என்று தொழிலதிபர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சீனாவில் கடந்த 2009ம் ஆண்டு தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் பணிக்குத் தேவையான திறமையான ஆட்கள் கிடைக்காததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலைகளில் தானியங்கி ரோபோக்களை அறிமுகப்படுத்த சீன அரசு கொள்கை முடிவு எடுத்தது.இதைத் தொடர்ந்து, சீனாவில் ரோபோக்களின் தேவை அதிகரித்து, கடந்த 2013ம் ஆண்டு ஜப்பானில் இருந்து ஏராளமான ரோபோக்கள் சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. இதன்மூலம் தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டன. தொழில் உற்பத்திக்காக கொண்டு வரப்பட்ட ரோபோக்களை மாற்றம் செய்து, வீட்டு உபயோகம் மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்கான ரோபோக்கள் சீனாவிலேயே தயாரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சீனாவின் பல்வேறு பிராந்தியங்களில் காளான்கள் போல் ரோபோ தொழிற்சாலைகள் அதிகரித்தன.இதன்மூலம் சீனாவில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளிநாட்டு ரோபோக்கள் போன்று உள்நாட்டிலேயே தயாராகும் ரோபோக்களை அதிகளவில் வாங்குகின்றனர். இதனால் ரோபோ தொழிற்சாலைகள் பங்கு சந்தையை கைப்பற்ற துவங்கின.ஒவ்வொரு ரோபோ தொழிற்சாலையும் ஆண்டுக்கு 13 ஆயிரம் ரோபோக்களை தயாரிக்கும் அளவுக்கு முன்னேற்றம் காண வேண்டும் என்று சீன அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் சீனாவில் தயாரிக்கப்படும் மற்ற அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியும் விலையும் மிக கடுமையாக சரியும். அந்த பொருட்களுக்கு வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும் குறையும் என்று உற்பத்தியாளர்கள் சீன அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ரோபோ உற்பத்தியில் சீன அரசின் ஒத்துழைப்பு இருந்தாலும், ஒருசில இடங்களில் வெற்றிடங்களாக காணப்படுகின்றன. அவை தீர்க்கப்பட்டு, மிக விரைவில் கவர்ச்சியான முறையில் புதிய ரோபோக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ரோபோ உற்பத்தி நிறுவனத் தலைவர் ஸ்டீபன் சாக் கூறுகிறார்.